Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, October 24, 2020

October 25th : GospelThe commandments of loveA Reading from the Holy Gospel according to St.Matthew 22:34-40

October 25th : Gospel

The commandments of love

A Reading from the Holy Gospel according to St.Matthew 22:34-40 
When the Pharisees heard that Jesus had silenced the Sadducees they got together and, to disconcert him, one of them put a question, ‘Master, which is the greatest commandment of the Law?’ Jesus said, ‘You must love the Lord your God with all your heart, with all your soul, and with all your mind. This is the greatest and the first commandment. The second resembles it: You must love your neighbour as yourself. On these two commandments hang the whole Law, and the Prophets also.’

The Gospel of the Lord.

October 25th : Second ReadingYou broke with idolatry and became servants of God; you are now waiting for his Son.A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:5-10

October 25th : Second Reading

You broke with idolatry and became servants of God; you are now waiting for his Son.

A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:5-10 
You observed the sort of life we lived when we were with you, which was for your instruction, and you were led to become imitators of us, and of the Lord; and it was with the joy of the Holy Spirit that you took to the gospel, in spite of the great opposition all round you. This has made you the great example to all believers in Macedonia and Achaia since it was from you that the word of the Lord started to spread – and not only throughout Macedonia and Achaia, for the news of your faith in God has spread everywhere. We do not need to tell other people about it: other people tell us how we started the work among you, how you broke with idolatry when you were converted to God and became servants of the real, living God; and how you are now waiting for Jesus, his Son, whom he raised from the dead, to come from heaven to save us from the retribution which is coming.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!
Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

October 25th : Responsorial PsalmPsalm 17(18):2-4,47,51 I love you, Lord, my strength.

October 25th :   Responsorial Psalm

Psalm 17(18):2-4,47,51 

I love you, Lord, my strength.
I love you, Lord, my strength,
  my rock, my fortress, my saviour.
My God is the rock where I take refuge;
  my shield, my mighty help, my stronghold.
The Lord is worthy of all praise,
  when I call I am saved from my foes.

I love you, Lord, my strength.

Long life to the Lord, my rock!
  Praised be the God who saves me,
He has given great victories to his king
 and shown his love for his anointed.

I love you, Lord, my strength.

October 25th : First Reading If you are harsh with the widow and orphan, my anger will flare against you.A Reading from the Book of Exodus 22:20-26

October 25th : First Reading 

If you are harsh with the widow and orphan, my anger will flare against you.

A Reading from the Book of Exodus 22:20-26 
The Lord said to Moses, ‘Tell the sons of Israel this:
  ‘“You must not molest the stranger or oppress him, for you lived as strangers in the land of Egypt. You must not be harsh with the widow, or with the orphan; if you are harsh with them, they will surely cry out to me, and be sure I shall hear their cry; my anger will flare and I shall kill you with the sword, your own wives will be widows, your own children orphans.
  ‘“If you lend money to any of my people, to any poor man among you, you must not play the usurer with him: you must not demand interest from him.
  ‘“If you take another’s cloak as a pledge, you must give it back to him before sunset. It is all the covering he has; it is the cloak he wraps his body in; what else would he sleep in? If he cries to me, I will listen, for I am full of pity.”’

The Word of the Lord.

அக்டோபர் 25 : நற்செய்தி வாசகம்உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்டோபர் 25 : நற்செய்தி வாசகம்

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40
அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 25 : இரண்டாம் வாசகம்நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5c-10

அக்டோபர் 25 : இரண்டாம் வாசகம்

நீங்கள் கடவுளிடம் திரும்பி, அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5c-10
சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள்.

எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 25 : பதிலுரைப் பாடல்திபா 18: 1-2a. 2bc-3,46,50 . (பல்லவி: 1)பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

அக்டோபர் 25 : பதிலுரைப் பாடல்

திபா 18: 1-2a. 2bc-3,46,50 . (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
1.என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
2a.ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி

2bc.என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3.போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். - பல்லவி

46.ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
50.தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி

அக்டோபர் 25 : முதல் வாசகம்விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

அக்டோபர் 25 :  முதல் வாசகம்

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

ஆண்டவர் கூறியது:
அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் முப்பதாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 25)