Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, January 15, 2023

சனவரி 16 : நற்செய்தி வாசகம்மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

சனவரி 16 : நற்செய்தி வாசகம்

மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22
யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 16 : பதிலுரைப் பாடல்திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.'

சனவரி 16 :  பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a)

பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.'
1
ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். - பல்லவி

2
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! - பல்லவி

3
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். - பல்லவி

4
‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

சனவரி 16 : முதல் வாசகம்இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-10

சனவரி 16 :  முதல் வாசகம்

இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-10
சகோதரர் சகோதரிகளே,

தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப் படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவதுபோல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.

அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, ‘தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். “மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு” என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

January 16th : Gospel'Why do your disciples not fast?'A Reading from the Holy Gospel according to St.Mark 2:18-22

January 16th :  Gospel

'Why do your disciples not fast?'

A Reading from the Holy Gospel according to St.Mark 2:18-22 
One day when John’s disciples and the Pharisees were fasting, some people came to Jesus and said to him, ‘Why is it that John’s disciples and the disciples of the Pharisees fast, but your disciples do not?’ Jesus replied, ‘Surely the bridegroom’s attendants would never think of fasting while the bridegroom is still with them? As long as they have the bridegroom with them, they could not think of fasting. But the time will come for the bridegroom to be taken away from them, and then, on that day, they will fast. No one sews a piece of unshrunken cloth on an old cloak; if he does, the patch pulls away from it, the new from the old, and the tear gets worse. And nobody puts new wine into old wineskins; if he does, the wine will burst the skins, and the wine is lost and the skins too. No! New wine, fresh skins!’

The Word of the Lord.

January 16th : Responsorial PsalmPsalm 109(110):1-4 You are a priest for ever, a priest like Melchizedek of old.

January 16th :  Responsorial Psalm

Psalm 109(110):1-4 

You are a priest for ever, a priest like Melchizedek of old.
The Lord’s revelation to my Master:
  ‘Sit on my right:
  your foes I will put beneath your feet.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord will wield from Zion
  your sceptre of power:
  rule in the midst of all your foes.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

A prince from the day of your birth
  on the holy mountains;
  from the womb before the dawn I begot you.

You are a priest for ever, a priest like Melchizedek of old.

The Lord has sworn an oath he will not change.
  ‘You are a priest for ever,
  a priest like Melchizedek of old.’

You are a priest for ever, a priest like Melchizedek of old.

Gospel Acclamation cf.1Th2:13

Alleluia, alleluia!

Accept God’s message for what it really is:
God’s message, and not some human thinking.
Alleluia!

January 16th : First Reading Although he was Son, he learned to obey through sufferingHebrews 5:1-10

January 16th :  First Reading 

Although he was Son, he learned to obey through suffering

Hebrews 5:1-10 
Every high priest has been taken out of mankind and is appointed to act for men in their relations with God, to offer gifts and sacrifices for sins; and so he can sympathise with those who are ignorant or uncertain because he too lives in the limitations of weakness. That is why he has to make sin offerings for himself as well as for the people. No one takes this honour on himself, but each one is called by God, as Aaron was. Nor did Christ give himself the glory of becoming high priest, but he had it from the one who said to him: You are my son, today I have become your father, and in another text: You are a priest of the order of Melchizedek, and for ever. During his life on earth, he offered up prayer and entreaty, aloud and in silent tears, to the one who had the power to save him out of death, and he submitted so humbly that his prayer was heard. Although he was Son, he learnt to obey through suffering; but having been made perfect, he became for all who obey him the source of eternal salvation and was acclaimed by God with the title of high priest of the order of Melchizedek.

The Word of the Lord.