Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, November 10, 2020

November 11th : Gospel No-one has come back to praise God, only this foreignerA Reading from the Holy Gospel according to St.Luke 17:11-19.

November 11th : Gospel 

No-one has come back to praise God, only this foreigner

A Reading from the Holy Gospel according to St.Luke 17:11-19. 
On the way to Jerusalem Jesus travelled along the border between Samaria and Galilee. As he entered one of the villages, ten lepers came to meet him. They stood some way off and called to him, ‘Jesus! Master! Take pity on us.’ When he saw them he said, ‘Go and show yourselves to the priests.’ Now as they were going away they were cleansed. Finding himself cured, one of them turned back praising God at the top of his voice and threw himself at the feet of Jesus and thanked him. The man was a Samaritan. This made Jesus say, ‘Were not all ten made clean? The other nine, where are they? It seems that no one has come back to give praise to God, except this foreigner.’ And he said to the man, ‘Stand up and go on your way. Your faith has saved you.’

The Gospel of the Lord.

November 11th : Responsorial Psalm Psalm 22(23) The Lord is my shepherd: there is nothing I shall want.

November 11th :  Responsorial Psalm 

Psalm 22(23) 

The Lord is my shepherd: there is nothing I shall want.
The Lord is my shepherd;
  there is nothing I shall want.
Fresh and green are the pastures
  where he gives me repose.
Near restful waters he leads me,
  to revive my drooping spirit.

The Lord is my shepherd: there is nothing I shall want.

He guides me along the right path;
  he is true to his name.
If I should walk in the valley of darkness
  no evil would I fear.
You are there with your crook and your staff;
  with these you give me comfort.

The Lord is my shepherd: there is nothing I shall want.

You have prepared a banquet for me
  in the sight of my foes.
My head you have anointed with oil;
  my cup is overflowing.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Surely goodness and kindness shall follow me
  all the days of my life.
In the Lord’s own house shall I dwell
  for ever and ever.

The Lord is my shepherd: there is nothing I shall want.

Gospel Acclamation cf.2Th2:14

Alleluia, alleluia!

Through the Good News God called us
to share the glory of our Lord Jesus Christ.
Alleluia!

November 11th : First Reading It was purely by his own compassion that God saved usA Reading from the Letter of St.Paul to Titus 3:1-7.

November 11th : First Reading 

It was purely by his own compassion that God saved us

A Reading from the Letter of St.Paul to Titus 3:1-7. 
Remind your people that it is their duty to be obedient to the officials and representatives of the government; to be ready to do good at every opportunity; not to go slandering other people or picking quarrels, but to be courteous and always polite to all kinds of people. Remember, there was a time when we too were ignorant, disobedient and misled and enslaved by different passions and luxuries; we lived then in wickedness and ill-will, hating each other and hateful ourselves.
  But when the kindness and love of God our saviour for mankind were revealed, it was not because he was concerned with any righteous actions we might have done ourselves; it was for no reason except his own compassion that he saved us, by means of the cleansing water of rebirth and by renewing us with the Holy Spirit which he has so generously poured over us through Jesus Christ our saviour. He did this so that we should be justified by his grace, to become heirs looking forward to inheriting eternal life.

The Word of the Lord.

நவம்பர் 11 : நற்செய்தி வாசகம்கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

நவம்பர் 11 :  நற்செய்தி வாசகம்

கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.

ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 11 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

நவம்பர் 11 : பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 . (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் 
குறையில்லை.
1.ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2.பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b.தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4.மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5.என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6.உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 தெச 5: 18

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.

நவம்பர் 11 : முதல் வாசகம்தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார்.திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7

நவம்பர் 11 :  முதல் வாசகம்

தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7
அன்பிற்குரியவரே,

நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்; அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எவரையும் பழித்துரைக்கலாகாது; சண்டையிடலாகாது; கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும். ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.