Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, May 17, 2024

மே 18 : நற்செய்தி வாசகம்யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25

மே 18 :  நற்செய்தி வாசகம்

யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25
அக்காலத்தில்

பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?” என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.

ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்றுதான் கூறினார்.

இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 18 : பதிலுரைப் பாடல்திபா 11: 4. 5,7 (பல்லவி: 7b)பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.

மே 18 :  பதிலுரைப் பாடல்

திபா 11: 4. 5,7 (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.
அல்லது: அல்லேலூயா.

4
ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. - பல்லவி

5
ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
7
ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 7, 13
அல்லேலூயா, அல்லேலூயா!

 துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 18 : முதல் வாசகம்பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20, 30-31

மே 18 :  முதல் வாசகம்

பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20, 30-31
உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.

யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், “சீசரே என்னை விசாரிக்கவேண்டும்” என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்” என்றார்.

பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 18th : Gospel This disciple is the one who vouches for these things and we know that his testimony is trueA Reading from the Holy Gospel according to St.John 21: 20-25

May 18th :  Gospel 

This disciple is the one who vouches for these things and we know that his testimony is true

A Reading from the Holy Gospel according to St.John 21: 20-25
Peter turned and saw the disciple Jesus loved following them – the one who had leaned on his breast at the supper and had said to him, ‘Lord, who is it that will betray you?’ Seeing him, Peter said to Jesus, ‘What about him, Lord?’ Jesus answered, ‘If I want him to stay behind till I come, what does it matter to you? You are to follow me.’ The rumour then went out among the brothers that this disciple would not die. Yet Jesus had not said to Peter, ‘He will not die’, but, ‘If I want him to stay behind till I come.’
  This disciple is the one who vouches for these things and has written them down, and we know that his testimony is true.
  There were many other things that Jesus did; if all were written down, the world itself, I suppose, would not hold all the books that would have to be written.

The Word of the Lord.

May 18th : Responsorial PsalmPsalm 10(11):4-5,7 The upright shall see your face, O Lord.orAlleluia

May 18th :  Responsorial Psalm

Psalm 10(11):4-5,7 

The upright shall see your face, O Lord.
or
Alleluia!
The Lord is in his holy temple,
  the Lord, whose throne is in heaven.
His eyes look down on the world;
  his gaze tests mortal men.

The upright shall see your face, O Lord.
or
Alleluia!

The Lord tests the just and the wicked;
  the lover of violence he hates.
The Lord is just and loves justice;
  the upright shall see his face.

The upright shall see your face, O Lord.
or
Alleluia!

Gospel Acclamation Col3:1

Alleluia, alleluia!

Since you have been brought back to true life with Christ,
you must look for the things that are in heaven, where Christ is,
sitting at God’s right hand.
Alleluia!

May 18th : First ReadingIn Rome, Paul proclaimed the kingdom of God without hindrance from anyoneA Reading from the Acts of Apostles 28: 16-20, 30-31

May 18th :  First Reading

In Rome, Paul proclaimed the kingdom of God without hindrance from anyone

A Reading from the Acts of Apostles  28: 16-20, 30-31 
On our arrival in Rome Paul was allowed to stay in lodgings of his own with the soldier who guarded him.
  After three days he called together the leading Jews. When they had assembled, he said to them, ‘Brothers, although I have done nothing against our people or the customs of our ancestors, I was arrested in Jerusalem and handed over to the Romans. They examined me and would have set me free, since they found me guilty of nothing involving the death penalty; but the Jews lodged an objection, and I was forced to appeal to Caesar, not that I had any accusation to make against my own nation. That is why I have asked to see you and talk to you, for it is on account of the hope of Israel that I wear this chain.’
  Paul spent the whole of the two years in his own rented lodging. He welcomed all who came to visit him, proclaiming the kingdom of God and teaching the truth about the Lord Jesus Christ with complete freedom and without hindrance from anyone.

The Word of the Lord.