Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, November 21, 2020

GOSPEL*_When the Son of man comes in his glory, and all the angels with him, then he will sit on his glorious throne._*A reading from the Holy Gospel according to St Matthew (25:31-46)*

*📖GOSPEL*

_When the Son of man comes in his glory, and all the angels with him, then he will sit on his glorious throne._

*A reading from the Holy Gospel according to St Matthew (25:31-46)*
Jesus said to his disciples, “When the Son of man comes in his glory, and all 
the angels with him, then he will sit on his glorious throne. Before him will 
be gathered all the nations, and he will separate them one from another as a 
shepherd separates the sheep from the goats, and he will place the sheep at 
his right hand, but the goats at the left. Then the King will say to those at his 
right hand, ‘Come, O blessed of my Father, inherit the kingdom prepared for 
you from the foundation of the world; for I was hungry and you gave me food, 
I was thirsty and you gave me drink, I was a stranger and you welcomed me, 
I was naked and you clothed me, I was sick and you visited me, I was in 
prison and you came to me.’ Then the righteous will answer him, ‘Lord, when 
did we see thee hungry and feed thee, or thirsty and give thee drink? And 
when did we see thee a stranger and welcome thee, or naked and clothe 
thee? And when did we see thee sick or in prison and visit thee?’ And the 
King will answer them, ‘Truly I say to you, as you did it to one of the least of 
these my brethren, you did it to me.’ Then he will say to those at his left hand, 
‘Depart from me, you cursed, into the eternal fire prepared for the devil and
his angels; for I was hungry and you gave me no food, I was thirsty and you 
gave me no drink, I was a stranger and you did not welcome me, naked and 
you did not clothe me, sick and in prison and you did not visit me.’ Then they 
also will answer, ‘Lord, when did we see thee hungry or thirsty or a stranger 
or naked or sick or in prison, and did not minister to thee?’ Then he will 
answer them, ‘Truly, I say to you, as you did it not to one of the least of these, 
you did it not to me.’ And they will go away into eternal punishment, but the 
righteous into eternal life.” 

*The Gospel of the Lord*

I believe in God, /...

*A reading from the First Letter of St Paul to the Corinthians (15:20-26, 28)*

*🍂SECOND READING*

_In fact Christ has been raised from the dead, the first fruits of those who have_
*A reading from the First Letter of St Paul to the Corinthians (15:20-26, 28)*

In fact Christ has been raised from the dead, the first fruits of those who have 
fallen asleep. For as by a man came death, by a man has come also the 
resurrection of the dead. For as in Adam all die, so also in Christ shall all be 
made alive. But each in his own order; Christ the first fruits, then at his 
coming those who belong to Christ. Then comes the end, when he delivers 
the kingdom to God the Father after destroying every rule and every 
authority and power. For he must reign until he has put all his enemies under 
his feet. The last enemy to be destroyed is death. When all things are 
subjected to him, then the Son himself will also be subjected to him who put 
all things under him, that God may be everything to everyone.

*The Word of the Lord*
________________

*🌿ACCLAMATION*
Alleluia, alleluia! Blessed is he who comes in the name of the Lord! Blessed 
is the kingdom of our father David! Alleluia! 
(Mk 11:9-10)

PSALM 23*_Response: The Lord is my shepherd; there is nothing I shall want._

_🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟_

*PSALM 23*

_Response: The Lord is my shepherd; there is nothing I shall want._
1. The Lord is my shepherd; there is nothing I shall want. Fresh and green 
are the pastures where he gives me repose. R/
2. Near restful waters he leads me, to revive my drooping spirit. He guides 
me along the right path; he is true to his name. R/
3. You have prepared a banquet for me in the sight of my foes. My head you 
have anointed with oil; my cup is overflowing. R/
4. Surely goodness and kindness shall follow me all the days of my life. In the 
Lord’s own house shall I dwell for ever and ever. R/

CHRIST THE KING*_34th Sunday of the Year 22 Nov. 2020_*FIRST READING*_Behold, I judge between sheep and sheep, rams and he-goats.”_*A reading from the Book of Ezekiel (34:11-12, 15-17)*

*🍂CHRIST THE KING*
_34th Sunday of the Year 22 Nov. 2020_

*FIRST READING*

_Behold, I judge between sheep and sheep, rams and he-goats.”_

*A reading from the Book of Ezekiel (34:11-12, 15-17)*
“Thus says the Lord God: Behold, I myself will search for my sheep, and will 
seek them out. As a shepherd seeks out his flock when some of his sheep 
have been scattered abroad, so will I seek out my sheep; and I will rescue 
them from all places where they have been scattered on a day of clouds and 
thick darkness. I myself will be the shepherd of my sheep, and I will make 
them lie down, says the Lord God. I will seek the lost, and I will bring back 
the strayed, and I will bind up the crippled, and I will strengthen the weak, 
and the fat and the strong I will watch over; I will feed them in justice. As for 
you, my flock, thus says the Lord God: Behold, I judge between sheep and 
sheep, rams and he-goats.” 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்._ *✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46*

*👑நற்செய்தி வாசகம்* 

_மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்._ 

*✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46* 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். 

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார். 

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள். 

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார். 

பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார். 

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். 

அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். 

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.” 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

இரண்டாம் வாசகம்* _இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார்._*திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26, 28*

*👑இரண்டாம் வாசகம்* 

_இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார்._

*திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26, 28* 
சகோதரர் சகோதரிகளே, 

இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். 

எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*
______

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*மாற் 11: 10* 

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்* *திபா 23: 1-2. 3. 5. 6 . (பல்லவி: 1)* _பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை._

*🌿பதிலுரைப் பாடல்* 

*திபா 23: 1-2. 3. 5. 6 . (பல்லவி: 1)* 

_பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை._ 
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். - பல்லவி 

3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். - பல்லவி 

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி 

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இயேசு கிறிஸ்து👑 அனைத்துலக அரசர் பெருவிழா 22/11/2020* *முதல் வாசகம்* _என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்._ *இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17*

*🍃இயேசு கிறிஸ்து👑 அனைத்துலக அரசர் பெருவிழா 22/11/2020* 

*முதல் வாசகம்* 

_என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்._ 

*இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17* 
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். 

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன். எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 

உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*