August 21st : Gospel
Tuesday, August 20, 2024
August 21st : Gospel Why be envious because I am generous? A Reading from the Holy Gospel according to St. Matthew 20: 1-16
August 21st : Responsorial Psalm Psalm 22(23)
August 21st : Responsorial Psalm
Psalm 22(23)
The Lord is my shepherd: there is nothing I shall want.
The Lord is my shepherd;
there is nothing I shall want.
Fresh and green are the pastures
where he gives me repose.
Near restful waters he leads me,
to revive my drooping spirit.
The Lord is my shepherd: there is nothing I shall want.
He guides me along the right path;
he is true to his name.
If I should walk in the valley of darkness
no evil would I fear.
You are there with your crook and your staff;
with these you give me comfort.
The Lord is my shepherd: there is nothing I shall want.
You have prepared a banquet for me
in the sight of my foes.
My head you have anointed with oil;
my cup is overflowing.
The Lord is my shepherd: there is nothing I shall want.
Surely goodness and kindness shall follow me
all the days of my life.
In the Lord’s own house shall I dwell
for ever and ever.
The Lord is my shepherd: there is nothing I shall want.
Gospel Acclamation Ps118:135
Alleluia, alleluia!
Let your face shine on your servant,
and teach me your decrees.
Alleluia!
August 21st : First Reading An oracle against bad and selfish shepherds A Reading from the Book of Ezekiel 34: 1-11
August 21st : First Reading
ஆகஸ்ட் 21 : நற்செய்தி வாசகம் நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
ஆகஸ்ட் 21 : நற்செய்தி வாசகம்
ஆகஸ்ட் 21 : பதிலுரைப் பாடல் திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆகஸ்ட் 21 : பதிலுரைப் பாடல்
ஆகஸ்ட் 21 : முதல் வாசகம் அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11
ஆகஸ்ட் 21 : முதல் வாசகம்
அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11
அந்நாள்களில்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.
எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள்.
எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.