Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, December 19, 2020

GOSPEL*_You have found the grace of God. Behold, thou shalt conceive, and bear a son;_*🕯️A reading from the Holy Gospel according to Luke (1:26-38)*

*📖GOSPEL*

_You have found the grace of God.  Behold, thou shalt conceive, and bear a son;_

*🕯️A reading from the Holy Gospel according to Luke (1:26-38)*
In the sixth month the angel Gabriel was sent from God to a city of Galilee 
named Nazareth, to a virgin betrothed to a man whose name was Joseph, of 
the house of David. And the virgin›s name was Mary. And he came to her and 
said, “Greetings, O favoured one, the Lord is with you!” But she was greatly 
troubled at the saying, and tried to discern what sort of greeting this might 
be. And the angel said to her, “Do not be afraid, Mary, for you have found 
favour with God. And behold, you will conceive in your womb and bear a son, 
and you shall call his name Jesus. He will be great and will be called the Son 
of the Most High. And the Lord God will give to him the throne of his father 
David, and he will reign over the house of Jacob forever, and of his kingdom 
there will be no end.” And Mary said to the angel, “How will this be, since I
am a virgin?” And the angel answered her, “The Holy Spirit will come upon
you, and the power of the Most High will overshadow you; therefore, the 
child to be born will be called holy – the Son of God. And behold, your relative 
Elizabeth in her old age has also conceived a son, and this is the sixth month 
with her who was called barren. For nothing will be impossible with God.” 
And Mary said, “Behold, I am the servant of the Lord; let it be to me according 
to your word.” And the angel departed from her. 

*The Gospel of the Lord*

I believe in God, /....

SECOND READING*_The gospel that was a mystery for a long time has now been revealed._*A reading from the Letter of Saint Paul to the Romans (16:25-27)*

*🍁SECOND READING*

_The gospel that was a mystery for a long time has now been revealed._

*A reading from the Letter of Saint Paul to the Romans (16:25-27)*
Brethren, to him who is able to strengthen you according to my gospel and 
the preaching of Jesus Christ, according to the revelation of the mystery that 
was kept secret for long ages but has now been disclosed and through the 
prophetic writings has been made known to all nations, according to the 
command of the eternal God, to bring about the obedience of faith – to the 
only wise God be glory forever more through Jesus Christ! Amen. 

*The Word of the Lord*

_____ 

*🌿Gospel Acclamation* 

Alleluia. Alleluia. Behold, I am the servant of the Lord; let it be to me 
according to your word. Alleluia. (Lk 1:38)

RESPONSORIAL* PSALM 89 _Response: I will sing forever of your mercies, O Lord._

*🌿RESPONSORIAL* 

PSALM 89 

_Response: I will sing forever of your mercies, O Lord._
1. I will sing forever of your mercies, O LORD; through all ages my mouth will 
proclaim your fidelity. I have declared your mercy is established forever; 
your fidelity stands firm as the heavens. R/
2. “With my chosen one I have made a covenant; I have sworn to David my 
servant: I will establish your descendants forever, and set up your throne 
through all ages.” R/
3. He will call out to me, You are my father, my God, the rock of my salvation.’
R/ 

4. I will keep my faithful love for him always; with him my covenant shall 
last. R/

FIRST READING*_The kingdom of David shall be established before the LORD for ever._*A reading from the Second Book of Samuel (7:1-5, 8b-12, 14a, 16)*

_🌿4TH SUNDAY OF ADVENT 20 December, 2020_ 

*FIRST READING*

_The kingdom of David shall be established before the LORD for ever._

*A reading from the Second Book of Samuel (7:1-5, 8b-12, 14a, 16)*
When King David lived in his house and the LORD had given him rest from 
all his surrounding enemies, the king said to Nathan the prophet, “See now, 
I dwell in a house of cedar, but the ark of God dwells in a tent.” And Nathan 
said to the king, “Go, do all that is in your heart, for the LORD is with you.” 
But that same night the word of the LORD came to Nathan, “Go and tell my 
servant David, ‘Thus says the LORD: would you build me a house to dwell 
in? Thus, says the LORD of hosts, I took you from the pasture, from following 
the sheep, that you should be prince over my people Israel. And I have been 
with you wherever you went and have cut off all your enemies from before 
you. And I will make for you a great name, like the name of the great ones of 
the earth. And I will appoint a place for my people Israel and will plant them, 
so that they may dwell in their own place and be disturbed no more. And 
violent men shall afflict them no more, as formerly, from the time that I 
appointed judges over my people Israel. And I will give you rest from all your
enemies. Moreover, the LORD declares to you that the Lord will make you a 
house. When your days are fulfilled and you lie down with your fathers, I 
will raise up your offspring after you, who shall come from your body, and I 
will establish his kingdom. I will be to him a father, and he shall be to me a 
son. And your house and your kingdom shall be made sure forever before 
me. Your throne shall be established forever.’” 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்* _கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;_*🕯️லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38*

*📖நற்செய்தி வாசகம்* 

_கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;_

*🕯️லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38* 
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். 

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். 

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

இரண்டாம் வாசகம்* _ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது._ *🕯️திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27*

*🍁இரண்டாம் வாசகம்* 

_ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது._ 

*🕯️திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27* 
சகோதரர் சகோதரிகளே, 

இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*லூக் 1: 38* 

_அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்* *திபா 89: 1-2. 3-4. 26,28 . (பல்லவி: 1a)* _🎵பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.🎶_

*🍃பதிலுரைப் பாடல்* 

*திபா 89: 1-2. 3-4. 26,28 . (பல்லவி: 1a)* 

_🎵பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.🎶_ 
1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி 

3 நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி 

26 ‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி 

______

திருவருகைக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு 20 12 2020* *முதல் வாசகம்* _தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்._ *சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16*

*🌿திருவருகைக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு 20 12 2020* 

*முதல் வாசகம்* 

_தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்._ 

*சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16* 
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார். 

அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: 

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். 

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!” 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

_____