Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, August 29, 2020

August 30th : Gospel'Get behind me, Satan!'

August 30th :  Gospel

'Get behind me, Satan!'
A Reading from the Holy Gospel according to St.Matthew 16:21-27 

Jesus began to make it clear to his disciples that he was destined to go to Jerusalem and suffer grievously at the hands of the elders and chief priests and scribes, to be put to death and to be raised up on the third day. Then, taking him aside, Peter started to remonstrate with him. ‘Heaven preserve you, Lord;’ he said ‘this must not happen to you.’ But he turned and said to Peter, ‘Get behind me, Satan! You are an obstacle in my path, because the way you think is not God’s way but man’s.’
  Then Jesus said to his disciples, ‘If anyone wants to be a follower of mine, let him renounce himself and take up his cross and follow me. For anyone who wants to save his life will lose it; but anyone who loses his life for my sake will find it. What, then, will a man gain if he wins the whole world and ruins his life? Or what has a man to offer in exchange for his life?
  ‘For the Son of Man is going to come in the glory of his Father with his angels, and, when he does, he will reward each one according to his behaviour.’

The Gospel of the Lord.

August 30th : Second Reading

August 30th :  Second Reading 

Offer your bodies as a living sacrifice.
A Reading from the Letter of St.Paul to the Romans 12:1-2 

Think of God’s mercy, my brothers, and worship him, I beg you, in a way that is worthy of thinking beings, by offering your living bodies as a holy sacrifice, truly pleasing to God. Do not model yourselves on the behaviour of the world around you, but let your behaviour change, modelled by your new mind. This is the only way to discover the will of God and know what is good, what it is that God wants, what is the perfect thing to do.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

August 30th : Responsorial PsalmPsalm 62(63):2-6,8-9

August 30th :  Responsorial Psalm

Psalm 62(63):2-6,8-9 
For you my soul is thirsting, O Lord my God.

O God, you are my God, for you I long;
  for you my soul is thirsting.
My body pines for you
  like a dry, weary land without water.

For you my soul is thirsting, O Lord my God.

So I gaze on you in the sanctuary
  to see your strength and your glory.
For your love is better than life,
  my lips will speak your praise.

For you my soul is thirsting, O Lord my God.

So I will bless you all my life,
  in your name I will lift up my hands.
My soul shall be filled as with a banquet,
  my mouth shall praise you with joy.

For you my soul is thirsting, O Lord my God.

For you have been my help;
  in the shadow of your wings I rejoice.
My soul clings to you;
  your right hand holds me fast.

For you my soul is thirsting, O Lord my God.

August 30th : First reading The word of the Lord has meant insult for me.

August 30th : First reading 

The word of the Lord has meant insult for me.
A Reading from the Book of Jeremiah 20:7-9.

You have seduced me, Lord, and I have let myself be seduced;
you have overpowered me: you were the stronger.
I am a daily laughing-stock,
everybody’s butt.
Each time I speak the word, I have to howl
and proclaim: ‘Violence and ruin!’
The word of the Lord has meant for me
insult, derision, all day long.
I used to say, ‘I will not think about him,
I will not speak in his name any more.’
Then there seemed to be a fire burning in my heart,
imprisoned in my bones.
The effort to restrain it wearied me,
I could not bear it.

The Word of the Lord.

ஆகஸ்ட் 30 : நற்செய்தி வாசகம்என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.

ஆகஸ்ட் 30 :  நற்செய்தி வாசகம்

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, என்னைப் பின்பற்றட்டும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27
அக்காலத்தில்

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார்.

பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

ஆகஸ்ட் 30 : இரண்டாம் வாசகம்தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.

ஆகஸ்ட் 30 :  இரண்டாம் வாசகம்

தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 18 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

ஆகஸ்ட் 30 : பதிலுரைப் பாடல்திபா 63: 1. 2-3. 4-5. 7-8 . (பல்லவி: 1b)

ஆகஸ்ட் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8 . (பல்லவி: 1b)
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1.கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2.உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3.ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4.என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5.அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

7.ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
8.நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. - பல்லவி

ஆகஸ்ட் 30 ஞாயிறு : முதல் வாசகம்ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

ஆகஸ்ட் 30 :  முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

“அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.