Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, February 10, 2025

பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13

பிப்ரவரி 11 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது ‘கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 11 : பதிலுரைப் பாடல்திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது

பிப்ரவரி 11 :  பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது!
3
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
4
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி

5
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6
உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

7
ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
8
வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 4a, 36a
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரே, நீர் உம் நியமங்களைத் தந்தீர்; உம் ஒழுங்கு முறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும். அல்லேலூயா.

பிப்ரவரி 11 : முதல் வாசகம்நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20- 2: 4a

பிப்ரவரி 11 :  முதல் வாசகம்

நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 20- 2: 4a
தொடக்கத்தில் கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள்திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லா விதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.

அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 11th : Gospel You get round the commandment of God to preserve your own traditionA Reading from the Holy Gospel according to St.Mark 7: 1-13

February 11th :  Gospel 

You get round the commandment of God to preserve your own tradition

A Reading from the Holy Gospel according to St.Mark 7: 1-13 
The Pharisees and some of the scribes who had come from Jerusalem gathered round Jesus, and they noticed that some of his disciples were eating with unclean hands, that is, without washing them. For the Pharisees, and the Jews in general, follow the tradition of the elders and never eat without washing their arms as far as the elbow; and on returning from the market place they never eat without first sprinkling themselves. There are also many other observances which have been handed down to them concerning the washing of cups and pots and bronze dishes. So these Pharisees and scribes asked him, ‘Why do your disciples not respect the tradition of the elders but eat their food with unclean hands?’ He answered, ‘It was of you hypocrites that Isaiah so rightly prophesied in this passage of scripture:
This people honours me only with lip-service,
while their hearts are far from me.
The worship they offer me is worthless,
the doctrines they teach are only human regulations.
You put aside the commandment of God to cling to human traditions.’ And he said to them, ‘How ingeniously you get round the commandment of God in order to preserve your own tradition! For Moses said: Do your duty to your father and your mother, and, Anyone who curses father or mother must be put to death. But you say, “If a man says to his father or mother: Anything I have that I might have used to help you is Corban (that is, dedicated to God), then he is forbidden from that moment to do anything for his father or mother.” In this way you make God’s word null and void for the sake of your tradition which you have handed down. And you do many other things like this.’

The Word of the Lord.

February 11th : Responsorial Psalm Psalm 8:4-9 How great is your name, O Lord our God, through all the earth!

February 11th :  Responsorial Psalm 

Psalm 8:4-9 

How great is your name, O Lord our God,
 through all the earth!
When I see the heavens, the work of your hands,
  the moon and the stars which you arranged,
what is man that you should keep him in mind,
  mortal man that you care for him?

How great is your name, O Lord our God, through all the earth!

Yet you have made him little less than a god;
  with glory and honour you crowned him,
gave him power over the works of your hand,
  put all things under his feet.

How great is your name, O Lord our God, through all the earth!

All of them, sheep and cattle,
  yes, even the savage beasts,
birds of the air, and fish
  that make their way through the waters.

How great is your name, O Lord our God, through all the earth!

Gospel Acclamation Ps118:24

Alleluia, alleluia!
Train me, Lord, to observe your law,
to keep it with my heart.
Alleluia!

February 11th : First Reading'Let us make man in our own image'A Reading from the Book of Genesis 1:20-2:4

February 11th :  First Reading

'Let us make man in our own image'

A Reading from the Book of Genesis 1:20-2:4 
God said, ‘Let the waters teem with living creatures, and let birds fly above the earth within the vault of heaven.’ And so it was. God created great sea-serpents and every kind of living creature with which the waters teem, and every kind of winged creature. God saw that it was good. God blessed them, saying, ‘Be fruitful, multiply, and fill the waters of the seas; and let the birds multiply upon the earth.’ Evening came and morning came: the fifth day.
  God said, ‘Let the earth produce every kind of living creature: cattle, reptiles, and every kind of wild beast.’ And so it was. God made every kind of wild beast, every kind of cattle, and every kind of land reptile. God saw that it was good.
  God said, ‘Let us make man in our own image, in the likeness of ourselves, and let them be masters of the fish of the sea, the birds of heaven, the cattle, all the wild beasts and all the reptiles that crawl upon the earth.’
God created man in the image of himself,
in the image of God he created him,
male and female he created them.
God blessed them, saying to them, ‘Be fruitful, multiply, fill the earth and conquer it. Be masters of the fish of the sea, the birds of heaven and all living animals on the earth.’ God said, ‘See, I give you all the seed-bearing plants that are upon the whole earth, and all the trees with seed-bearing fruit; this shall be your food. To all wild beasts, all birds of heaven and all living reptiles on the earth I give all the foliage of plants for food.’ And so it was. God saw all he had made, and indeed it was very good. Evening came and morning came: the sixth day.
  Thus heaven and earth were completed with all their array. On the seventh day God completed the work he had been doing. He rested on the seventh day after all the work he had been doing. God blessed the seventh day and made it holy, because on that day he had rested after all his work of creating.
  Such were the origins of heaven and earth when they were created.

The Word of the Lord.

February 10th : Gospel All those who touched him were curedA Reading from the Holy Gospel according to St.Mark 6:53-56

February 10th :  Gospel 

All those who touched him were cured

A Reading from the Holy Gospel according to St.Mark 6:53-56 

Having made the crossing, Jesus and his disciples came to land at Gennesaret and tied up. No sooner had they stepped out of the boat than people recognised him, and started hurrying all through the countryside and brought the sick on stretchers to wherever they heard he was. And wherever he went, to village, or town, or farm, they laid down the sick in the open spaces, begging him to let them touch even the fringe of his cloak. And all those who touched him were cured.

The Word of the Lord.

February 10th : Responsorial PsalmPsalm 103(104):1-2,5-6,10,12,24,35

February 10th :  Responsorial Psalm

Psalm 103(104):1-2,5-6,10,12,24,35 

May the Lord rejoice in his works!

Bless the Lord, my soul!
  Lord God, how great you are,
clothed in majesty and glory,
  wrapped in light as in a robe!

May the Lord rejoice in his works!

You founded the earth on its base,
  to stand firm from age to age.
You wrapped it with the ocean like a cloak:
  the waters stood higher than the mountains.

May the Lord rejoice in his works!

You make springs gush forth in the valleys;
  they flow in between the hills.
On their banks dwell the birds of heaven;
  from the branches they sing their song.

May the Lord rejoice in his works!

How many are your works, O Lord!
  In wisdom you have made them all.
  The earth is full of your riches.
Bless the Lord, my soul!

May the Lord rejoice in his works!

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

February 10th : First Reading God saw that it was goodA Reading from the Book of Genesis 1:1-19

February 10th :  First Reading 

God saw that it was good

A Reading from the Book of Genesis 1:1-19 

In the beginning God created the heavens and the earth. Now the earth was a formless void, there was darkness over the deep, and God’s spirit hovered over the water.
  God said, ‘Let there be light’, and there was light. God saw that light was good, and God divided light from darkness. God called light ‘day’, and darkness he called ‘night.’ Evening came and morning came: the first day.
  God said, ‘Let there be a vault in the waters to divide the waters in two.’ And so it was. God made the vault, and it divided the waters above the vault from the waters under the vault. God called the vault ‘heaven.’ Evening came and morning came: the second day.
  God said, ‘Let the waters under heaven come together into a single mass, and let dry land appear.’ And so it was. God called the dry land ‘earth’ and the mass of waters ‘seas’, and God saw that it was good.
  God said, ‘Let the earth produce vegetation: seed-bearing plants, and fruit trees bearing fruit with their seed inside, on the earth.’ And so it was. The earth produced vegetation: plants bearing seed in their several kinds, and trees bearing fruit with their seed inside in their several kinds. God saw that it was good. Evening came and morning came: the third day.
  God said, ‘Let there be lights in the vault of heaven to divide day from night, and let them indicate festivals, days and years. Let them be lights in the vault of heaven to shine on the earth.’ And so it was. God made the two great lights: the greater light to govern the day, the smaller light to govern the night, and the stars. God set them in the vault of heaven to shine on the earth, to govern the day and the night and to divide light from darkness. God saw that it was good. Evening came and morning came: the fourth day.

The Word of the Lord.

பிப்ரவரி 10 : நற்செய்தி வாசகம்இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

பிப்ரவரி 10 :   நற்செய்தி வாசகம்

இயேசுவைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 53-56

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 10 : பதிலுரைப் பாடல்திபா 104: 1-2. 5-6. 10-12. 24,35c (பல்லவி: 31b)பல்லவி: ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!

பிப்ரவரி 10 :  பதிலுரைப் பாடல்

திபா 104: 1-2. 5-6. 10-12. 24,35c (பல்லவி: 31b)

பல்லவி: ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். - பல்லவி

5
நீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.
6
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. - பல்லவி

10
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்.
12
நீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. - பல்லவி

24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
35c
என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

பிப்ரவரி 10 : முதல் வாசகம்கடவுள் உரைத்தார்: அஃது அவ்வாறே ஆயிற்று.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1-19

பிப்ரவரி 10 :  முதல் வாசகம்

கடவுள் உரைத்தார்: அஃது அவ்வாறே ஆயிற்று.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1-19

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளி தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளி தர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.