Monday, October 7, 2024
October 8th : Gospel Martha works; Mary listensA Reading from the Holy Gospel according to St.Luke 10: 38-42
October 8th : Responsorial PsalmPsalm 138(139):1-3,13-15 Lead me, O Lord, in the path of life eternal.
October 8th : First ReadingGod called me through his grace and chose to reveal his Son in meA Reading from the Letter of St.Paul to Galatians 1:13-24
அக்டோபர் 8 : நற்செய்தி வாசகம்மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்டோபர் 8 : பதிலுரைப் பாடல்திபா 139: 1-3. 13-14. 15 (பல்லவி: 24b)பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே.
அக்டோபர் 8 : முதல் வாசகம்பிற இனத்தவர்க்கு நற்செய்தியை அறிவிக்குமாறு திருவுளங்கொண்டார்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-24
October 7th : Gospel 'I am the handmaid of the Lord' A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38
October 7th : Gospel
'I am the handmaid of the Lord'
A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38
The angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, to a virgin betrothed to a man named Joseph, of the House of David; and the virgin’s name was Mary. He went in and said to her, ‘Rejoice, so highly favoured! The Lord is with you.’ She was deeply disturbed by these words and asked herself what this greeting could mean, but the angel said to her, ‘Mary, do not be afraid; you have won God’s favour. Listen! You are to conceive and bear a son, and you must name him Jesus. He will be great and will be called Son of the Most High. The Lord God will give him the throne of his ancestor David; he will rule over the House of Jacob for ever and his reign will have no end.’ Mary said to the angel, ‘But how can this come about, since I am a virgin?’ ‘The Holy Spirit will come upon you’ the angel answered ‘and the power of the Most High will cover you with its shadow. And so the child will be holy and will be called Son of God. Know this too: your kinswoman Elizabeth has, in her old age, herself conceived a son, and she whom people called barren is now in her sixth month, for nothing is impossible to God.’ ‘I am the handmaid of the Lord,’ said Mary ‘let what you have said be done to me.’ And the angel left her.
The Word of the Lord.
October 7th : Responsorial Psalm Luke 1:46-55 The Almighty works marvels for me. Holy is his name!
October 7th : Responsorial Psalm
Luke 1:46-55
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
My soul glorifies the Lord,
my spirit rejoices in God, my Saviour.
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
He looks on his servant in her nothingness;
henceforth all ages will call me blessed.
The Almighty works marvels for me.
Holy his name!
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
His mercy is from age to age,
on those who fear him.
He puts forth his arm in strength
and scatters the proud-hearted.
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
He casts the mighty from their thrones
and raises the lowly.
He fills the starving with good things,
sends the rich away empty.
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
He protects Israel, his servant,
remembering his mercy,
the mercy promised to our fathers,
to Abraham and his sons for ever.
The Almighty works marvels for me. Holy is his name!
or
Blessed is the Virgin Mary, who bore the Son of the eternal Father.
Gospel Acclamation cf.Lk1:28
Alleluia, alleluia!
Hail Mary, full of grace, the Lord is with thee!
Blessed art thou among women.
Alleluia!
October 7th : First reading The apostles all joined in continuous prayer with Mary, the mother of Jesus A reading from the Acts of Apostles 1: 12-14
October 7th : First reading
The apostles all joined in continuous prayer with Mary, the mother of Jesus
A reading from the Acts of Apostles 1: 12-14
After Jesus was taken up into heaven the apostles went back from the Mount of Olives, as it is called, to Jerusalem, a short distance away, no more than a sabbath walk; and when they reached the city they went to the upper room where they were staying; there were Peter and John, James and Andrew, Philip and Thomas, Bartholomew and Matthew, James son of Alphaeus and Simon the Zealot, and Jude son of James. All these joined in continuous prayer, together with several women, including Mary the mother of Jesus, and with his brothers.
The Word of the Lord.
அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம் இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம்
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அக்டோபர் 7 : பதிலுரைப் பாடல் லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55 பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லது: அல்லேலூயா.
அக்டோபர் 7 : பதிலுரைப் பாடல்
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55
பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
அல்லது: அல்லேலூயா.
47
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. - பல்லவி
48
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். - பல்லவி
50-51
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். - பல்லவி
52-53
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். - பல்லவி
54-55
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 28
அல்லேலூயா, அல்லேலூயா!
அருள்நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா.
அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னை நினைவு முதல் வாசகம் இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14
அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னை
நினைவு
முதல் வாசகம்
இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14
இயேசு விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.