Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, May 4, 2024

மே 5 : நற்செய்தி வாசகம்தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

மே 5 : நற்செய்தி வாசகம்

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 5 : இரண்டாம் வாசகம்கடவுள் அன்பாய் இருக்கிறார்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

மே 5 : இரண்டாம் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10
அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 5 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2b)பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.

மே 5 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2b)

பல்லவி: பிற இனத்தார் முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

மே 5 : முதல் வாசகம்தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48

மே 5 :  முதல் வாசகம்

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 25-26, 34-35, 44-48
அந்நாள்களில்

கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்” என்றார்.

பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; ஏனென்றால் அவர்கள் பரவசப் பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 5th : Gospel You are my friends if you do what I command you.A Reading from the Holy Gospel according to St. John 15: 9-17

May 5th :  Gospel 

You are my friends if you do what I command you.

A Reading from the Holy Gospel according to St. John 15: 9-17 
Jesus said to his disciples:
‘As the Father has loved me,
so I have loved you.
Remain in my love.
If you keep my commandments
you will remain in my love,
just as I have kept my Father’s commandments
and remain in his love.
I have told you this
so that my own joy may be in you
and your joy be complete.
This is my commandment:
love one another, as I have loved you.
A man can have no greater love
than to lay down his life for his friends.
You are my friends,
if you do what I command you.
I shall not call you servants any more,
because a servant does not know
his master’s business;
I call you friends,
because I have made known to you
everything I have learnt from my Father.
You did not choose me:
no, I chose you;
and I commissioned you
to go out and to bear fruit,
fruit that will last;
and then the Father will give you
anything you ask him in my name.
What I command you
is to love one another.’

The Gospel of the Lord.

May 5th : Second Reading Let us love one another, since love comes from GodA reading from the first letter of St.John 4:7-10

May 5th :   Second Reading 

Let us love one another, since love comes from God

A reading from the first letter of St.John 4:7-10 
My dear people,
let us love one another
since love comes from God
and everyone who loves is begotten by God and knows God.
Anyone who fails to love can never have known God,
because God is love.
God’s love for us was revealed
when God sent into the world his only Son
so that we could have life through him;
this is the love I mean:
not our love for God,
but God’s love for us when he sent his Son
to be the sacrifice that takes our sins away.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

Jesus said: ‘If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.’
Alleluia!

May 5th : Responsorial PsalmPsalm 97(98):1-4 The Lord has shown his salvation to the nations.or Alleluia!

May 5th :   Responsorial Psalm

Psalm 97(98):1-4 

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has shown his salvation to the nations.
or Alleluia!

May 5th : First ReadingThe pagans have received the Holy Spirit just as much as we have.A reading from the Acts of Apotles 10 :25-26,34-35,44-48

May 5th :  First Reading

The pagans have received the Holy Spirit just as much as we have.

A reading from the Acts of Apotles 10 :25-26,34-35,44-48 
As Peter reached the house Cornelius went out to meet him, knelt at his feet and prostrated himself. But Peter helped him up. ‘Stand up,’ he said ‘I am only a man after all!’
  Then Peter addressed them: ‘The truth I have now come to realise’ he said ‘is that God does not have favourites, but that anybody of any nationality who fears God and does what is right is acceptable to him.’
  While Peter was still speaking the Holy Spirit came down on all the listeners. Jewish believers who had accompanied Peter were all astonished that the gift of the Holy Spirit should be poured out on the pagans too, since they could hear them speaking strange languages and proclaiming the greatness of God. Peter himself then said, ‘Could anyone refuse the water of baptism to these people, now they have received the Holy Spirit just as much as we have?’ He then gave orders for them to be baptised in the name of Jesus Christ. Afterwards they begged him to stay on for some days.

The Word of the Lord.