Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, December 9, 2020

_there has never been anyone greater than John the Baptist;_*🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 11:11-15*

*📖GOSPEL*

_there has never been anyone greater than John the Baptist;_

*🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 11:11-15*
```'In truth I tell you, of all the children born to women, there has never been anyone greater than John the Baptist; yet the least in the kingdom of Heaven is greater than he.  Since John the Baptist came, up to this present time, the kingdom of Heaven has been subjected to violence and the violent are taking it by storm. Because it was towards John that all the prophecies of the prophets and of the Law were leading;  and he, if you will believe me, is the Elijah who was to return. Anyone who has ears should listen!```

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: The Lord is merciful and gracious.__*Psalms 145:1, 9, 10-11, 12-13*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: The Lord is merciful and gracious.__

*Psalms 145:1, 9, 10-11, 12-13*
1 [Hymn of Praise Of David] I shall praise you to the heights, God my King, I shall bless your name for ever and ever. 

9 Yahweh is generous to all, his tenderness embraces all his creatures. 

10 All your creatures shall thank you, Yahweh, and your faithful shall bless you.
11 They shall speak of the glory of your kingship and tell of your might, 

12 making known your mighty deeds to the children of Adam, the glory and majesty of your kingship.
13 Your kingship is a kingship for ever, your reign lasts from age to age. Yahweh is trustworthy in all his words, and upright in all his deeds.
____ 

🌿Before the gospel
  
```Alleluia, alleluia! 
The skies will send victory like snow; Let the clouds rain it down like Maria. Let the earth open its mouth and give the fruit of liberation. Let justice be done with it. Alleluia!```

Daily Reading for Thursday December 10, 2020_*FIRST READING*_Do not be afraid, I shall help you.'_*🕯️A Reading from the Book of Isaiah 41:13-20*

_🍁Daily Reading for Thursday December 10, 2020_

*FIRST READING*

_Do not be afraid, I shall help you.'_

*🕯️A Reading from the Book of Isaiah 41:13-20*
For I, Yahweh, your God, I grasp you by your right hand; I tell you, 'Do not be afraid, I shall help you.' Do not be afraid, Jacob, you worm! You little handful of Israel! I shall help you, declares Yahweh; your redeemer is the Holy One of Israel. Look, I am making you into a threshing-sledge, new, with double teeth; you will thresh and beat the mountains to dust and reduce the hills to straw. You will winnow them and the wind will carry them off, the gale will scatter them; whereas you will rejoice in Yahweh, will glory in the Holy One of Israel.  The oppressed and needy search for water, and there is none, their tongue is parched with thirst. I, Yahweh, shall answer them, I, the God of Israel, shall not abandon them. I shall open up rivers on barren heights and water-holes down in the ravines; I shall turn the desert into a lake and dry ground into springs of water. I shall plant the desert with cedar trees, acacias, myrtles and olives; in the wastelands I shall put cypress trees, plane trees and box trees side by side; so that people may see and know, so that they may all observe and understand that the hand of Yahweh has done this, that the Holy One of Israel has created it. 

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்*திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. + மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

*நற்செய்தி வாசகம்*

திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. 

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15 
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.'' 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 145: 1,9. 10-11. 12-13 பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

பதிலுரைப் பாடல் 

திபா 145: 1,9. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். 
1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி 

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி 

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ய உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும். மண்ணுலகம் வாய் திறந்து விடுதலைக் கனி வழங்கட்டும். அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும். அல்லேலூயா.

முதல் வாசகம் இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20

*🍃10/12/2020, திருவருகை காலம்-இரண்டாம் வாரம், வியாழன்*

முதல் வாசகம் 

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர் 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 41: 13-20 
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப்பிடித்து, அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்'' என்று உன்னிடம் சொல்பவரும் நானே. யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,'' என்கிறார் ஆண்டவர்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர். இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோகும்; புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்; இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்; அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்; பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்; பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்; சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்; பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச் செய்தார் என்றும், இஸ்ரயேலின் தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்துகொள்வர்; ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.