Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, November 25, 2024

November 26th : Gospel The destruction of the Temple foretold A Reading from the Holy Gospel according to St.Luke 21: 5-11

 November 26th :  Gospel 

The destruction of the Temple foretold

A Reading from the Holy Gospel according to St.Luke 21: 5-11 


When some were talking about the Temple, remarking how it was adorned with fine stonework and votive offerings, Jesus said, ‘All these things you are staring at now – the time will come when not a single stone will be left on another: everything will be destroyed.’ And they put to him this question: ‘Master,’ they said ‘when will this happen, then, and what sign will there be that this is about to take place?’

  ‘Take care not to be deceived,’ he said ‘because many will come using my name and saying, “I am he” and, “The time is near at hand.” Refuse to join them. And when you hear of wars and revolutions, do not be frightened, for this is something that must happen but the end is not so soon.’ Then he said to them, ‘Nation will fight against nation, and kingdom against kingdom. There will be great earthquakes and plagues and famines here and there; there will be fearful sights and great signs from heaven.’

The Word of the Lord.

November 26th : Responsorial Psalm Psalm 95(96):10-13

 November 26th :  Responsorial Psalm

Psalm 95(96):10-13 


The Lord comes to rule the earth.

Proclaim to the nations: ‘God is king.’

  The world he made firm in its place;

  he will judge the peoples in fairness.

The Lord comes to rule the earth.

Let the heavens rejoice and earth be glad,

  let the sea and all within it thunder praise,

let the land and all it bears rejoice,

  all the trees of the wood shout for joy

at the presence of the Lord for he comes,

  he comes to rule the earth.

The Lord comes to rule the earth.

With justice he will rule the world,

  he will judge the peoples with his truth.

The Lord comes to rule the earth.

Gospel Acclamation Lk21:28

Alleluia, alleluia!

Stand erect, hold your heads high,

because your liberation is near at hand.

Alleluia!

November 26th : First Reading The harvest and the vintage of the earth are ripe A reading from the book of the Apocalypse 14:14-19

 November 26th :  First Reading

The harvest and the vintage of the earth are ripe

A reading from the book of the Apocalypse 14:14-19 


In my vision I, John, saw a white cloud and, sitting on it, one like a son of man with a gold crown on his head and a sharp sickle in his hand. Then another angel came out of the sanctuary, and shouted aloud to the one sitting on the cloud, ‘Put your sickle in and reap: harvest time has come and the harvest of the earth is ripe.’ Then the one sitting on the cloud set his sickle to work on the earth, and the earth’s harvest was reaped.

  Another angel, who also carried a sharp sickle, came out of the temple in heaven, and the angel in charge of the fire left the altar and shouted aloud to the one with the sharp sickle, ‘Put your sickle in and cut all the bunches off the vine of the earth; all its grapes are ripe.’ So the angel set his sickle to work on the earth and harvested the whole vintage of the earth and put it into a huge winepress, the winepress of God’s anger.

The Word of the Lord.


நவம்பர் 26 : நற்செய்தி வாசகம் கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

 நவம்பர் 26 :  நற்செய்தி வாசகம்

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11


அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 26 : பதிலுரைப் பாடல் திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13b)

 நவம்பர் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13b)


பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10

வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

11

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

12

வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி

13

ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நவம்பர் 26 : முதல் வாசகம் உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது. திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20

 நவம்பர் 26 :  முதல் வாசகம்

உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20


சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.

மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.

மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.