Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, June 27, 2024

June 28th : Gospel 'If you want to, you can cure me'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4

June 28th :  Gospel 

'If you want to, you can cure me'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4 
After Jesus had come down from the mountain large crowds followed him. A leper now came up and bowed low in front of him. ‘Sir,’ he said ‘if you want to, you can cure me.’ Jesus stretched out his hand, touched him and said, ‘Of course I want to! Be cured!’ And his leprosy was cured at once. Then Jesus said to him, ‘Mind you do not tell anyone, but go and show yourself to the priest and make the offering prescribed by Moses, as evidence for them.’

The Word of the Lord.

June 28th : Responsorial PsalmPsalm 136(137):1-6 O let my tongue cleave to my mouth if I remember you not!

June 28th :  Responsorial Psalm

Psalm 136(137):1-6 

O let my tongue cleave to my mouth if I remember you not!
By the rivers of Babylon
  there we sat and wept,
  remembering Zion;
on the poplars that grew there
  we hung up our harps.

O let my tongue cleave to my mouth if I remember you not!

For it was there that they asked us,
  our captors, for songs,
  our oppressors, for joy.
‘Sing to us,’ they said,
  ‘one of Zion’s songs.’

O let my tongue cleave to my mouth if I remember you not!

O how could we sing
  the song of the Lord
  on alien soil?
If I forget you, Jerusalem,
  let my right hand wither!

O let my tongue cleave to my mouth if I remember you not!

O let my tongue
  cleave to my mouth
  if I remember you not,
if I prize not Jerusalem
  above all my joys!

O let my tongue cleave to my mouth if I remember you not!

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!
The Lord is faithful in all his words
and loving in all his deeds.
Alleluia!

June 28th : First reading The sack of Jerusalem and the final deportation.A Reading from the Second Book of Kings 25: 1-12

June 28th :  First reading 

The sack of Jerusalem and the final deportation.

A Reading from the Second Book of  Kings 25: 1-12 
In the ninth year of Zedekiah’s reign, in the tenth month, on the tenth day of the month, Nebuchadnezzar king of Babylon came with his whole army to attack Jerusalem; he pitched camp in front of the city and threw up earthworks round it. The city lay under siege till the eleventh year of King Zedekiah. In the fourth month, on the ninth day of the month, when famine was raging in the city and there was no food for the populace, a breach was made in the city wall. At once, the king made his escape under cover of dark, with all the fighting men, by way of the gate between the two walls, which is near the king’s garden – the Chaldaeans had surrounded the city – and made his way towards the Arabah. The Chaldaean troops pursued the king and caught up with him in the plains of Jericho, where all his troops deserted. The Chaldaeans captured the king and took him to the king of Babylon at Riblah, who passed sentence on him. He had the sons of Zedekiah slaughtered before his eyes, then put out Zedekiah’s eyes and, loading him with chains, carried him off to Babylon.
  In the fifth month, on the seventh day of the month – it was in the nineteenth year of Nebuchadnezzar king of Babylon – Nebuzaradan, commander of the guard, an officer of the king of Babylon, entered Jerusalem. He burned down the Temple of the Lord, the royal palace and all the houses in Jerusalem. The Chaldaean troops who accompanied the commander of the guard demolished the walls surrounding Jerusalem. Nebuzaradan, commander of the guard, deported the remainder of the population left behind in the city, the deserters who had gone over to the king of Babylon, and the rest of the common people. The commander of the guard left some of the humbler country people as vineyard workers and ploughmen.

The Word of the Lord.

ஜூன் 28 : நற்செய்தி வாசகம்நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

ஜூன் 28 :  நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்

இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்திபா 137: 1-2. 3. 4-5. 6 . (பல்லவி: 6)பல்லவி: உன்னை நினையாவிடில் என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக!

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்

திபா 137: 1-2. 3. 4-5. 6 . (பல்லவி: 6)

பல்லவி: உன்னை நினையாவிடில் என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக!
1.பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2.அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். - பல்லவி

3.ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். - பல்லவி

4.ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5.எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! - பல்லவி

6.உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல் வாயோடு ஒட்டிக் கொள்வதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

ஜூன் 28 : முதல் வாசகம்யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 25: 1-12

ஜூன் 28 :  முதல் வாசகம்

யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 25: 1-12
செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச்சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.

அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். பாபிலோனிய மன்னன், செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கிய பின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான். அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான். மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்து இருந்தவர்ளையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடு கடத்தினான். மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டு வைத்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.