Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, June 12, 2023

ஜூன் 13 : நற்செய்தி வாசகம்நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

ஜூன் 13 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!

அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 13 : பதிலுரைப் பாடல்திபா 119: 129-130. 131-132. 133,135 (பல்லவி: 135a)பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!

ஜூன் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 129-130. 131-132. 133,135 (பல்லவி: 135a)

பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்!
129
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
130
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி

131
வாயை ‘ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.
132
உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்! - பல்லவி

133
உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ள விடாதேயும்!
135
உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! 

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

ஜூன் 13 : முதல் வாசகம்இயேசு கிறிஸ்து ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22

ஜூன் 13 :  முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-22
சகோதரர் சகோதரிகளே,

நான் ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’ வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’ எனச் சொல்லுகிறோம்.

கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 13th : Gospel Your light must shine in the sight of menA Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

June 13th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 
Jesus said to his disciples: ‘You are the salt of the earth. But if salt becomes tasteless, what can make it salty again? It is good for nothing, and can only be thrown out to be trampled underfoot by men.
  ‘You are the light of the world. A city built on a hill-top cannot be hidden. No one lights a lamp to put it under a tub; they put it on the lamp-stand where it shines for everyone in the house. In the same way your light must shine in the sight of men, so that, seeing your good works, they may give the praise to your Father in heaven.’

The Word of the Lord.

June 13th : Responsorial PsalmPsalm 118(119):129-133,135 Let your face shine on your servant.

June 13th :  Responsorial Psalm

Psalm 118(119):129-133,135 

Let your face shine on your servant.
Your will is wonderful indeed;
  therefore I obey it.
The unfolding of your word gives light
  and teaches the simple.

Let your face shine on your servant.

I open my mouth and I sigh
  as I yearn for your commands.
Turn and show me your mercy;
  show justice to your friends.

Let your face shine on your servant.

Let my steps be guided by your promise;
  let no evil rule me.
Let your face shine on your servant
  and teach me your decrees.

Let your face shine on your servant.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars
because you are offering it the word of life.
Alleluia!

June 13th : First Reading God himself has anointed us and given us his SpiritA Reading from the Second letter of St.Paul to the Corinthians 1:18-22

June 13th :  First Reading 

God himself has anointed us and given us his Spirit

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 1:18-22
I swear by God’s truth, there is no Yes and No about what we say to you. The Son of God, the Christ Jesus that we proclaimed among you – I mean Silvanus and Timothy and I – was never Yes and No: with him it was always Yes, and however many the promises God made, the Yes to them all is in him. That is why it is ‘through him’ that we answer Amen to the praise of God. Remember it is God himself who assures us all, and you, of our standing in Christ, and has anointed us, marking us with his seal and giving us the pledge, the Spirit, that we carry in our hearts.

The Word of the Lord.