Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, January 2, 2021

GOSPEL* We have come to worship the king.👑 A Reading from the Holy Gospel according to Matthew 2:1-12

*📖GOSPEL* 

We have come to worship the king.👑 

A Reading from the Holy Gospel according to Matthew 2:1-12 
After Jesus had been born at Bethlehem in Judaea during the reign of King Herod, suddenly some wise men came to Jerusalem from the east asking, 'Where is the infant king of the Jews? We saw his star as it rose and have come to do him homage.' When King Herod heard this he was perturbed, and so was the whole of Jerusalem. He called together all the chief priests and the scribes of the people, and enquired of them where the Christ was to be born. They told him, 'At Bethlehem in Judaea, for this is what the prophet wrote: And you, Bethlehem, in the land of Judah, you are by no means the least among the leaders of Judah, for from you will come a leader who will shepherd my people Israel.'
Then Herod summoned the wise men to see him privately. He asked them the exact date on which the star had appeared and sent them on to Bethlehem with the words, 'Go and find out all about the child, and when you have found him, let me know, so that I too may go and do him homage.'  Having listened to what the king had to say, they set out. And suddenly the star they had seen rising went forward and halted over the place where the child was. The sight of the star filled them with delight, and going into the house they saw the child with his mother Mary, and falling to their knees they did him homage. Then, opening their treasures, they offered him gifts of gold and frankincense and myrrh. But they were given a warning in a dream not to go back to Herod, and returned to their own country by a different way. 

*The Gospel of the Lord* 

I believe in God, /.... 

____________

SECOND READING The other race is now released as co-owner through Christ Jesus. Ephesians 3:2-3a, 5-6

SECOND READING 

The other race is now released as co-owner through Christ Jesus. 

Ephesians 3:2-3a, 5-6 
You have surely heard the way in which God entrusted me with the grace he gave me for your sake;
he made known to me by a revelation the mystery I have just described briefly-
This mystery, as it is now revealed in the Spirit to his holy apostles and prophets, was unknown to humanity in previous generations:
that the gentiles now have the same inheritance and form the same Body and enjoy the same promise in Christ Jesus through the gospel. 

___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! We saw the rising of the Lord; We have come to worship him. Alleluia!```

RESPONSORIAL* Respons : Lord, all races will serve you. Psalms 72:1-2, 7-8, 10-11, 12-13

*🍁RESPONSORIAL* 

Respons : Lord, all races will serve you. 

Psalms 72:1-2, 7-8, 10-11, 12-13 
[Of Solomon] God, endow the king with your own fair judgement, the son of the king with your own saving justice,
that he may rule your people with justice, and your poor with fair judgement. 

In his days uprightness shall flourish, and peace in plenty till the moon is no more.
His empire shall stretch from sea to sea, from the river to the limits of the earth. 

the kings of Tarshish and the islands will pay him tribute. The kings of Sheba and Saba will offer gifts;
all kings will do him homage, all nations become his servants. 

For he rescues the needy who calls to him, and the poor who has no one to help.
He has pity on the weak and the needy, and saves the needy from death. 

_____

FIRST READING* The glory of the Lord is upon you. A Reading from the Book of Isaiah 60:1-6

Daily Reading for Sunday January 3, 2021 

*FIRST READING* 

The glory of the Lord is upon you. 

A Reading from the Book of Isaiah 60:1-6 
Arise, shine out, for your light has come, and the glory of Yahweh has risen on you. Look! though night still covers the earth and darkness the peoples, on you Yahweh is rising and over you his glory can be seen. The nations will come to your light and kings to your dawning brightness. Lift up your eyes and look around: all are assembling and coming towards you, your sons coming from far away and your daughters being carried on the hip. At this sight you will grow radiant, your heart will throb and dilate, since the riches of the sea will flow to you, the wealth of the nations come to you;
camels in throngs will fill your streets, the young camels of Midian and Ephah; everyone in Saba will come, bringing gold and incense and proclaiming Yahweh's praises. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம் 👑அரசரை வணங்க வந்திருக்கிறோம். + மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

நற்செய்தி வாசகம் 

👑அரசரை வணங்க வந்திருக்கிறோம். 

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12 
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். 

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். 

ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள். 

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இரண்டாம் வாசகம் பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3, 5-6

இரண்டாம் வாசகம் 

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது. 

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3, 5-6 
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

_____ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.,

பதிலுரைப் பாடல் 

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்., 
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்;
அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக!
உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. -பல்லவி 

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். -பல்லவி 

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;
சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்.
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். -பல்லவி 

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்;
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி
____

03/01/2021 ஆண்டவரின் திருக்காட்சி மூவரசர் திருவிழா 👑_ முதல் வாசகம்

_🌿03/01/2021  ஆண்டவரின் திருக்காட்சி மூவரசர் திருவிழா 👑_ 

முதல் வாசகம் 

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 
எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். 

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.