Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, January 22, 2021

நற்செய்தி வாசகம் இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று இயேசுவின் உறவினர் பேசிக்கொண்டனர். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

23 சனவரி 2021, பொதுக்காலம் 2ஆம் வாரம் - சனி 

நற்செய்தி வாசகம் 

இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று இயேசுவின் உறவினர் பேசிக்கொண்டனர். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) பல்லவி: எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

23 சனவரி 2021, பொதுக்காலம் 2ஆம் வாரம் - சனி 

பதிலுரைப் பாடல் 

திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) 

பல்லவி: எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி 

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி 

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா. 

________

முதல் வாசகம் இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3, 11-14

23 சனவரி 2021, பொதுக்காலம் 2ஆம் வாரம் - சனி 

முதல் வாசகம் 

இயேசு, தம் சொந்த இரத்தத்தைக் கொண்டு, எக்காலத்திற்குமே ஒரே முறையில் தூயகத்திற்குள் நுழைந்தார். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 2-3, 11-14 

சகோதரர் சகோதரிகளே, 
திரு உறைவிடத்தில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு விளக்குத் தண்டும் ஒரு மேசையும் படையல் அப்பங்களும் இருந்தன. இவ்விடத்திற்குத் ‘தூயகம்’ என்பது பெயர். இரண்டாம் திரைக்குப் பின், “திருத்தூயகம்” என்னும் கூடாரம் இருந்தது. 

ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். 

வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

GOSPEL "The people of his home said: He lost his mind" A Reading from the Holy Gospel according to Mark (3, 20-21)

Daily Reading for Saturday January 23, 2021 

📖GOSPEL 

"The people of his home said: He lost his mind" 

A Reading from the Holy Gospel according to Mark (3, 20-21) 
At that time, Jesus came home, where the crowd gathered again, so that it was not even possible to eat. The people of his house, hearing him, came to seize him, for they said, “He has lost his mind. " 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : God rises among the ovations, the Lord, to the bursting of the horn. Psalm 46 (47)

Daily Reading for Saturday January 23, 2021 

RESPONSORIAL 

Respons : God rises among the ovations, the Lord, to the bursting of the horn. 

Psalm 46 (47) 
All peoples, clap your hands,
acclaim God with your cries of joy!
For the Lord is the Most High, the dreadful,
the great King over all the earth. R 

God rises up amidst ovations,
the Lord, with the sound of the horn.
Ring for our God, ring,
ring for our king, ring! R 

For God is the king of the earth:
let your music announce it!
He reigns, God, over the heathen,
God sits on his sacred throne. R 

_______ 

🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! Lord, open our hearts to keep the words of your Son in our minds. Alleluia!```

Daily Reading for Saturday January 23, 2021 FIRST READING "He entered the sanctuary once and for all, shedding his own blood" of the letter to the Hebrews (9, 2-3.11-14)

Daily Reading for Saturday January 23, 2021 

FIRST READING 

"He entered the sanctuary once and for all, shedding his own blood" 

of the letter to the Hebrews (9, 2-3.11-14) 
Brethren, in the sanctuary of the Old Covenant, a tent was set up, the first, where were the seven-branched candlestick and the table with the loaves of the offering; this is what we call the Saint. Behind the second curtain was the tent called the Holy of Holies. Christ has come, high priest of good things to come. Through the larger and more perfect tent, the one which is not the work of human hands and does not belong to this creation, he entered the sanctuary once and for all, shedding not the blood of goats and goats. young bulls, but his own blood. In this way, he obtained a final release. If it is true that a simple sprinkling with the blood of goats and bulls, and the ashes of heifers, sanctifies those who are defiled, making them pure again, the blood of Christ does much more, for Christ, moved by the Eternal Spirit, offered himself to God as a faultless victim; his blood will therefore purify our conscience from acts that lead to death, so that we can worship the living God. 

The Word of the Lord