Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, November 23, 2024

நவம்பர் 24 : நற்செய்தி வாசகம் அரசன் என்று நீர் சொல்கிறீர். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

 நவம்பர் 24 :  நற்செய்தி வாசகம்

அரசன் என்று நீர் சொல்கிறீர்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37


அக்காலத்தில்

பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.

அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?"என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.

பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 24 : இரண்டாம் வாசகம் மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

 நவம்பர் 24 :  இரண்டாம் வாசகம்

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8


கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நவம்பர் 24 : பதிலுரைப் பாடல் திபா 93: 1a-c. 1de-2. 5 (பல்லவி: 1ab) பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

 நவம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 93: 1a-c. 1de-2. 5 (பல்லவி: 1ab)


பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1a-c

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி

1de

பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.

2

உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி

5

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். - பல்லவி

நவம்பர் 24 : இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா முதல் வாசகம் மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14.

 நவம்பர் 24 :  இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

முதல் வாசகம்

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14.

அந்நாள்களில்


இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 24th : Gospel Yes, I am a king. A Reading from the Holy Gospel according to St.John 18:33-37

 November 24th :  Gospel

Yes, I am a king.

A Reading from the Holy Gospel according to St.John 18:33-37 


‘Are you the king of the Jews?’ Pilate asked. Jesus replied, ‘Do you ask this of your own accord, or have others spoken to you about me?’ Pilate answered, ‘Am I a Jew? It is your own people and the chief priests who have handed you over to me: what have you done?’ Jesus replied, ‘Mine is not a kingdom of this world; if my kingdom were of this world, my men would have fought to prevent my being surrendered to the Jews. But my kingdom is not of this kind.’ ‘So you are a king then?’ said Pilate. ‘It is you who say it’ answered Jesus. ‘Yes, I am a king. I was born for this, I came into the world for this: to bear witness to the truth; and all who are on the side of truth listen to my voice.’

The Word of the Lord.

November 24th : Second reading Jesus Christ has made us a line of kings and priests. A reading from the book of the Apocalypse 1:5-8

 November 24th :  Second reading

Jesus Christ has made us a line of kings and priests.

A reading from the book of the Apocalypse 1:5-8 


Grace and peace to you from Jesus Christ, the faithful witness, the First-Born from the dead, the Ruler of the kings of the earth. He loves us and has washed away our sins with his blood, and made us a line of kings, priests to serve his God and Father; to him, then, be glory and power for ever and ever. Amen. It is he who is coming on the clouds; everyone will see him, even those who pierced him, and all the races of the earth will mourn over him. This is the truth. Amen. ‘I am the Alpha and the Omega’ says the Lord God, who is, who was, and who is to come, the Almighty.

The Word of the Lord.

Gospel Acclamation Mk11:10

Alleluia, alleluia!

Blessings on him who comes in the name of the Lord!

Blessings on the coming kingdom of our father David!

Alleluia!

November 24th : Responsorial Psalm Psalm 92(93):1-2,5

 November 24th :  Responsorial Psalm

Psalm 92(93):1-2,5 


The Lord is king, with majesty enrobed.

The Lord is king, with majesty enrobed;

  the Lord has robed himself with might,

  he has girded himself with power.

The Lord is king, with majesty enrobed.

The world you made firm, not to be moved;

  your throne has stood firm from of old.

  From all eternity, O Lord, you are.

The Lord is king, with majesty enrobed.

Truly your decrees are to be trusted.

  Holiness is fitting to your house,

  O Lord, until the end of time.

The Lord is king, with majesty enrobed.

November 24th : First reading I saw, coming on the clouds of heaven, one like a son of man. A Reading from the Book of Daniel 7:13-14

 November 24th :  First reading 

I saw, coming on the clouds of heaven, one like a son of man.

A Reading from the Book of Daniel 7:13-14 


I gazed into the visions of the night.

And I saw, coming on the clouds of heaven,

one like a son of man.

He came to the one of great age

and was led into his presence.

On him was conferred sovereignty,

glory and kingship,

and men of all peoples, nations and languages became his servants.

His sovereignty is an eternal sovereignty

which shall never pass away,

nor will his empire ever be destroyed.

The Word of the Lord.