Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, June 4, 2024

ஜூன் 5 : நற்செய்தி வாசகம்அவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27

ஜூன் 5 :  நற்செய்தி வாசகம்

அவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27
அக்காலத்தில்

உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 5 : பதிலுரைப் பாடல்திபா 123: 1-2a. 2bcd. (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

ஜூன் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 123: 1-2a. 2bcd. (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
1
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
2a
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கி இருப்பதுபோல, என் கண்களை உயர்த்தியுள்ளேன். - பல்லவி

2bcd
பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா!

 உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா.

ஜூன் 5 : முதல் வாசகம்உம்மீது என் கைகளை விரித்ததால், உமக்குள் வந்துள்ள கடவுளின் வரத்தைப் புத்துயிர்பெறச் செய்யும்.திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3; 6-12

ஜூன் 5 :  முதல் வாசகம்

உம்மீது என் கைகளை விரித்ததால், உமக்குள் வந்துள்ள கடவுளின் வரத்தைப் புத்துயிர்பெறச் செய்யும்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3; 6-12
என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன்.

உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன். இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 5th : Gospel The God of Abraham and Isaac and Jacob is the God of the livingA reading from the Holy Gospel according to St.Mark 12:18-27

June 5th :  Gospel 

The God of Abraham and Isaac and Jacob is the God of the living

A reading from the Holy Gospel according to St.Mark 12:18-27 
Some Sadducees – who deny that there is a resurrection – came to him and they put this question to him, ‘Master, we have it from Moses in writing, if a man’s brother dies leaving a wife but no child, the man must marry the widow to raise up children for his brother. Now there were seven brothers. The first married a wife and then died leaving no children. The second married the widow, and he too died leaving no children; with the third it was the same, and none of the seven left any children. Last of all the woman herself died. Now at the resurrection, when they rise again, whose wife will she be, since she had been married to all seven?’
  Jesus said to them, ‘Is not the reason why you go wrong, that you understand neither the scriptures nor the power of God? For when they rise from the dead, men and women do not marry; no, they are like the angels in heaven. Now about the dead rising again, have you never read in the Book of Moses, in the passage about the Bush, how God spoke to him and said: I am the God of Abraham, the God of Isaac and the God of Jacob? He is God, not of the dead, but of the living. You are very much mistaken.’

The Word of the Lord.

June 5th : Responsorial PsalmPsalm 122(123):1-2

June 5th :  Responsorial Psalm

Psalm 122(123):1-2 

To you, O Lord, I lift up my eyes.

To you have I lifted up my eyes,
  you who dwell in the heavens;
my eyes, like the eyes of slaves
  on the hand of their lords.
To you, O Lord, I lift up my eyes.

Like the eyes of a servant
  on the hand of her mistress,
so our eyes are on the Lord our God
  till he show us his mercy.

To you, O Lord, I lift up my eyes.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!

Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

June 5th : First reading God's gift is the Spirit of power, love and self-controlA reading from the second letter of St.Paul to Timothy 1:1-3,6-12

June 5th :  First reading 

God's gift is the Spirit of power, love and self-control

A reading from the second letter of St.Paul to Timothy 1:1-3,6-12
From Paul, appointed by God to be an apostle of Christ Jesus in his design to promise life in Christ Jesus; to Timothy, dear child of mine, wishing you grace, mercy and peace from God the Father and from Christ Jesus our Lord.
  Night and day I thank God, keeping my conscience clear and remembering my duty to him as my ancestors did, and always I remember you in my prayers. That is why I am reminding you now to fan into a flame the gift that God gave you when I laid my hands on you. God’s gift was not a spirit of timidity, but the Spirit of power, and love, and self-control. So you are never to be ashamed of witnessing to the Lord, or ashamed of me for being his prisoner; but with me, bear the hardships for the sake of the Good News, relying on the power of God who has saved us and called us to be holy – not because of anything we ourselves have done but for his own purpose and by his own grace. This grace had already been granted to us, in Christ Jesus, before the beginning of time, but it has only been revealed by the Appearing of our saviour Christ Jesus. He abolished death, and he has proclaimed life and immortality through the Good News; and I have been named its herald, its apostle and its teacher.
  It is only on account of this that I am experiencing fresh hardships here now; but I have not lost confidence, because I know who it is that I have put my trust in, and I have no doubt at all that he is able to take care of all that I have entrusted to him until that Day.

The Word of the Lord.