Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, December 12, 2024

December 13th : Gospel They heed neither John nor the Son of Man A reading from the Holy Gospel according to St.Matthew 11:16-19

 December 13th :  Gospel

They heed neither John nor the Son of Man

A reading from the Holy Gospel according to St.Matthew 11:16-19 

Jesus spoke to the crowds: ‘What description can I find for this generation? It is like children shouting to each other as they sit in the market place:

“We played the pipes for you,

and you wouldn’t dance;

we sang dirges,

and you wouldn’t be mourners.”

‘For John came, neither eating nor drinking, and they say, “He is possessed.” The Son of Man came, eating and drinking, and they say, “Look, a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.” Yet wisdom has been proved right by her actions.’

The Word of the Lord.

December 13th : Responsorial Psalm Psalm 1:1-4,6 Anyone who follows you, O Lord, will have the light of life.

 December 13th :  Responsorial Psalm

Psalm 1:1-4,6 

Anyone who follows you, O Lord, will have the light of life.

Happy indeed is the man

  who follows not the counsel of the wicked;

nor lingers in the way of sinners

  nor sits in the company of scorners,

but whose delight is the law of the Lord

  and who ponders his law day and night.

Anyone who follows you, O Lord, will have the light of life.

He is like a tree that is planted

  beside the flowing waters,

that yields its fruit in due season

  and whose leaves shall never fade;

  and all that he does shall prosper.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Not so are the wicked, not so!

For they like winnowed chaff

  shall be driven away by the wind:

for the Lord guards the way of the just

  but the way of the wicked leads to doom.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

See, the king, the Lord of the world, will come.

He will free us from the yoke of our bondage.

Alleluia!


December 13th : First reading If you had been alert to my commandments, your happiness would have been like a river A reading from the book of Isaiah 48: 17-19

 December 13th :  First reading 

If you had been alert to my commandments, your happiness would have been like a river

A reading from the book of Isaiah 48: 17-19 

Thus says the Lord, your redeemer, the Holy One of Israel:

I, the Lord, your God, teach you what is good for you,

I lead you in the way that you must go.

If only you had been alert to my commandments,

your happiness would have been like a river,

your integrity like the waves of the sea.

Your children would have been numbered like the sand,

your descendants as many as its grains.

Never would your name have been cut off or blotted out before me.

The Word of the Lord.

டிசம்பர் 13 : நற்செய்தி வாசகம் மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

 டிசம்பர் 13 :  நற்செய்தி வாசகம்

மக்கள் திருமுழுக்கு யோவானுக்கும் செவிசாய்க்கவில்லை, மானிடமகனுக்கும் செவிசாய்க்கவில்லை.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19


அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 13 : பதிலுரைப் பாடல் திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12) பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

 டிசம்பர் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: யோவா 8: 12)


பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2

ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3

அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4

பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.

6

நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

டிசம்பர் 13 : முதல் வாசகம் என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

 டிசம்பர் 13 :  முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19


இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.