Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, October 9, 2020

October 10th : Gospel 'Happy the womb that bore you and the breasts you sucked!'A Reading from the Holy Gospel according to St.Luke 11:27-28

October 10th : Gospel 

'Happy the womb that bore you and the breasts you sucked!'

A Reading from the Holy Gospel according to St.Luke 11:27-28 
As Jesus was speaking, a woman in the crowd raised her voice and said, ‘Happy the womb that bore you and the breasts you sucked!’ But he replied, ‘Still happier those who hear the word of God and keep it!’

The Gospel of the Lord.

October 10th : Responsorial PsalmPsalm 104(105):2-7 The Lord remembers his covenant for ever.or Alleluia!

October 10th : Responsorial Psalm

Psalm 104(105):2-7 

The Lord remembers his covenant for ever.
or Alleluia!
O sing to the Lord, sing his praise;
  tell all his wonderful works!
Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Consider the Lord and his strength;
  constantly seek his face.
Remember the wonders he has done,
  his miracles, the judgements he spoke.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or Alleluia!

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!
If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

October 10th : First ReadingThere are no more distinctions: all are one in Christ Jesus.A Reading from the Letter of St.Paul to the Galatians 3:22-29

October 10th : First Reading

There are no more distinctions: all are one in Christ Jesus.

A Reading from the Letter of St.Paul to the Galatians 3:22-29 
Scripture makes no exceptions when it says that sin is master everywhere. In this way the promise can only be given through faith in Jesus Christ and can only be given to those who have this faith.
  Before faith came, we were allowed no freedom by the Law; we were being looked after till faith was revealed. The Law was to be our guardian until the Christ came and we could be justified by faith. Now that that time has come we are no longer under that guardian, and you are, all of you, sons of God through faith in Christ Jesus. All baptised in Christ, you have all clothed yourselves in Christ, and there are no more distinctions between Jew and Greek, slave and free, male and female, but all of you are one in Christ Jesus. Merely by belonging to Christ you are the posterity of Abraham, the heirs he was promised.

The Word of the Lord.

அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்டோபர் 10 :  நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில்

இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 10 : பதிலுரைப் பாடல்திபா 105: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அக்டோபர் 10 : பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.
2.அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3. அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி

4.ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5.அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி

6.அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7.அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

அக்டோபர் 10 : முதல் வாசகம்கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29

அக்டோபர் 10 : முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29
சகோதரர் சகோதரிகளே,

இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.

நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது. இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை. ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.

அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 10 பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் சனிக்கிழமை