Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, May 19, 2023

மே 20 : நற்செய்தி வாசகம்தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

மே 20 :  நற்செய்தி வாசகம்

தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ‘உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 20 : பதிலுரைப் பாடல்திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.அல்லது: அல்லேலூயா.

மே 20 :  பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7a)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே.

அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

9
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 28
அல்லேலூயா, அல்லேலூயா! 

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.

மே 20 : முதல் வாசகம்‘இயேசுவே மெசியா’ என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

மே 20 :  முதல் வாசகம்

‘இயேசுவே மெசியா’ என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28
பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர்.

அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, ‘இயேசுவே மெசியா’ என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 20th : Gospel The Father loves you for loving me and believing that I came from GodA Reading from the Holy Gospel according to St.John 16: 23-28

May 20th :  Gospel 

The Father loves you for loving me and believing that I came from God

A Reading from the Holy Gospel according to St.John 16: 23-28 
Jesus said to his disciples:
‘I tell you most solemnly,
anything you ask for from the Father he will grant in my name.
Until now you have not asked for anything in my name.
Ask and you will receive, and so your joy will be complete.
I have been telling you all this in metaphors,
the hour is coming when I shall no longer speak to you in metaphors;
but tell you about the Father in plain words.
When that day comes you will ask in my name;
and I do not say that I shall pray to the Father for you,
because the Father himself loves you for loving me
and believing that I came from God.
I came from the Father and have come into the world
and now I leave the world to go to the Father.’

The Word of the Lord.

May 20th : Responsorial PsalmPsalm 46(47):2-3,8-10 God is king of all the earth.orAlleluia!

May 20th :  Responsorial Psalm

Psalm 46(47):2-3,8-10 

God is king of all the earth.
or
Alleluia!
All peoples, clap your hands,
  cry to God with shouts of joy!
For the Lord, the Most High, we must fear,
  great king over all the earth.

God is king of all the earth.
or
Alleluia!

God is king of all the earth,
  sing praise with all your skill.
God is king over the nations;
  God reigns on his holy throne.

God is king of all the earth.
or
Alleluia!

The princes of the people are assembled
  with the people of Abraham’s God.
The rulers of the earth belong to God,
  to God who reigns over all.

God is king of all the earth.
or
Alleluia!

Gospel Acclamation Jn14:16

Alleluia, alleluia!

I shall ask the Father,
and he will give you another Advocate
to be with you for ever.
Alleluia!

May 20th : First Reading Apollos demonstrated from the scriptures that Jesus was the ChristA Reading from the Acts of Apostles 18:23-28

May 20th :  First Reading 

Apollos demonstrated from the scriptures that Jesus was the Christ

A Reading from the Acts of Apostles 18:23-28 
Paul came down to Antioch, where he spent a short time before continuing his journey through the Galatian country and then through Phrygia, encouraging all the followers.
  An Alexandrian Jew named Apollos now arrived in Ephesus. He was an eloquent man, with a sound knowledge of the scriptures, and yet, though he had been given instruction in the Way of the Lord and preached with great spiritual earnestness and was accurate in all the details he taught about Jesus, he had only experienced the baptism of John. When Priscilla and Aquila heard him speak boldly in the synagogue, they took an interest in him and gave him further instruction about the Way.
  When Apollos thought of crossing over to Achaia, the brothers encouraged him and wrote asking the disciples to welcome him. When he arrived there he was able by God’s grace to help the believers considerably by the energetic way he refuted the Jews in public and demonstrated from the scriptures that Jesus was the Christ.

The Word of the Lord.