Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, December 28, 2024

டிசம்பர் 29 : நற்செய்தி வாசகம்போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52

டிசம்பர் 29 : நற்செய்தி வாசகம்

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

டிசம்பர் 29 : இரண்டாம் வாசகம்நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2, 21-24

டிசம்பர் 29 :  இரண்டாம் வாசகம்

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2, 21-24
அன்பார்ந்தவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! 

உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

டிசம்பர் 29 : பதிலுரைப் பாடல்திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

டிசம்பர் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.
1
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி

8
படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!
9
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - பல்லவி

டிசம்பர் 29 : இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழாமுதல் வாசகம்அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22, 24-28.

டிசம்பர் 29 :  இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா

முதல் வாசகம்

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22, 24-28.
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார்.

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 29th : Gospel Mary stored up all these things in her heart.A Reading from the Holy Gospel according to St. Luke 2: 41-52

December 29th :  Gospel 

Mary stored up all these things in her heart.

A Reading from the Holy Gospel according to St. Luke 2: 41-52 
Every year the parents of Jesus used to go to Jerusalem for the feast of the Passover. When he was twelve years old, they went up for the feast as usual. When they were on their way home after the feast, the boy Jesus stayed behind in Jerusalem without his parents knowing it. They assumed he was with the caravan, and it was only after a day’s journey that they went to look for him among their relations and acquaintances. When they failed to find him they went back to Jerusalem looking for him everywhere.
  Three days later, they found him in the Temple, sitting among the doctors, listening to them, and asking them questions; and all those who heard him were astounded at his intelligence and his replies. They were overcome when they saw him, and his mother said to him, ‘My child, why have, you done this to us? See how worried your father and I have been, looking for you.’
  ‘Why were you looking for me?’ he replied. ‘Did you not know that I must be busy with my Father’s affairs?’ But they did not understand what he meant.
  He then went down with them and came to Nazareth and lived under their authority.
  His mother stored up all these things in her heart. And Jesus increased in wisdom, in stature, and in favour with God and men.

The Wotd of the Lord.

December 29th : Second ReadingWe are called God's children, and that is what we are.A reading from the first letter of St.John 3: 1-2,21-24

December 29th :  Second Reading

We are called God's children, and that is what we are.

A reading from the first letter of St.John 3: 1-2,21-24 
Think of the love that the Father has lavished on us,
by letting us be called God’s children;
and that is what we are.
Because the world refused to acknowledge him,
therefore it does not acknowledge us.
My dear people, we are already the children of God
but what we are to be in the future has not yet been revealed;
all we know is, that when it is revealed
we shall be like him
because we shall see him as he really is.
My dear people,
if we cannot be condemned by our own conscience,
we need not be afraid in God’s presence,
and whatever we ask him,
we shall receive,
because we keep his commandments
and live the kind of life that he wants.
His commandments are these:
that we believe in the name of his Son Jesus Christ
and that we love one another
as he told us to.
Whoever keeps his commandments
lives in God and God lives in him.
We know that he lives in us
by the Spirit that he has given us.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!

Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

December 29th : Responsorial PsalmPsalm 83(84):2-3, 5-6, 9-10 They are happy who dwell in your house, O Lord.

December 29th :  Responsorial Psalm

Psalm 83(84):2-3, 5-6, 9-10 

They are happy who dwell in your house, O Lord.
How lovely is your dwelling place,
  Lord, God of hosts.
My soul is longing and yearning,
  is yearning for the courts of the Lord.
My heart and my soul ring out their joy
  to God, the living God.

They are happy who dwell in your house, O Lord.

They are happy, who dwell in your house,
  for ever singing your praise.
They are happy, whose strength is in you,
  in whose hearts are the roads to Zion.

They are happy who dwell in your house, O Lord.

O Lord God of hosts, hear my prayer,
  give ear, O God of Jacob.
Turn your eyes, O God, our shield,
  look on the face of your anointed.

They are happy who dwell in your house, O Lord.

December 29th : First ReadingThis is the child I prayed for: he is made over to the Lord.A reading from the first book of Samuel 1: 20-22, 24-28

December 29th :  First Reading

This is the child I prayed for: he is made over to the Lord.

A reading from the first book of Samuel 1: 20-22, 24-28 
Hannah conceived and gave birth to a son, and called him Samuel ‘since’ she said ‘I asked the Lord for him.’
  When a year had gone by, the husband Elkanah went up again with all his family to offer the annual sacrifice to the Lord and to fulfil his vow. Hannah, however, did not go up, having said to her husband, ‘Not before the child is weaned. Then I will bring him and present him before the Lord and he shall stay there for ever.’
  When she had weaned him, she took him up with her together with a three-year-old bull, an ephah of flour and a skin of wine, and she brought him to the temple of the Lord at Shiloh; and the child was with them. They slaughtered the bull and the child’s mother came to Eli. She said, ‘If you please, my lord. As you live, my lord, I am the woman who stood here beside you, praying to the Lord. This is the child I prayed for, and the Lord granted me what I asked him. Now I make him over to the Lord for the whole of his life. He is made over to the Lord.’

The Word of the Lord.