Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, June 9, 2024

ஜூன் 10 : நற்செய்தி வாசகம்ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

ஜூன் 10  : நற்செய்தி வாசகம்

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு

ஜூன் 10 : பதிலுரைப் பாடல்திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 2)பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆ

ஜூன் 10  :  பதிலுரைப் பாடல்

திபா 121: 1-2. 3-4. 5-6. 7-8 . (பல்லவி: 2)

பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் எனக்கு உதவிடுவார்.

1.மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2.விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். - பல்லவி

3.அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
4.இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை. - பல்லவி

5.ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப் பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6.பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. - பல்லவி

7.ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
8.நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 12a

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா

ஜூன் 10 : முதல் வாசகம்இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6

ஜூன் 10 :  முதல் வாசகம்

இஸ்ரயேலின் கடவுளை எலியா வழிபடுகிறார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 1-6
அந்நாள்களில்

கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார்.

பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது: “இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”. அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 10th : Responsorial PsalmPsalm 120(121) Our help is in the name of the Lord, who made heaven and earth.

June 10th : Responsorial Psalm

Psalm 120(121) 

Our help is in the name of the Lord, who made heaven and earth.
I lift up my eyes to the mountains;
  from where shall come my help?
My help shall come from the Lord
  who made heaven and earth.

Our help is in the name of the Lord, who made heaven and earth.

May he never allow you to stumble!
  Let him sleep not, your guard.
No, he sleeps not nor slumbers,
  Israel’s guard.

Our help is in the name of the Lord, who made heaven and earth.

The Lord is your guard and your shade;
  at your right side he stands.
By day the sun shall not smite you
  nor the moon in the night.

Our help is in the name of the Lord, who made heaven and earth.

The Lord will guard you from evil,
  he will guard your soul.
The Lord will guard your going and coming
  both now and for ever.

Our help is in the name of the Lord, who made heaven and earth.

Gospel Acclamation cf.2Th2:14

Alleluia, alleluia!
Through the Good News God called us
to share the glory of our Lord Jesus Christ.
Alleluia!

June 10th : Gospel How happy are the poor in spirit.A Reading from the Holy Gospel according to St.Matthew 5:1-12

June 10th : Gospel 

How happy are the poor in spirit.

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:1-12 
Seeing the crowds, Jesus went up the hill. There he sat down and was joined by his disciples. Then he began to speak. This is what he taught them:
‘How happy are the poor in spirit;
  theirs is the kingdom of heaven.
Happy the gentle:
  they shall have the earth for their heritage.
Happy those who mourn:
  they shall be comforted.
Happy those who hunger and thirst for what is right:
  they shall be satisfied.
Happy the merciful:
  they shall have mercy shown them.
Happy the pure in heart:
  they shall see God.
Happy the peacemakers:
  they shall be called sons of God.
Happy those who are persecuted in the cause of right:
  theirs is the kingdom of heaven.
‘Happy are you when people abuse you and persecute you and speak all kinds of calumny against you on my account. Rejoice and be glad, for your reward will be great in heaven: this is how they persecuted the prophets before you.’

The Gospel of the Lord.

June 10th : First Reading The Lord sends Elijah into the wilderness.A Reading from the First Book of Kings 17:1-6.

June 10th : First Reading 

The Lord sends Elijah into the wilderness.

A Reading from the First Book of Kings 17:1-6.
Elijah the Tishbite, of Tishbe in Gilead, said to Ahab, ‘As the Lord lives, the God of Israel whom I serve, there shall be neither dew nor rain these years except at my order.’
  The word of the Lord came to him, ‘Go away from here, go eastwards, and hide yourself in the wadi Cherith which lies east of Jordan. You can drink from the stream, and I have ordered the ravens to bring you food there.’ He did as the Lord had said; he went and stayed in the wadi Cherith which lies east of Jordan. The ravens brought him bread in the morning and meat in the evening, and he quenched his thirst at the stream.

The Word of the Lord.