Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, August 16, 2023

ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1

ஆகஸ்ட் 17 :  நற்செய்தி வாசகம்

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21- 19: 1
அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, “பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 17 : பதிலுரைப் பாடல்திபா 114: 1-2. 3-4. 5-6பல்லவி: அல்லேலூயா.

ஆகஸ்ட் 17 :  பதிலுரைப் பாடல்

திபா 114: 1-2. 3-4. 5-6
பல்லவி: அல்லேலூயா.
1
எகிப்து நாட்டை விட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,
2
யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித் தளம் ஆனது. - பல்லவி

3
செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது.
4
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. - பல்லவி

5
கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?
6
மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள் போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 135
அல்லேலூயா, அல்லேலூயா! 

உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

August 17th : Gospel'How often must I forgive my brother?'A reading from the Holy Gospel according to St.Matthew 18:21-19:1

August 17th :   Gospel

'How often must I forgive my brother?'

A reading from the Holy Gospel according to St.Matthew 18:21-19:1 
Peter went up to Jesus and said, ‘Lord, how often must I forgive my brother if he wrongs me? As often as seven times?’ Jesus answered, ‘Not seven, I tell you, but seventy-seven times.
  ‘And so the kingdom of heaven may be compared to a king who decided to settle his accounts with his servants. When the reckoning began, they brought him a man who owed ten thousand talents; but he had no means of paying, so his master gave orders that he should be sold, together with his wife and children and all his possessions, to meet the debt. At this, the servant threw himself down at his master’s feet. “Give me time” he said “and I will pay the whole sum.” And the servant’s master felt so sorry for him that he let him go and cancelled the debt. Now as this servant went out, he happened to meet a fellow servant who owed him one hundred denarii; and he seized him by the throat and began to throttle him. “Pay what you owe me” he said. His fellow servant fell at his feet and implored him, saying, “Give me time and I will pay you.” But the other would not agree; on the contrary, he had him thrown into prison till he should pay the debt. His fellow servants were deeply distressed when they saw what had happened, and they went to their master and reported the whole affair to him. Then the master sent for him. “You wicked servant,” he said “I cancelled all that debt of yours when you appealed to me. Were you not bound, then, to have pity on your fellow servant just as I had pity on you?” And in his anger the master handed him over to the torturers till he should pay all his debt. And that is how my heavenly Father will deal with you unless you each forgive your brother from your heart.’
  Jesus had now finished what he wanted to say, and he left Galilee and came into the part of Judaea which is on the far side of the Jordan.

The Word of the Lord.

August 17th : Responsorial PsalmPsalm 113A(114):1-6 Alleluia!

August 17th :  Responsorial Psalm

Psalm 113A(114):1-6 

Alleluia!
When Israel came forth from Egypt,
  Jacob’s sons from an alien people,
Judah became the Lord’s temple,
  Israel became his kingdom.

Alleluia!

The sea fled at the sight:
  the Jordan turned back on its course,
the mountains leapt like rams
  and the hills like yearling sheep.

Alleluia!

Why was it, sea, that you fled,
  that you turned back, Jordan, on your course?
Mountains, that you leapt like rams,
  hills, like yearling sheep?

Alleluia!

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!

Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

August 17th : First readingThe Israelites cross the Jordan dry-shodA reading from the book of Joshua 3:7-11,13-17

August 17th :  First reading

The Israelites cross the Jordan dry-shod

A reading from the book of Joshua 3:7-11,13-17 
The Lord said to Joshua, ‘This very day I will begin to make you a great man in the eyes of all Israel, to let them be sure that I am going to be with you even as I was with Moses. As for you, give this order to the priests carrying the ark of the covenant: “When you have reached the brink of the waters of the Jordan, you are to stand still in the Jordan itself”.’ Then Joshua said to the Israelites, ‘Come closer and hear the words of the Lord your God.’ Joshua said, ‘By this you shall know that a living God is with you and without a doubt will expel the Canaanite, the Hittite, the Hivite, the Perizzite, the Girgashite, the Amorite and the Jebusite. Look, the ark of the Lord, the Lord of the whole earth, is about to cross the Jordan at your head. As soon as the priests with the ark of the Lord, the Lord of the whole earth, have set their feet in the waters of the Jordan, the upper waters of the Jordan flowing down will be stopped in their course and stand still in one mass.’
  Accordingly, when the people struck camp to cross the Jordan, the priests carried the ark of the covenant in front of the people. As soon as the bearers of the ark reached the Jordan and the feet of the priests who carried it touched the waters (the Jordan overflows the whole length of its banks throughout the harvest season) the upper waters stood still and made one heap over a wide space – from Adam to the fortress of Zarethan – while those flowing down to the Sea of the Arabah, that is, the Salt Sea, stopped running altogether. The people crossed opposite Jericho. The priests who carried the ark of the covenant of the Lord stood still on dry ground in mid-Jordan, and all Israel continued to cross dry-shod till the whole nation had finished its crossing of the river.

The Word of the Lord.

ஆகஸ்ட் 16 : நற்செய்தி வாசகம்அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

ஆகஸ்ட் 16 :  நற்செய்தி வாசகம்

அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.