Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, July 16, 2024

ஜூலை 17 : நற்செய்தி வாசகம்ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

ஜூலை 17 :  நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில்

இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூலை 17 : பதிலுரைப் பாடல்திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15 (பல்லவி: 14a)பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

ஜூலை 17 :  பதிலுரைப் பாடல்

திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15 (பல்லவி: 14a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.
5
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். - பல்லவி

7
‘ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர்.
8
மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? - பல்லவி

9
செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
10
மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? - பல்லவி

14
ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15
தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

ஜூலை 17 : முதல் வாசகம்வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ?இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7, 13-16

ஜூலை 17 :  முதல் வாசகம்

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ?

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7, 13-16
ஆண்டவர் கூறியது:

அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.

ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை."

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?

ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 17th : GospelYou have hidden these things from the wise and revealed them to little childrenA Reading from the Holy Gospel according to St.Matthew 11: 25-27

July 17th : Gospel

You have hidden these things from the wise and revealed them to little children

A Reading from the Holy Gospel according to St.Matthew 11: 25-27 
Jesus exclaimed, ‘I bless you, Father, Lord of heaven and of earth, for hiding these things from the learned and the clever and revealing them to mere children. Yes, Father, for that is what it pleased you to do. Everything has been entrusted to me by my Father; and no one knows the Son except the Father, just as no one knows the Father except the Son and those to whom the Son chooses to reveal him.’

The Word of the Lord.

July 17th : Responsorial PsalmPsalm 93(94):5-10,14-15 The Lord will not abandon his people.

July 17th : Responsorial Psalm

Psalm 93(94):5-10,14-15 

The Lord will not abandon his people.
They crush your people, Lord,
  they afflict the ones you have chosen
They kill the widow and the stranger
  and murder the fatherless child.

The Lord will not abandon his people.

And they say: ‘The Lord does not see;
  the God of Jacob pays no heed.’
Mark this, most senseless of people;
  fools, when will you understand?

The Lord will not abandon his people.

Can he who made the ear, not hear?
  Can he who formed the eye, not see?
Will he who trains nations not punish?
  Will he who teaches men, not have knowledge?

The Lord will not abandon his people.

The Lord will not abandon his people
  nor forsake those who are his own;
for judgement shall again be just
  and all true hearts shall uphold it.

The Lord will not abandon his people.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

July 17th : First ReadingAssyria's arrogance and coming ruinA Reading from the Book of Isaiah 10: 5-7,13-16

July 17th :  First Reading

Assyria's arrogance and coming ruin

A Reading from the Book of Isaiah 10: 5-7,13-16 
The Lord of hosts says this:
Woe to Assyria, the rod of my anger,
the club brandished by me in my fury!
I sent him against a godless nation;
I gave him commission against a people that provokes me,
to pillage and to plunder freely
and to stamp down like the mud in the streets.
But he did not intend this,
his heart did not plan it so.
No, in his heart was to destroy,
to go on cutting nations to pieces without limit.
For he has said:
‘By the strength of my own arm I have done this
and by my own intelligence, for understanding is mine;
I have pushed back the frontiers of peoples
and plundered their treasures.
I have brought their inhabitants down to the dust.
As if they were a bird’s nest, my hand has seized
the riches of the peoples.
As people pick up deserted eggs
I have picked up the whole earth,
with not a wing fluttering,
not a beak opening, not a chirp.’
Does the axe claim more credit than the man who wields it,
or the saw more strength than the man who handles it?
It would be like the cudgel controlling the man who raises it,
or the club moving what is not made of wood!
And so the Lord of Hosts is going to send
a wasting sickness on his stout warriors;
beneath his plenty, a burning will burn
like a consuming fire.

The Word of the Lord.