Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, August 3, 2023

ஆகஸ்ட் 4 : நற்செய்தி வாசகம்இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

ஆகஸ்ட் 4  :  நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 4 : பதிலுரைப் பாடல்திபா 81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.

ஆகஸ்ட் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
2
இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைத்து இனிமையாய்ப் பாடுங்கள்.
3
அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள். - பல்லவி

4
இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.
5
அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். - பல்லவி

9
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10a
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

“நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

ஆகஸ்ட் 4 : முதல் வாசகம்சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38

ஆகஸ்ட் 4 :  முதல் வாசகம்

சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38
ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.

ஓய்வு நாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி, நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 4th : GospelA prophet is only despised in his own countryA reading from the Holy Gospel according to St.Matthew 13:54-58

August 4th :  Gospel

A prophet is only despised in his own country

A reading from the Holy Gospel according to St.Matthew 13:54-58 
Coming to his home town, Jesus taught the people in their synagogue in such a way that they were astonished and said, ‘Where did the man get this wisdom and these miraculous powers? This is the carpenter’s son, surely? Is not his mother the woman called Mary, and his brothers James and Joseph and Simon and Jude? His sisters, too, are they not all here with us? So where did the man get it all?’ And they would not accept him. But Jesus said to them, ‘A prophet is only despised in his own country and in his own house’, and he did not work many miracles there because of their lack of faith.

The Word of the Lord.

August 4th : Responsorial PsalmPsalm 80(81):3-6,10-11

August 4th :  Responsorial Psalm

Psalm 80(81):3-6,10-11 

Ring out your joy to God our strength.

Raise a song and sound the timbrel,
  the sweet-sounding harp and the lute;
blow the trumpet at the new moon,
  when the moon is full, on our feast.
Ring out your joy to God our strength.

For this is Israel’s law,
  a command of the God of Jacob.
He imposed it as a rule on Joseph,
  when he went out against the land of Egypt.

Ring out your joy to God our strength.

Let there be no foreign god among you,
  no worship of an alien god.
I am the Lord your God,
  who brought you from the land of Egypt.
  Open wide your mouth and I will fill it.

Ring out your joy to God our strength.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!
Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

August 4th : First readingThe law of the festivals of the LordLeviticus 23:1,4-11,15-16,27,34-37

August 4th :  First reading

The law of the festivals of the Lord

Leviticus 23:1,4-11,15-16,27,34-37 
The Lord spoke to Moses. He said:
  ‘These are the Lord’s solemn festivals, the sacred assemblies to which you are to summon the sons of Israel on the appointed day.
  ‘The fourteenth day of the first month, between the two evenings, is the Passover of the Lord; and the fifteenth day of the same month is the feast of Unleavened Bread for the Lord. For seven days you shall eat bread without leaven. On the first day you are to hold a sacred assembly; you must do no heavy work. For seven days you shall offer a burnt offering to the Lord. The seventh day is to be a day of sacred assembly; you must do no work.’
  The Lord spoke to Moses. He said:
  ‘Speak to the sons of Israel and say to them:
  ‘“When you enter the land that I give you, and gather in the harvest there, you must bring the first sheaf of your harvest to the priest, and he is to present it to the Lord with the gesture of offering, so that you may be acceptable. The priest shall make this offering on the day after the sabbath.
  ‘“From the day after the sabbath, the day on which you bring the sheaf of offering, you are to count seven full weeks. You are to count fifty days, to the day after the seventh sabbath, and then you are to offer the Lord a new oblation.
  ‘“The tenth day of the seventh month shall be the Day of Atonement. You are to hold a sacred assembly. You must fast, and you must offer a burnt offering to the Lord.
  ‘“The fifteenth day of this seventh month shall be the feast of Tabernacles for the Lord, lasting seven days. The first day is a day of sacred assembly; you must do no heavy work. For seven days you must offer a burnt offering to the Lord. On the eighth day you are to hold a sacred assembly, you must offer a burnt offering to the Lord. It is a day of solemn meeting; you must do no heavy work.
  ‘“These are the solemn festivals of the Lord to which you are to summon the children of Israel, sacred assemblies for the purpose of offering burnt offerings, holocausts, oblations, sacrifices and libations to the Lord, according to the ritual of each day.”’

The Word of the Lord.