Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, March 3, 2025

மார்ச் 4 : நற்செய்தி வாசகம் இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

 மார்ச் 4 :  நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31


அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார்.

அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு. 

மார்ச் 4 : பதிலுரைப் பாடல் திபா 50: 5-6. 7-8. 14, 23 (பல்லவி: 23b) பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

 மார்ச் 4 : பதிலுரைப் பாடல்

திபா 50: 5-6. 7-8. 14, 23 (பல்லவி: 23b)


பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

5 `பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்று கூறப்போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மார்ச் 4 : முதல் வாசகம் கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12

 மார்ச் 4 :  முதல் வாசகம்

கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12


திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.

அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும்.

தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.

ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது.

நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.

கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு. உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு.

உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர்.

ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 4th : Gospel Whoever has left everything for the sake of the gospel will be repaid A Reading from the Holy Gospel according to St.Mark 10:28-31

 March 4th :  Gospel 

Whoever has left everything for the sake of the gospel will be repaid

A Reading from the Holy Gospel according to St.Mark 10:28-31 


At that time Peter began to tell Jesus, ‘What about us? We have left everything and followed you.’ Jesus said, ‘I tell you solemnly, there is no one who has left house, brothers, sisters, father, children or land for my sake and for the sake of the gospel who will not be repaid a hundred times over, houses, brothers, sisters, mothers, children and land – not without persecutions – now in this present time and, in the world to come, eternal life.

  ‘Many who are first will be last, and the last first.’

The Gospel of the Lord.

March 4th : Responsorial Psalm Psalm 49(50):5-8,14,23

 March 4th :  Responsorial Psalm

Psalm 49(50):5-8,14,23 


I will show God’s salvation to the upright.

‘Summon before me my people

  who made covenant with me by sacrifice.’

The heavens proclaim his justice,

  for he, God, is the judge.

I will show God’s salvation to the upright.

‘Listen, my people, I will speak;

  Israel, I will testify against you,

for I am God, your God.

  I accuse you, lay the charge before you.

I find no fault with your sacrifices,

  your offerings are always before me.

I will show God’s salvation to the upright.

Pay your sacrifice of thanksgiving to God

  and render him your votive offerings.

A sacrifice of thanksgiving honours me

  and I will show God’s salvation to the upright.’

I will show God’s salvation to the upright.

Gospel Acclamation Ph2:15-16

Alleluia, alleluia!

You will shine in the world like bright stars

because you are offering it the word of life.

Alleluia!


March 4th : First Reading Give to the Most High as he has given to you A reading from the book of Ecclesiasticus 35:2-15

 March 4th : First Reading

Give to the Most High as he has given to you
A reading from the book of Ecclesiasticus 35:2-15

A man multiplies offerings by keeping the Law; he offers communion sacrifices by following the commandments.By showing gratitude he makes an offering of fine flour, by giving alms he offers a sacrifice of praise. Withdraw from wickedness and the Lord will be pleased, withdraw from injustice and you make atonement. Do not appear empty-handed in the Lord’s presence; for all these things are due under the commandment.
A virtuous man’s offering graces the altar, and its savour rises before the Most High. A virtuous man’s sacrifice is acceptable,
its memorial will not be forgotten. Honour the Lord with generosity, do not stint the first-fruits you bring. Add a smiling face to all your gifts, and be cheerful as you dedicate your tithes. Give to the Most High as he has given to you,
generously as your means can afford; for the Lord is a good rewarder, he will reward you seven times over. Offer him no bribe, he will not accept it, do not put your faith in an unvirtuous sacrifice; since the Lord is a judge who is no respecter of personages.
The word of the Lord.