Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, January 31, 2021

பிப்ரவரி 1 : நற்செய்தி வாசகம்தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

பிப்ரவரி 1 :  நற்செய்தி வாசகம்

தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில்
இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.

அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 1 : பதிலுரைப் பாடல்திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.

பிப்ரவரி 1 :  பதிலுரைப் பாடல்

திபா 31: 19-20a,20bc. 21. 22. 23 (பல்லவி: 24 காண்க)

பல்லவி: ஆண்டவரை நம்புவோரே, உங்கள் உள்ளம் உறுதி கொள்வதாக.
19
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!
20a
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! - பல்லவி

20bc
நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

21
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். - பல்லவி

22
நானோ, கலக்கமுற்ற நிலையில் ‘உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக்கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர். - பல்லவி

23
ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

பிப்ரவரி 1 : முதல் வாசகம்நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

பிப்ரவரி 1 :  முதல் வாசகம்

நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40

சகோதரர் சகோதரிகளே,
கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு, தாவீது, சாமுவேல் ஆகியோர் பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை. நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்; நேர்மையாகச் செயல்பட்டார்கள்; கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்; தீயின் கொடுமையைத் தணித்தார்கள்; வாள்முனைக்குத் தப்பினார்கள்; வலுவற்றவராய் இருந்தும் வலிமை பெற்றார்கள்; போரில் வீரம் காட்டினார்கள்; மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.

பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து, வதையுண்டு மடிந்தனர். வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர். சிலர் கல்லெறிபட்டனர்; இரண்டாக அறுக்கப்பட்டனர்; வாளுக்கு இரையாகி மடிந்தனர்; செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்கு உள்ளாயினர். அவர்களை ஏற்க இவ்வுலகுக்குத் தகுதியில்லாமல் போயிற்று. மலைகளிலும் குகைகளிலும் நிலவெடிப்புகளிலும் பாலைவெளிகளிலும் அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.

இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. ஏனெனில், நம்மோடு இணைந்துதான் அவர்கள் நிறைவுபெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில் கொண்டு, நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 1st : Gospel The Gadarene swine.A Reading from the Holy Gospel according to St.Mark 5:1-20

February 1st :   Gospel 

The Gadarene swine.

A Reading from the Holy Gospel according to St.Mark 5:1-20 
Jesus and his disciples reached the country of the Gerasenes on the other side of the lake, and no sooner had Jesus left the boat than a man with an unclean spirit came out from the tombs towards him. The man lived in the tombs and no one could secure him any more, even with a chain; because he had often been secured with fetters and chains but had snapped the chains and broken the fetters, and no one had the strength to control him. All night and all day, among the tombs and in the mountains, he would howl and gash himself with stones. Catching sight of Jesus from a distance, he ran up and fell at his feet and shouted at the top of his voice, ‘What do you want with me, Jesus, son of the Most High God? Swear by God you will not torture me!’ – for Jesus had been saying to him, ‘Come out of the man, unclean spirit.’ ‘What is your name?’ Jesus asked. ‘My name is legion,’ he answered ‘for there are many of us.’ And he begged him earnestly not to send them out of the district.
  Now there was there on the mountainside a great herd of pigs feeding, and the unclean spirits begged him, ‘Send us to the pigs, let us go into them.’ So he gave them leave. With that, the unclean spirits came out and went into the pigs, and the herd of about two thousand pigs charged down the cliff into the lake, and there they were drowned. The swineherds ran off and told their story in the town and in the country round about; and the people came to see what had really happened. They came to Jesus and saw the demoniac sitting there, clothed and in his full senses – the very man who had had the legion in him before – and they were afraid. And those who had witnessed it reported what had happened to the demoniac and what had become of the pigs. Then they began to implore Jesus to leave the neighbourhood. As he was getting into the boat, the man who had been possessed begged to be allowed to stay with him. Jesus would not let him but said to him, ‘Go home to your people and tell them all that the Lord in his mercy has done for you.’ So the man went off and proceeded to spread throughout the Decapolis all that Jesus had done for him. And everyone was amazed.

The Gospel of the Lord.

February 1st : Responsorial PsalmPsalm 30(31):20-24 Let your heart take courage, all who hope in the Lord.

February 1st :  Responsorial Psalm

Psalm 30(31):20-24 

Let your heart take courage, all who hope in the Lord.
How great is the goodness, Lord,
  that you keep for those who fear you,
that you show to those who trust you
  in the sight of men.

Let your heart take courage, all who hope in the Lord.

You hide them in the shelter of your presence
  from the plotting of men;
you keep them safe within your tent
  from disputing tongues.

Let your heart take courage, all who hope in the Lord.

Blessed be the Lord who has shown me
  the wonders of his love
  in a fortified city.

Let your heart take courage, all who hope in the Lord.

‘I am far removed from your sight’
  I said in my alarm.
Yet you heard the voice of my plea
  when I cried for help.

Let your heart take courage, all who hope in the Lord.

Love the Lord, all you saints.
  He guards his faithful
but the Lord will repay to the full
  those who act with pride.

Let your heart take courage, all who hope in the Lord.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!

Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

February 1st : First readingThe example of the Old Testament saints.Hebrews 11:32-40

February 1st :  First reading

The example of the Old Testament saints.

Hebrews 11:32-40 
Gideon, Barak, Samson, Jephthah, David, Samuel and the prophets – these were men who through faith conquered kingdoms, did what is right and earned the promises. They could keep a lion’s mouth shut, put out blazing fires and emerge unscathed from battle. They were weak people who were given strength, to be brave in war and drive back foreign invaders. Some came back to their wives from the dead, by resurrection; and others submitted to torture, refusing release so that they would rise again to a better life. Some had to bear being pilloried and flogged, or even chained up in prison. They were stoned, or sawn in half, or beheaded; they were homeless, and dressed in the skins of sheep and goats; they were penniless and were given nothing but ill-treatment. They were too good for the world and they went out to live in deserts and mountains and in caves and ravines. These are all heroes of faith, but they did not receive what was promised, since God had made provision for us to have something better, and they were not to reach perfection except with us.

The Word of the Lord.

Saturday, January 30, 2021

நற்செய்தி வாசகம் அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

31 சனவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 

நற்செய்தி வாசகம் 

அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28 
ஒருமுறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ``நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. ``வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம் மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ``இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது. 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இரண்டாம் வாசகம் கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

31 சனவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 

இரண்டாம் வாசகம் 

கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35 
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

____ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர். திபா 95: 1-2. 6-7. 8-9

31 சனவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர். 

திபா 95: 1-2. 6-7. 8-9 
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி 

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி 

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி 

___

முதல் வாசகம் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20

31 சனவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 

முதல் வாசகம் 

ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன். 

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20 
அந்நாள்களில் மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, `நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக' என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, `அவர்கள் சொன்னதெல்லாம் சரி' என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

___

GOSPEL "He taught as a man who has authority" A Reading from the Holy Gospel according to Mark (1, 21-28)

31 January 2021, General Week 4 - Sunday 

📖GOSPEL 

"He taught as a man who has authority" 

A Reading from the Holy Gospel according to Mark (1, 21-28) 
Jesus and his disciples entered Capernaum. Immediately on the Sabbath day he went to the synagogue and there he was teaching. We were struck by his teaching, because he taught as a man of authority, and not like the scribes. Now there was in their synagogue a man tormented by an unclean spirit, who began to cry out, "What do you want with us, Jesus of Nazareth?" Have you come to lose us? I know who you are: you are the Holy One of God. "Jesus called out to him sharply:" Shut up! Get out of this man. The unclean spirit made him go into convulsions, then, uttering a loud cry, came out of him. They were all stunned and asked each other: "What does that mean?" Here is a new teaching, given with authority! He even commands unclean spirits, and they obey him. 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

___

SECOND READING "The woman who remains a virgin cares about the affairs of the Lord, in order to be sanctified" the first letter of Saint Paul the apostle to the Corinthians (7, 32-35)

31 January 2021, General Week 4 - Sunday 

SECOND READING 

"The woman who remains a virgin cares about the affairs of the Lord, in order to be sanctified" 

the first letter of Saint Paul the apostle to the Corinthians (7, 32-35) 
Brethren, I would like to see you free from worry. The one who is not married cares about the Lord's affairs, he seeks how to please the Lord. He who is married cares about the affairs of this world, he seeks how to please his wife, and he finds himself divided. The woman without a husband, or one who remains a virgin, cares about the affairs of the Lord, in order to be sanctified in body and spirit. The one who is married is concerned with the affairs of this world, she is looking for how to please her husband. It is in your interest that I say this; it is not to set a trap for you, but to offer you what is good, so that you may be attached to the Lord without sharing. 

__ 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! The people in the car saw the light. In the shadow of death the country is surrounded by flames.  Alleluia!``` 

_____________

RESPONSORIAL Respons : Today do not close your heart, but listen to the voice of the Lord. Psalm 94 (95)

31 January 2021, General Week 4 - Sunday 

RESPONSORIAL 

Respons : Today do not close your heart, but listen to the voice of the Lord. 

Psalm 94 (95) 
Come, let us shout for joy to the Lord,
let us acclaim our Rock, our salvation!
Let us go to him by giving thanks,
by our festive hymns let us acclaim him! R 

Come in, bow down, bow down,
worship the Lord who made us.
Yes, he is our God;
we are the people he leads the flock guided by his hand. R 

Today will you listen to his word?
“Do not close your heart as in the desert,
as in the day of temptation and challenge,
when your fathers tempted and challenged me, and yet they had seen my exploit. "R 

____

31 January 2021, General Week 4 - Sunday FIRST READING “I will raise up a prophet; I will put my words in his mouth ” the book of Deuteronomy (18, 15-20)

31 January 2021, General Week 4 - Sunday 

FIRST READING 

“I will raise up a prophet; I will put my words in his mouth ” 

the book of Deuteronomy (18, 15-20) 
Moses said to the people: “In the midst of you, among your brethren, the Lord your God will raise up a prophet like me, and you will listen to him. This is exactly what you asked of the Lord your God, at Mount Horeb, on the day of the assembly, when you said: “I no longer want to hear the voice of the Lord my God, I no longer want to see this great flame. , I do not want to die !" And the Lord said to me then: “They did well to say that. I will raise up a prophet like you among their brethren; I will put my words in his mouth, and he will speak to them whatever I command him. If anyone does not listen to the words that this prophet will speak on my behalf, I will ask him to account.
But a prophet who presumes to speak in my name a word that I have not commanded him, or who speaks in the name of other gods, that prophet will die. ” " 

The Word of the Lord 

__________

Friday, January 29, 2021

நற்செய்தி வாசகம் காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

30 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனிக்கிழமை 

நற்செய்தி வாசகம் 

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41 
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ``அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்'' என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ``போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ``இரையாதே, அமைதியாயிரு'' என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ``ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

--------------------

பதிலுரைப் பாடல் பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம். லூக் 1: 69-70. 71-73. 74-75

https://youtu.be/8RUl1SJPJKY
30 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனிக்கிழமை 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம். 

லூக் 1: 69-70. 71-73. 74-75 
69 தம் தூய இறைவாக்கினர் வாயினால்
70 தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். -பல்லவி 

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
73 தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.-பல்லவி 

74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
75 விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.-பல்லவி 

__
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா. 

_____________

முதல் வாசகம் கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

30 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனிக்கிழமை 

முதல் வாசகம் 

கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19 
சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே. ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, ஹஹஅவர்களுடைய கடவுள்"" என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். ஹஹஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்"" என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
____

GOSPEL "Who is this man, then, that even the wind and the sea obey him?" A Reading from the Holy Gospel according to Mark (4, 35-41)

30 January 2021, General Week 3 - Saturday 

📖GOSPEL 

"Who is this man, then, that even the wind and the sea obey him?"  

A Reading from the Holy Gospel according to Mark (4, 35-41) 
That day, when evening came, Jesus said to his disciples: “Let us cross over to the other bank. Leaving the crowd, they took Jesus, as he was, in the boat, and other boats accompanied him.
A violent storm arises. The waves threw themselves on the boat, so that it was already filling up. He was sleeping on the pillow in the back. The disciples wake him up and say to him, “Master, we are lost; don't you mind? Awake, he threatened the wind and said to the sea: "Silence, shut up! The wind died down, and there was a great calm. Jesus said to them, “Why are you so fearful? Do you not yet have faith? "Seized with great fear, they said to each other:" Who is he, this one, that even the wind and the sea obey him? " 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

_______________

RESPONSORIAL Respons : Blessed be the Lord, the God of Israel, for he has visited his people. PSALM Song Luke 1, 69-70, 71-72, 73-75

30 January 2021, General Week 3 - Saturday 

RESPONSORIAL 

Respons : Blessed be the Lord, the God of Israel, for he has visited his people. 

PSALM Song Luke 1, 69-70, 71-72, 73-75 
He brought forth the strength that saves us
in the house of David his servant,
as he had said by the mouth of the saints,
by his prophets, from ancient times: R 

salvation which tears us away from the enemy,
from the hand of all our oppressors,
love which he shows towards our fathers,
memory of his holy covenant, R 

oath to our father Abraham
to surrender us without fear,
so that, delivered from the hand of enemies,
we may serve him in righteousness and holiness, in his presence, throughout our days. R 

__
🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! God so loved the world that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. Alleluia!``` 

_____________

30 January 2021, General Week 3 - Saturday FIRST READING "He was waiting for the city of which God himself is the builder and the architect" the letter to the Hebrews (11, 1-2.8-19)

30 January 2021, General Week 3 - Saturday 

FIRST READING 

"He was waiting for the city of which God himself is the builder and the architect" 

the letter to the Hebrews (11, 1-2.8-19) 
Brothers, faith is a way of having what one hopes for, a way of knowing realities that one does not see. And when the Scripture testifies to the elders, it's because of their faith.
Thanks to faith, Abraham obeyed God's call: he set out for a land which he was to receive as an inheritance, and he left without knowing where he was going. Thanks to faith, he came to stay as an immigrant in the Promised Land, as in a foreign land; he lived in the tent, as did Isaac and Jacob, heirs of the same promise, for he awaited the city which would have true foundations, the city of which God himself is the builder and the architect.
Through faith Sarah, too, despite her age, was enabled to be the source of offspring because she believed that God was faithful to his promises. This is why, from a single man, already marked by death, an offspring as numerous as the stars of the sky and the sand by the sea, an innumerable multitude could be born. It is in faith, without having known the fulfillment of the promises, that they all died; but they had seen and greeted her from afar, asserting that on earth they were strangers and travelers. However, to speak in this way is to clearly show that we are looking for a homeland. If they had thought of the one they had left, they would have had the opportunity to come back. In fact, they longed for a better homeland, that of heaven. So God is not ashamed to be called their God,
Through faith, when he was tested, Abraham offered Isaac as a sacrifice. And he was offering the only begotten son, even though he had received the promises and heard this saying: Through Isaac shall their descendants bear your name. He believed in fact that God is capable even of raising the dead; that is why his son was restored to him: there is a prefiguration there. 

The Word of the Lord 

__________

Thursday, January 28, 2021

சனவரி 29 : நற்செய்தி வாசகம்நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34.

சனவரி 29  :  நற்செய்தி வாசகம்

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34.
அக்காலத்தில்

இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 29 : பதிலுரைப் பாடல்திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.

சனவரி 29 :  பதிலுரைப் பாடல்

திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40 (பல்லவி: 39a)

பல்லவி: ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது.
3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

23
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24
அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்துகிடக்க மாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். - பல்லவி

39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா!

 "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா.

சனவரி 29 : முதல் வாசகம்பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39

சனவரி 29 :  முதல் வாசகம்

பெரிய போராட்டத்தையே மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்; எனவே எதிர்நோக்கை இழந்துவிடாதீர்!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-39
சகோதரர் சகோதரிகளே,

முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை. இன்னும், “மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வர இருக்கிறவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.”

நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 29th : GospelThe kingdom of God is a mustard seed growing into the biggest shrub of all.A Reading from the Holy Gospel according to St.Mark 4:26-34.

January 29th :  Gospel

The kingdom of God is a mustard seed growing into the biggest shrub of all.

A Reading from the Holy Gospel according to St.Mark 4:26-34.
Jesus said to the crowds: ‘This is what the kingdom of God is like. A man throws seed on the land. Night and day, while he sleeps, when he is awake, the seed is sprouting and growing; how, he does not know. Of its own accord the land produces first the shoot, then the ear, then the full grain in the ear. And when the crop is ready, he loses no time: he starts to reap because the harvest has come.’
  He also said, ‘What can we say the kingdom of God is like? What parable can we find for it? It is like a mustard seed which at the time of its sowing in the soil is the smallest of all the seeds on earth; yet once it is sown it grows into the biggest shrub of them all and puts out big branches so that the birds of the air can shelter in its shade.’
  Using many parables like these, he spoke the word to them, so far as they were capable of understanding it. He would not speak to them except in parables, but he explained everything to his disciples when they were alone.

The Gospel of the Lord.

January 29th : Responsorial PsalmPsalm 36(37):3-6,23-24,39-40 The salvation of the just comes from the Lord.

January 29th :  Responsorial Psalm

Psalm 36(37):3-6,23-24,39-40 

The salvation of the just comes from the Lord.
If you trust in the Lord and do good,
  then you will live in the land and be secure.
If you find your delight in the Lord,
  he will grant your heart’s desire.

The salvation of the just comes from the Lord.

Commit your life to the Lord,
  trust in him and he will act,
so that your justice breaks forth like the light,
  your cause like the noon-day sun.

The salvation of the just comes from the Lord.

The Lord guides the steps of a man
  and makes safe the path of one he loves.
Though he stumble he shall never fall
  for the Lord holds him by the hand.

The salvation of the just comes from the Lord.

The salvation of the just comes from the Lord,
  their stronghold in time of distress.
The Lord helps them and delivers them
  and saves them: for their refuge is in him.

The salvation of the just comes from the Lord.

Gospel Acclamation Ps118:27

Alleluia, alleluia!

Make me grasp the way of your precepts,
and I will muse on your wonders.
Alleluia!

January 29th : First readingWe are the sort who keep faithful.Hebrews 10:32-39

January 29th :  First reading

We are the sort who keep faithful.

Hebrews 10:32-39 
Remember all the sufferings that you had to meet after you received the light, in earlier days; sometimes by being yourselves publicly exposed to insults and violence, and sometimes as associates of others who were treated in the same way. For you not only shared in the sufferings of those who were in prison, but you happily accepted being stripped of your belongings, knowing that you owned something that was better and lasting. Be as confident now, then, since the reward is so great. You will need endurance to do God’s will and gain what he has promised.
Only a little while now, a very little while,
and the one that is coming will have come; he will not delay.
The righteous man will live by faith,
but if he draws back, my soul will take no pleasure in him.
You and I are not the sort of people who draw back, and are lost by it; we are the sort who keep faithful until our souls are saved.

The Word of the Lord.

Wednesday, January 27, 2021

நற்செய்தி வாசகம் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

28 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - வியாழன் 

நற்செய்தி வாசகம் 

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25 

அக்காலத்தில் 
இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். 

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

--------------------

பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே. திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)

28 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - வியாழன் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே. 

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a) 
1.மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 

2.ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி 

3.ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 

4ab.கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி 

5.இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 

6.அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி 

__ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

திபா 119: 105 

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா. 

____

முதல் வாசகம் எதிர்நோக்கில் நிலையாய் இருந்து, அன்பு செலுத்தி, ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவோம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 19-25

28 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - வியாழன் 

முதல் வாசகம் 

எதிர்நோக்கில் நிலையாய் இருந்து, அன்பு செலுத்தி, ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவோம். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 19-25 
சகோதரர் சகோதரிகளே, 

இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். 

எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப் பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL “The lamp is brought to be put on the lamppost. The measure you use will be used for you ” A Reading from the Holy Gospel according to Mark (4, 21-25)

28 January 2021, General Week 3 Thursday 

📖GOSPEL 

“The lamp is brought to be put on the lamppost. The measure you use will be used for you ” 

A Reading from the Holy Gospel according to Mark (4, 21-25) 
At that time Jesus was saying to the crowd, “Is the lamp brought to be put under a bushel or under the bed? Isn't it to be put on the lamppost? For nothing is hidden, except to be manifested; nothing was kept secret, except to come to clarity. If anyone has ears to hear, let him hear! "
He said to them," Be careful what you hear! The measure you use will also be used for you, and you will be given even more. For whoever has, it will be given to him; whoever does not have, even what he has will be taken away from him. " 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

_______________

RESPONSORIAL Respons : These are the people of those who seek your face, Lord. Psalm 23 (24)

28 January 2021, General Week 3 Thursday 

RESPONSORIAL 

Respons : These are the people of those who seek your face, Lord. 

Psalm 23 (24) 
To the Lord, the world and its wealth,
the earth and all its inhabitants!
It is he who founded it on the seas
and the steadfast guard on the waves. R 

Who can climb the mountain of the Lord
and stand in the holy place?
The man with a pure heart, with innocent hands,
who does not surrender his soul to idols. R 

He obtains blessing from the Lord,
and righteousness from God his Savior.
Here are the people of those who seek him!
Here is Jacob seeking your face! R 

__
🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! Light your walk at my feet! That is the light of my path! Alleluia!``` 

_____________

FIRST READING “In the fullness of faith, let us continue to affirm our hope. Let us be attentive to each other to stimulate ourselves to live in love ” the letter to the Hebrews (10, 19-25)

28 January 2021, General Week 3 Thursday 

FIRST READING 

“In the fullness of faith, let us continue to affirm our hope. Let us be attentive to each other to stimulate ourselves to live in love ” 

the letter to the Hebrews (10, 19-25) 
Brothers, it is with confidence that we can enter the true sanctuary thanks to the blood of Jesus: we have here a new and living path that he inaugurated by crossing the curtain of the Sanctuary; but this curtain is his flesh. And we have the priest par excellence, the one who is established over the house of God. Let us therefore come forward to God with a sincere heart and in the fullness of faith, the heart purified from that which defiles our conscience, the body washed with pure water. Let us continue without wavering to affirm our hope, for he is faithful, the one who promised. Let us be attentive to each other to stimulate ourselves to live in love and to do well. Let us not abandon our assemblies, as some have become accustomed to, but let us encourage ourselves, especially as you see the day of the Lord approaching. 

The Word of the Lord 

__________

Tuesday, January 26, 2021

நற்செய்தி வாசகம் விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

நற்செய்தி வாசகம் 

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20 

அக்காலத்தில் 
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். 

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” 

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார். 

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a) பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

பதிலுரைப் பாடல் 

திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a) 

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே. 
1.ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். - பல்லவி 

2.வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! - பல்லவி 

3.நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில், தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். - பல்லவி 

4.‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். - பல்லவி 

__ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.

முதல் வாசகம் தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-18

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

முதல் வாசகம் 

தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-18 

சகோதரர் சகோதரிகளே, 
ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். 

இதுபற்றித் தூய ஆவியாரும், “அந்நாள்களுக்குப் பிறகு அவர்களோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்” என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்னபின், “அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்” என்றும் கூறுகிறார். எனவே பாவ மன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை. 

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "Behold, the sower went out to sow" A Reading from the Holy Gospel according to Mark (4, 1-20)

27 January 2021, General Week 3 Wednesday 

📖GOSPEL 

"Behold, the sower went out to sow" 

A Reading from the Holy Gospel according to Mark (4, 1-20) 
At this time Jesus began to teach again by the Sea of ​​Galilee. A very large crowd gathered near him, so that he got into a boat and sat down. He was on the sea, and all the crowd was by the sea, on the shore.
He taught them many things in parables, and in his teaching he said to them: “Listen! Behold, the sower went out to sow. As he was sowing, grain fell by the wayside; the birds came and they ate everything. Grain also fell on stony ground, where there was not much soil; he got up immediately, because the earth was shallow; and when the sun rose, that grain burned up, and for lack of roots it withered up. Grain also fell in the brambles, the brambles sprouted up, choked it, and it did not bear fruit. But other grains fell in the good soil; they brought forth fruit growing and developing, and they brought forth thirty, sixty, a hundred, to one. And Jesus said: "He who has ears to hear, let him hear! "
When he was alone, those around him with the Twelve asked him about the parables. He said to them: “To you is given the mystery of the kingdom of God; but to those who are outside, everything is presented in the form of parables. And so, as the prophet says: No matter how much they look with all their eyes, they will not see; however much they listen with all their ears, they will not understand; otherwise they would convert and receive forgiveness. "
He said to them again: "You do not understand this parable? So how will you understand all the parables? The sower sows the Word. There are those who are by the wayside where the Word is sown: when they hear it, Satan comes immediately and removes the Word sown in them. And likewise, there are those who received the seed in stony places: these, when they hear the Word, they immediately receive it with joy; but they have no root in them, they are the people of a moment; whether distress or persecution come because of the Word, they stumble right away. And there are others who received the seed in the brambles: these hear the Word, but the cares of the world, the seduction of wealth and all the other lusts invade them and choke the Word, which does not give no fruit. And there are those who have received the seed in good soil: these hear the Word, they welcome it, and they bear fruit: thirty, sixty, a hundred, for one. " 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : You are a priest forever after the order of Melkizedek. Psalm 109 (110)

27 January 2021, General Week 3 Wednesday 

RESPONSORIAL 

Respons : You are a priest forever after the order of Melkizedek. 

Psalm 109 (110) 
Oracle from the Lord to my Lord:
"Sit on my right hand,
and I will make your enemies
the footstool of your throne." "R 

From Zion, the Lord presents to you
the scepter of your strength:
" Dominate even to the heart of the enemy. "R 

The day when your power appears,
you are a prince, dazzling with holiness:
" Like the dew that is born of the dawn,
I begot you. "A 

The Lord has sworn it
in an irrevocable oath:
" You are a priest forever
after the order of King Melkizedek. "R 

__
🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! The word of God is the seed; It is Christ who sows it; Whoever finds him will last forever. Alleluia!``` 

_____________

27 January 2021, General Week 3 Wednesday FIRST READING "He forever led to their perfection those whom he sanctifies" the letter to the Hebrews (10, 11-18)

27 January 2021, General Week 3 Wednesday 

FIRST READING 

"He forever led to their perfection those whom he sanctifies" 

the letter to the Hebrews (10, 11-18) 
In the Old Covenant, every priest, every day, stood in the holy place for liturgical service, and he offered over and over again the same sacrifices, which can never take away sins.
Jesus Christ, on the contrary, after offering one single sacrifice for sins, sat forever at the right hand of God. He is now waiting for his enemies to be put under his feet. By his one dedication he has brought to perfection those whom he sanctifies forever. The Holy Spirit also testifies to us in Scripture, for after having said: This will be the Covenant that I will establish with them when those days have passed, the Lord said: I will give my laws, I will write them on their hearts and in their minds, and I will no longer remember their sins or their faults. However, when forgiveness is granted, the sin offering is no longer offered. 

The Word of the Lord 

__________

Monday, January 25, 2021

நற்செய்தி வாசகம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

26 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய் 

நற்செய்தி வாசகம் 

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35 

அக்காலத்தில் 
இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். 

அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 40: 1,3ad. 6-7a. 9. 10 (பல்லவி: 7a, 8a) பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே, இதோ வருகின்றேன்.

26 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய் 

பதிலுரைப் பாடல் 

திபா 40: 1,3ad. 6-7a. 9. 10 (பல்லவி: 7a, 8a) 

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே, இதோ வருகின்றேன். 
1.நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 

3ad.புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். - பல்லவி 

6.பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 

7a.எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி 

9.என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி 

10.உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப் பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. - பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

மத் 11: 25 

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. 

____

முதல் வாசகம் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

26 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய் 

முதல் வாசகம் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள் நினைவுக்கு உரியது. 

முதல் வாசகம் 

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8 
என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: 

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். 

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

அல்லது 

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5 

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது: 

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "The harvest is plentiful, but the workers are few" A Reading from the Holy Gospel according to Luke (10, 1-9)

Daily Reading for TUESDAY, JANUARY 26, 2021 

📖GOSPEL 

"The harvest is plentiful, but the workers are few" 

A Reading from the Holy Gospel according to Luke (10, 1-9) 
At that time, among the disciples, the Lord appointed 72 more, and he sent them two by two, ahead of him, to every town and place where he himself was going to go. He said to them, “The harvest is plentiful, but the workers are few. Therefore pray to the Lord of the harvest to send out workers for his harvest. Go! Here I am sending you out like lambs among wolves. Do not carry a purse, bag, or sandals, and do not greet anyone on the way. But in any house you enter, say first, “Peace to this house.” If there is a friend of peace there, your peace will rest on him; otherwise, it will come back to you. Stay in this house, eating and drinking what you are served; because the worker deserves his salary. Do not go from house to house. In any city you enter and be greeted, eat what is presented to you. Heal the sick in there and say, “The kingdom of God has come near to you.” " 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

_______________

RESPONSORIAL Respons : Tell all the peoples of the wonders of the Lord! Psalm 95 (96)

Daily Reading for TUESDAY, JANUARY 26, 2021 

RESPONSORIAL 

Respons : Tell all the peoples of the wonders of the Lord! 

Psalm 95 (96) 
Sing to the Lord a new song,
sing to the Lord, whole earth,
sing to the Lord and bless his name! R 

From day to day proclaim his salvation,
tell all peoples of his glory,
to all nations his wonders! R 

Give unto the Lord, you families of peoples,
render unto the Lord glory and power,
render unto the Lord the glory of his name. R 

Adore the Lord, dazzling with holiness:
tremble before him, all earth.
Go tell the nations: "The Lord is King!" "R 

__
🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! Father, Lord of heaven and earth, I praise you. Because you hid these from the sages and scholars and revealed them to the children. Alleluia!``` 

_____________

Daily Reading for TUESDAY, JANUARY 26, 2021 FIRST READING "I remember the sincere faith that is in you" from the second letter of Saint Paul the apostle to Timothy (1, 1-8)

Daily Reading for TUESDAY, JANUARY 26, 2021 

FIRST READING 

"I remember the sincere faith that is in you" 

from the second letter of Saint Paul the apostle to Timothy (1, 1-8) 
Paul, apostle of Christ Jesus by the will of God, according to the promise of life that we have in Christ Jesus, to Timothy, my beloved child. Grace to you, mercy and peace from God the Father and from Christ Jesus our Lord.
I am full of gratitude to God, to whom I worship with a pure conscience, following my ancestors, I give thanks by continually remembering you in my prayers, night and day. Remembering your tears, I have a very strong desire to see you again to be filled with joy. I remember the sincere faith that is in you: it was the one that first lived in Lois, your grandmother, and that of Eunice, your mother, and I am convinced that it is also the yours. This is why, I remind you, revive the free gift of God, this gift which has been in you since I laid my hands on you. For it is not a spirit of fear that God has given us, but a spirit of strength, love and weighting. Therefore do not be ashamed to bear witness to our Lord, and do not be ashamed of me, who am his prisoner; but, with the strength of God, 

The Word of the Lord 

_____ Or _____ 

I have been entrusted with the task of preaching the gospel. 

From the Epistle of the Apostle Saint Paul's letter to Titus 1, 1-5. 

Paul, God's servant and apostle of Jesus Christ, writes to my true child Titus on the basis of faith common to all: 

I am the Apostle to trust in God the Father and in our Redeemer Christ Jesus and to receive the true knowledge of God in harmony with eternity. This life, the God who does not lie, was promised before the times began. He revealed his message by preaching the good news at the right time. The task of proclaiming this good news has been entrusted to me by the command of our Redeemer God. 

I have left you there on the island of Crete to arrange for the elders to do more, as I have commanded you. 

The grace of the Lord.

Sunday, January 24, 2021

புனித பவுல் மனமாற்றம் திருநாள் நற்செய்தி வாசகம் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

25 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள் 

புனித பவுல் மனமாற்றம் திருநாள் 

நற்செய்தி வாசகம் 

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18 
அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.'' 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.அல்லது: அல்லேலூயா!.

25 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள் 

பதிலுரைப் பாடல் 

திபா 117: 1. 2 

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா!. 
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி 

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது;
அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா. 

____