Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, November 22, 2021

நவம்பர் 23 : நற்செய்தி வாசகம்கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

நவம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு

நவம்பர் 23 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 34. 35-36. 37-38 (பல்லவி: 34b)பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.

நவம்பர் 23 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 34. 35-36. 37-38 (பல்லவி: 34b)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
34
ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

35
வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
36
ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

37
வானத்திற்கு மேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து;
38
ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா! 

இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நவம்பர் 23 : முதல் வாசகம்விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45

நவம்பர் 23 :  முதல் வாசகம்

விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45
அந்நாள்களில்

தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: “அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம்மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறு பகுதி களிமண்ணாலும் ஆனவை.

நீர் அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களிமண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது. அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.

அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது.

உமக்குப்பின் உமது அரசை விட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும்.

மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.

அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 23rd : GospelThe destruction of the Temple foretold.A Reading from the Holy Gospel according to St. Luke 21: 5-11.

November 23rd : Gospel

The destruction of the Temple foretold.

A Reading from the Holy Gospel according to St. Luke 21: 5-11. 
When some were talking about the Temple, remarking how it was adorned with fine stonework and votive offerings, Jesus said, ‘All these things you are staring at now – the time will come when not a single stone will be left on another: everything will be destroyed.’ And they put to him this question: ‘Master,’ they said ‘when will this happen, then, and what sign will there be that this is about to take place?’
  ‘Take care not to be deceived,’ he said ‘because many will come using my name and saying, “I am he” and, “The time is near at hand.” Refuse to join them. And when you hear of wars and revolutions, do not be frightened, for this is something that must happen but the end is not so soon.’ Then he said to them, ‘Nation will fight against nation, and kingdom against kingdom. There will be great earthquakes and plagues and famines here and there; there will be fearful sights and great signs from heaven.’

The Word of the Lord.

November 23rd : Responsorial Psalm Daniel 3:57-61 All things the Lord has made, bless the Lord.

November 23rd : Responsorial Psalm 

Daniel 3:57-61 

All things the Lord has made, bless the Lord.
  Give glory and eternal praise to him!

Angels of the Lord! all bless the Lord.

  Give glory and eternal praise to him!

Heavens! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Waters above the heavens! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Powers of the Lord! all bless the Lord.

  Give glory and eternal praise to him!

Gospel Acclamation Lk21:28

Alleluia, alleluia!
Stand erect, hold your heads high,
because your liberation is near at hand.
Alleluia!

November 23rd : First Reading Daniel interprets Nebuchadnezzar's dream.A Reading from the Book of Daniel 2: 31-45.

November 23rd : First Reading 

Daniel interprets Nebuchadnezzar's dream.

A Reading from the Book of  Daniel 2: 31-45. 
Daniel said to Nebuchadnezzar, ‘You have had a vision, O king; this is what you saw: a statue, a great statue of extreme brightness, stood before you, terrible to see. The head of this statue was of fine gold, its chest and arms were of silver, its belly and thighs of bronze, its legs of iron, its feet part iron, part earthenware. While you were gazing, a stone broke away, untouched by any hand, and struck the statue, struck its feet of iron and earthenware and shattered them. And then, iron and earthenware, bronze, silver, gold all broke into small pieces as fine as chaff on the threshing-floor in summer. The wind blew them away, leaving not a trace behind. And the stone that had struck the statue grew into a great mountain, filling the whole earth. This was the dream; now we will explain to the king what it means.
  ‘You, O king, king of kings, to whom the God of heaven has given sovereignty, power, strength and glory – the sons of men, the beasts of the field, the birds of heaven, wherever they live, he has entrusted to your rule, making you king of them all – you are the golden head. And after you another kingdom will rise, not so great as you, and then a third, of bronze, which will rule the whole world. There will be a fourth kingdom, hard as iron, as iron that shatters and crushes all. Like iron that breaks everything to pieces, it will crush and break all the earlier kingdoms. The feet you saw, part earthenware, part iron, are a kingdom which will be split in two, but which will retain something of the strength of iron, just as you saw the iron and the clay of the earthenware mixed together. The feet were part iron, part earthenware: the kingdom will be partly strong and partly weak. And just as you saw the iron and the clay of the earthenware mixed together, so the two will be mixed together in the seed of man; but they will not hold together any more than iron will blend with earthenware. In the time of these kings the God of heaven will set up a kingdom which shall never be destroyed, and this kingdom will not pass into the hands of another race: it will shatter and absorb all the previous kingdoms, and itself last for ever – just as you saw the stone untouched by hand break from the mountain and shatter iron, bronze, earthenware, silver and gold. The great God has shown the king what is to take place. The dream is true, the interpretation exact.’

The Word of the Lord.