Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, October 2, 2023

அக்டோபர் 3 : நற்செய்தி வாசகம்இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56

அக்டோபர் 3 :  நற்செய்தி வாசகம்

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 3 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.

அக்டோபர் 3 :   பதிலுரைப் பாடல்

திபா 87: 1-3. 4-5. 6-7 (பல்லவி: செக் 8: 23)

பல்லவி: கடவுள் நம்மோடு இருக்கின்றார்.
1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45
அல்லேலூயா, அல்லேலூயா! 

மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

அக்டோபர் 3 : முதல் வாசகம்வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23

அக்டோபர் 3 :  முதல் வாசகம்

வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 8: 20-23
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களுள் பல நகர்களில் குடியிருப்போரும் கூட வருவார்கள். ஒரு நகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப் பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 3rd : Gospel Jesus sets out for JerusalemA reading from the Holy Gospel according to St.Luke 9: 51-56

October 3rd :  Gospel 

Jesus sets out for Jerusalem

A reading from the Holy Gospel according to St.Luke 9: 51-56 
As the time drew near for him to be taken up to heaven, Jesus resolutely took the road for Jerusalem and sent messengers ahead of him. These set out, and they went into a Samaritan village to make preparations for him, but the people would not receive him because he was making for Jerusalem. Seeing this, the disciples James and John said, ‘Lord, do you want us to call down fire from heaven to burn them up?’ But he turned and rebuked them, and they went off to another village.

The Word of the Lord.

October 3rd : Responsorial Psalm Psalm 86(87) God is with us.

October 3rd :  Responsorial Psalm 

Psalm 86(87) 

God is with us.
On the holy mountain is his city
  cherished by the Lord.
The Lord prefers the gates of Zion
  to all Jacob’s dwellings.
Of you are told glorious things,
  O city of God!

God is with us.

‘Babylon and Egypt I will count
  among those who know me;
Philistia, Tyre, Ethiopia,
  these will be her children
and Zion shall be called “Mother”
  for all shall be her children.’

God is with us.

It is he, the Lord Most High,
  who gives each his place.
In his register of peoples he writes:
  ‘These are her children,’
and while they dance they will sing:
  ‘In you all find their home.’

God is with us.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!

Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

October 3rd : First readingMany peoples and great nations will come to seek the Lord of Hosts.A reading from the book of Zechariah 8: 20-23

October 3rd :  First reading

Many peoples and great nations will come to seek the Lord of Hosts.

A reading from the book of Zechariah 8: 20-23 
The Lord of Hosts says this:
  ‘There will be other peoples yet, and citizens of great cities. And the inhabitants of one city will go to the next and say, “Come, let us go and entreat the favour of the Lord, and seek the Lord of Hosts; I am going myself.” And many peoples and great nations will come to seek the Lord of Hosts in Jerusalem and to entreat the favour of the Lord.’
  The Lord of Hosts says this:
  ‘In those days, ten men of nations of every language will take a Jew by the sleeve and say, “We want to go with you, since we have learnt that God is with you.”’

The Word of the Lord.