Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, March 31, 2025

ஏப்ரல் 1 : நற்செய்தி வாசகம் உடனே அம்மனிதர் நலமடைந்தார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16

 ஏப்ரல் 1  :  நற்செய்தி வாசகம்

உடனே அம்மனிதர் நலமடைந்தார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16


யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என்னை நலமாக்கியவரே ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார். “ ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.

பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 1 : பதிலுரைப் பாடல் திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7) பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

 ஏப்ரல் 1  :  பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)


பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.

1

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.

2

ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. - பல்லவி

4

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

5

அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி

7

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.

8

வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 51: 10a, 12a

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

ஏப்ரல் 1 : முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12

 ஏப்ரல் 1 :  முதல் வாசகம்

கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9, 12


அந்நாள்களில்

வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், ‘மானிடா! இதைப் பார்த்தாயா?’ என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 1st : Gospel The healing at the pool of Bethesda A reading from the Holy Gospel according to St.John 5: 1-3,5-16

 April 1st :  Gospel  

The healing at the pool of Bethesda

A reading from the Holy Gospel according to St.John 5: 1-3,5-16

There was a Jewish festival, and Jesus went up to Jerusalem. Now at the Sheep Pool in Jerusalem there is a building, called Bethzatha in Hebrew, consisting of five porticos; and under these were crowds of sick people – blind, lame, paralysed – waiting for the water to move. One man there had an illness which had lasted thirty-eight years, and when Jesus saw him lying there and knew he had been in this condition for a long time, he said, ‘Do you want to be well again?’ ‘Sir,’ replied the sick man ‘I have no one to put me into the pool when the water is disturbed; and while I am still on the way, someone else gets there before me.’ Jesus said, ‘Get up, pick up your sleeping-mat and walk.’ The man was cured at once, and he picked up his mat and walked away.

  Now that day happened to be the sabbath, so the Jews said to the man who had been cured, ‘It is the sabbath; you are not allowed to carry your sleeping-mat.’ He replied, ‘But the man who cured me told me, “Pick up your mat and walk.”’ They asked, ‘Who is the man who said to you, “Pick up your mat and walk”?’ The man had no idea who it was, since Jesus had disappeared into the crowd that filled the place. After a while Jesus met him in the Temple and said, ‘Now you are well again, be sure not to sin any more, or something worse may happen to you.’ The man went back and told the Jews that it was Jesus who had cured him. It was because he did things like this on the sabbath that the Jews began to persecute Jesus.

The Word of the Lord.

April 1st : Responsorial Psalm Psalm 45(46):2-3,5-6,8-9ab

 April 1st :  Responsorial Psalm

Psalm 45(46):2-3,5-6,8-9ab 

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

God is for us a refuge and strength,

  a helper close at hand, in time of distress,

so we shall not fear though the earth should rock,

  though the mountains fall into the depths of the sea.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The waters of a river give joy to God’s city,

  the holy place where the Most High dwells.

God is within, it cannot be shaken;

  God will help it at the dawning of the day.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

The Lord of hosts is with us:

  the God of Jacob is our stronghold.

Come, consider the works of the Lord,

  the redoubtable deeds he has done on the earth.

The Lord of hosts is with us: the God of Jacob is our stronghold.

Gospel Acclamation Ps50:12,14

Praise and honour to you, Lord Jesus!

A pure heart create for me, O God,

and give me again the joy of your help.

Praise and honour to you, Lord Jesus!


April 1st : First reading Wherever the water flows, it will bring life and health A reading from the book of the Prophet Ezekiel 47: 1-9,12

 April 1st :  First reading 

Wherever the water flows, it will bring life and health

A reading from the book of the Prophet Ezekiel 47: 1-9,12

The angel brought me to the entrance of the Temple, where a stream came out from under the Temple threshold and flowed eastwards, since the Temple faced east. The water flowed from under the right side of the Temple, south of the altar. He took me out by the north gate and led me right round outside as far as the outer east gate where the water flowed out on the right-hand side. The man went to the east holding his measuring line and measured off a thousand cubits; he then made me wade across the stream; the water reached my ankles. He measured off another thousand and made me wade across the stream again; the water reached my knees. He measured off another thousand and made me wade across again; the water reached my waist. He measured off another thousand; it was now a river which I could not cross; the stream had swollen and was now deep water, a river impossible to cross. He then said, ‘Do you see, son of man?’ He took me further, then brought me back to the bank of the river. When I got back, there were many trees on each bank of the river. He said, ‘This water flows east down to the Arabah and to the sea; and flowing into the sea it makes its waters wholesome. Wherever the river flows, all living creatures teeming in it will live. Fish will be very plentiful, for wherever the water goes it brings health, and life teems wherever the river flows. Along the river, on either bank, will grow every kind of fruit tree with leaves that never wither and fruit that never fails; they will bear new fruit every month, because this water comes from the sanctuary. And their fruit will be good to eat and the leaves medicinal.’

The Word of the Lord.


Sunday, March 30, 2025

நற்செய்தி வாசகம்யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:43-54

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:43-54

அக்காலத்தில்
இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

பதிலுரைப் பாடல்பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்திருப்பாடல்கள் 30:1, 3-5, 10-12

பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்
திருப்பாடல்கள் 30:1, 3-5, 10-12

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.

10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12 ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

மார்ச் 31 : முதல் வாசகம்இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21

மார்ச் 31 :  முதல் வாசகம்

இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21
ஆண்டவர் கூறுவது:

இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 31st : Gospel Go home: your son will liveA reading from the Holy Gospel according to St.John 4: 43-54

March 31st :  Gospel 

Go home: your son will live

A reading from the Holy Gospel according to St.John 4: 43-54 

Jesus left Samaria for Galilee. He himself had declared that there is no respect for a prophet in his own country, but on his arrival the Galileans received him well, having seen all that he had done at Jerusalem during the festival which they too had attended.
  He went again to Cana in Galilee, where he had changed the water into wine. Now there was a court official there whose son was ill at Capernaum and, hearing that Jesus had arrived in Galilee from Judaea, he went and asked him to come and cure his son as he was at the point of death. Jesus said, ‘So you will not believe unless you see signs and portents!’ ‘Sir,’ answered the official ‘come down before my child dies.’ ‘Go home,’ said Jesus ‘your son will live.’ The man believed what Jesus had said and started on his way; and while he was still on the journey back his servants met him with the news that his boy was alive. He asked them when the boy had begun to recover. ‘The fever left him yesterday’ they said ‘at the seventh hour.’ The father realised that this was exactly the time when Jesus had said, ‘Your son will live’; and he and all his household believed.
  This was the second sign given by Jesus, on his return from Judaea to Galilee.

The Word of the Lord.

March 31st : Responsorial PsalmPsalm 33(34):4-7,16-19 The Lord rescues the just in all their distress.

March 31st :  Responsorial Psalm

Psalm 33(34):4-7,16-19 

The Lord rescues the just in all their distress.

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

The Lord rescues the just in all their distress.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

The Lord rescues the just in all their distress.

The Lord turns his face against the wicked
  to destroy their remembrance from the earth.
The Lord turns his eyes to the just
  and his ears to their appeal.

The Lord rescues the just in all their distress.

They call and the Lord hears
  and rescues them in all their distress.
The Lord is close to the broken-hearted;
  those whose spirit is crushed he will save.

The Lord rescues the just in all their distress.

Gospel Acclamation Mt4:4

Praise and honour to you, Lord Jesus!
Man does not live on bread alone,
but on every word that comes from the mouth of God.
Praise and honour to you, Lord Jesus!

March 31st : First reading Be glad and rejoice for ever at what I am creatingA reading from the book of Isaiah 65 : 17-21

March 31st :  First reading  

Be glad and rejoice for ever at what I am creating

A reading from the book of Isaiah 65 : 17-21

Thus says the Lord: Now I create new heavens and a new earth, and the past will not be remembered, and will come no more to men’s minds. Be glad and rejoice for ever and ever for what I am creating, because I now create Jerusalem ‘Joy’ and her people ‘Gladness.’ I shall rejoice over Jerusalem and exult in my people. No more will the sound of weeping or the sound of cries be heard in her; in her, no more will be found the infant living a few days only, or the old man not living to the end of his days. To die at the age of a hundred will be dying young; not to live to be a hundred will be the sign of a curse. They will build houses and inhabit them, plant vineyards and eat their fruit.

The Word of the Lord.

Saturday, March 29, 2025

மார்ச் 30 : நற்செய்தி வாசகம் உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32

 மார்ச் 30 :  நற்செய்தி வாசகம்

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32


அக்காலத்தில்

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ‘‘இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

‘‘ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.

பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.

தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.

தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.

அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5:17-21

 இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5:17-21


சகோதர சகோதரிகளே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்: ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

மார்ச் 30 : பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8a) பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

 மார்ச் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8a)


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2

நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4

துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

மார்ச் 30 : முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12

 மார்ச் 30 :  முதல் வாசகம்

வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12


அந்நாள்களில்

ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.

இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.

நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


March 30th : Gospel The prodigal son A Reading from the Holy Gospel according to St.Luke 15: 1-3,11-32

 March 30th :  Gospel

The prodigal son

A Reading from the Holy Gospel according to St.Luke 15: 1-3,11-32 

The tax collectors and the sinners were all seeking the company of Jesus to hear what he had to say, and the Pharisees and the scribes complained. ‘This man’ they said ‘welcomes sinners and eats with them.’ So he spoke this parable to them:

  ‘A man had two sons. The younger said to his father, “Father, let me have the share of the estate that would come to me.” So the father divided the property between them. A few days later, the younger son got together everything he had and left for a distant country where he squandered his money on a life of debauchery.

  ‘When he had spent it all, that country experienced a severe famine, and now he began to feel the pinch, so he hired himself out to one of the local inhabitants who put him on his farm to feed the pigs. And he would willingly have filled his belly with the husks the pigs were eating but no one offered him anything. Then he came to his senses and said, “How many of my father’s paid servants have more food than they want, and here am I dying of hunger! I will leave this place and go to my father and say: Father, I have sinned against heaven and against you; I no longer deserve to be called your son; treat me as one of your paid servants.” So he left the place and went back to his father.

  ‘While he was still a long way off, his father saw him and was moved with pity. He ran to the boy, clasped him in his arms and kissed him tenderly. Then his son said, “Father, I have sinned against heaven and against you. I no longer deserve to be called your son.” But the father said to his servants, “Quick! Bring out the best robe and put it on him; put a ring on his finger and sandals on his feet. Bring the calf we have been fattening, and kill it; we are going to have a feast, a celebration, because this son of mine was dead and has come back to life; he was lost and is found.” And they began to celebrate.

  ‘Now the elder son was out in the fields, and on his way back, as he drew near the house, he could hear music and dancing. Calling one of the servants he asked what it was all about. “Your brother has come” replied the servant “and your father has killed the calf we had fattened because he has got him back safe and sound.” He was angry then and refused to go in, and his father came out to plead with him; but he answered his father, “Look, all these years I have slaved for you and never once disobeyed your orders, yet you never offered me so much as a kid for me to celebrate with my friends. But, for this son of yours, when he comes back after swallowing up your property – he and his women – you kill the calf we had been fattening.”

  ‘The father said, “My son, you are with me always and all I have is yours. But it was only right we should celebrate and rejoice, because your brother here was dead and has come to life; he was lost and is found.”’

The Word of the Lord.


March 30th : Second Reading God reconciled himself to us through Christ A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 5: 17-21

 March 30th :   Second Reading

God reconciled himself to us through Christ

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 5: 17-21 

For anyone who is in Christ, there is a new creation; the old creation has gone, and now the new one is here. It is all God’s work. It was God who reconciled us to himself through Christ and gave us the work of handing on this reconciliation. In other words, God in Christ was reconciling the world to himself, not holding men’s faults against them, and he has entrusted to us the news that they are reconciled. So we are ambassadors for Christ; it is as though God were appealing through us, and the appeal that we make in Christ’s name is: be reconciled to God. For our sake God made the sinless one into sin, so that in him we might become the goodness of God.

The Word of the Lord.

Gospel Acclamation Lk15:18

Praise and honour to you, Lord Jesus!

I will leave this place and go to my father and say:

‘Father, I have sinned against heaven and against you.’

Praise and honour to you, Lord Jesus!

March 30th : Responsorial Psalm Psalm 33(34):2-7

 March 30th :  Responsorial Psalm

Psalm 33(34):2-7 

Taste and see that the Lord is good.

I will bless the Lord at all times,

  his praise always on my lips;

in the Lord my soul shall make its boast.

  The humble shall hear and be glad.

Taste and see that the Lord is good.

Glorify the Lord with me.

  Together let us praise his name.

I sought the Lord and he answered me;

  from all my terrors he set me free.

Taste and see that the Lord is good.

Look towards him and be radiant;

  let your faces not be abashed.

This poor man called, the Lord heard him

  and rescued him from all his distress.

Taste and see that the Lord is good.

March 30th : First Reading The Israelites celebrate their first Passover in the Promised Land A Reading from the Book of Joshua 5: 9-12

 March 30th : First Reading 

The Israelites celebrate their first Passover in the Promised Land

A Reading from the Book of Joshua 5: 9-12 

The Lord said to Joshua, ‘Today I have taken the shame of Egypt away from you.’

  The Israelites pitched their camp at Gilgal and kept the Passover there on the fourteenth day of the month, at evening in the plain of Jericho. On the morrow of the Passover they tasted the produce of that country, unleavened bread and roasted ears of corn, that same day. From that time, from their first eating of the produce of that country, the manna stopped falling. And having manna no longer, the Israelites fed from that year onwards on what the land of Canaan yielded.

The Word of the Lord.

Friday, March 28, 2025

மார்ச் 29 : நற்செய்தி வாசகம்பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14

மார்ச் 29 :  நற்செய்தி வாசகம்

பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 9-14
அக்காலத்தில்

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:

“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”

இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 29 : பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்

மார்ச் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6:6)

பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

16
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

18
சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19ab
அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 95: 7b, 8b காண்க

'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 29 : முதல் வாசகம்உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6

மார்ச் 29 :  முதல் வாசகம்

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6
“வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

March 29th : Gospel The tax collector, not the Pharisee, went home justified. A reading from the Holy Gospel according to St.Luke 18: 9-14

 March 29th :  Gospel 

The tax collector, not the Pharisee, went home justified.

A reading from the Holy Gospel according to St.Luke 18: 9-14

Jesus spoke the following parable to some people who prided themselves on being virtuous and despised everyone else: ‘Two men went up to the Temple to pray, one a Pharisee, the other a tax collector. The Pharisee stood there and said this prayer to himself, “I thank you, God, that I am not grasping, unjust, adulterous like the rest of mankind, and particularly that I am not like this tax collector here. I fast twice a week; I pay tithes on all I get.” The tax collector stood some distance away, not daring even to raise his eyes to heaven; but he beat his breast and said, “God, be merciful to me, a sinner.” This man, I tell you, went home again at rights with God; the other did not. For everyone who exalts himself will be humbled, but the man who humbles himself will be exalted.’

The Word of the Lord.

March 29th : Responsorial Psalm Psalm 50(51):3-4,18-21

 March 29th :  Responsorial Psalm

Psalm 50(51):3-4,18-21 

What I want is love, not sacrifice.

Have mercy on me, God, in your kindness.

  In your compassion blot out my offence.

O wash me more and more from my guilt

  and cleanse me from my sin.

What I want is love, not sacrifice.

For in sacrifice you take no delight,

  burnt offering from me you would refuse,

my sacrifice, a contrite spirit.

  A humbled, contrite heart you will not spurn.

What I want is love, not sacrifice.

In your goodness, show favour to Zion:

  rebuild the walls of Jerusalem.

Then you will be pleased with lawful sacrifice,

  burnt offerings wholly consumed.

What I want is love, not sacrifice.

Gospel Acclamation Ps94:8

Glory and praise to you, O Christ!

Harden not your hearts today,

but listen to the voice of the Lord.

Glory and praise to you, O Christ!


March 29th : First reading What I want is love, not sacrifice and holocausts A reading from the book of Hosea 5: 15-6:6

 March 29th :   First reading 

What I want is love, not sacrifice and holocausts

A reading from the book of Hosea 5: 15-6:6 

The Lord says this :  

They will search for me in their misery.

‘Come, let us return to the Lord.

He has torn us to pieces, but he will heal us;

he has struck us down, but he will bandage our wounds;

after a day or two he will bring us back to life,

on the third day he will raise us

and we shall live in his presence.

Let us set ourselves to know the Lord;

that he will come is as certain as the dawn

his judgement will rise like the light,

he will come to us as showers come,

like spring rains watering the earth.’

What am I to do with you, Ephraim?

What am I to do with you, Judah?

This love of yours is like a morning cloud,

like the dew that quickly disappears.

This is why I have torn them to pieces by the prophets,

why I slaughtered them with the words from my mouth,

since what I want is love, not sacrifice;

knowledge of God, not holocausts.

The Word of the Lord.


Thursday, March 27, 2025

March 28th : Gospel 'You are not far from the kingdom of God'A reading from the Holy Gospel according to St.Mark 12: 28-34

March 28th :  Gospel 

'You are not far from the kingdom of God'

A reading from the Holy Gospel according to St.Mark 12: 28-34 

One of the scribes came up to Jesus and put a question to him, ‘Which is the first of all the commandments?’ Jesus replied, ‘This is the first: Listen, Israel, the Lord our God is the one Lord, and you must love the Lord your God with all your heart, with all your soul, with all your mind and with all your strength. The second is this: You must love your neighbour as yourself. There is no commandment greater than these.’ The scribe said to him, ‘Well spoken, Master; what you have said is true: that he is one and there is no other. To love him with all your heart, with all your understanding and strength, and to love your neighbour as yourself, this is far more important than any holocaust or sacrifice.’ Jesus, seeing how wisely he had spoken, said, ‘You are not far from the kingdom of God.’ And after that no one dared to question him any more.

The Word of the Lord.

March 28th : Responsorial PsalmPsalm 80(81):6,8-11,14,17 I am the Lord your God: listen to my warning

March 28th :  Responsorial Psalm

Psalm 80(81):6,8-11,14,17 

I am the Lord your God: listen to my warning.

A voice I did not know said to me:
  ‘I freed your shoulder from the burden;
your hands were freed from the load.
  You called in distress and I saved you.

I am the Lord your God: listen to my warning.

‘I answered, concealed in the storm cloud;
  at the waters of Meribah I tested you.
Listen, my people, to my warning.
  O Israel, if only you would heed!

I am the Lord your God: listen to my warning.

‘Let there be no foreign god among you,
  no worship of an alien god.
I am the Lord your God,
  who brought you from the land of Egypt.

I am the Lord your God: listen to my warning.

‘O that my people would heed me,
  that Israel would walk in my ways!
But Israel I would feed with finest wheat
  and fill them with honey from the rock.’

I am the Lord your God: listen to my warning.

Gospel Acclamation 

Praise and honour to you, Lord Jesus!
The seed is the word of God, Christ the sower;
whoever finds this seed will remain for ever.
Praise and honour to you, Lord Jesus!

March 28th : First reading A call to conversion and promise of safetyA reading from the book of the Prophet Hosea 14: 2-10

March 28th :  First reading 

A call to conversion and promise of safety

A reading from the book of the Prophet Hosea 14: 2-10 

The Lord says this:
Israel, come back to the Lord your God;
your iniquity was the cause of your downfall.
Provide yourself with words
and come back to the Lord.
Say to him, ‘Take all iniquity away
so that we may have happiness again
and offer you our words of praise.
Assyria cannot save us,
we will not ride horses any more,
or say, “Our God!” to what our own hands have made,
for you are the one in whom orphans find compassion.’
– I will heal their disloyalty,
I will love them with all my heart,
for my anger has turned from them.
I will fall like dew on Israel.
He shall bloom like the lily,
and thrust out roots like the poplar,
his shoots will spread far;
he will have the beauty of the olive
and the fragrance of Lebanon.
They will come back to live in my shade;
they will grow corn that flourishes,
they will cultivate vines
as renowned as the wine of Helbon.
What has Ephraim to do with idols any more
when it is I who hear his prayer and care for him?
I am like a cypress ever green,
all your fruitfulness comes from me.
Let the wise man understand these words.
Let the intelligent man grasp their meaning.
For the ways of the Lord are straight,
and virtuous men walk in them,
but sinners stumble.

The Word of the Lord.

மார்ச் 28 : நற்செய்தி வாசகம்நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

மார்ச் 28 :  நற்செய்தி வாசகம்

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்

மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது” என்று கூறினார்.

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 28 : பதிலுரைப் பாடல்திபா 81: 5c-7a. 7bc-8. 9-10ab. 13,16 (பல்லவி: 10,8a)பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

மார்ச் 28  :  பதிலுரைப் பாடல்

திபா 81: 5c-7a. 7bc-8. 9-10ab. 13,16 (பல்லவி: 10,8a)

பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
5c
நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
6
தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.
7a
துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன். - பல்லவி

7bc
இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.
8
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்! - பல்லவி

9
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.
10ab
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி

13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
16
உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 17

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்

மார்ச் 28 : முதல் வாசகம்எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம்.இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

மார்ச் 28 :  முதல் வாசகம்

எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9
ஆண்டவர் கூறியது:

இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே!’ என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்” எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.

அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.

ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Wednesday, March 26, 2025

மார்ச் 27 : நற்செய்தி வாசகம் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15

 மார்ச் 27  :  நற்செய்தி வாசகம்

மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15


அக்காலத்தில்

யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 27 : பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க) பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

 மார்ச் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க)


பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

1

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2

நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

7a

அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். - பல்லவி

7b

இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

8

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9

அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

'இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,’ என்கிறார் ஆண்டவர்.

மார்ச் 27 : முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

 மார்ச் 27 :  முதல் வாசகம்

தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28


ஆண்டவர் கூறியது:

நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

ஆண்டவரின் அருள்வாக்கு.


March 27th : Gospel Know that the kingdom of God has overtaken you A reading from the Holy Gospel according to St.Luke 11:14-23

 March 27th :  Gospel  

Know that the kingdom of God has overtaken you

A reading from the Holy Gospel according to St.Luke 11:14-23

Jesus was casting out a devil and it was dumb; but when the devil had gone out the dumb man spoke, and the people were amazed. But some of them said, ‘It is through Beelzebul, the prince of devils, that he casts out devils.’ Others asked him, as a test, for a sign from heaven; but, knowing what they were thinking, he said to them, ‘Every kingdom divided against itself is heading for ruin, and a household divided against itself collapses. So too with Satan: if he is divided against himself, how can his kingdom stand? – since you assert that it is through Beelzebul that I cast out devils. Now if it is through Beelzebul that I cast out devils, through whom do your own experts cast them out? Let them be your judges then. But if it is through the finger of God that I cast out devils, then know that the kingdom of God has overtaken you. So long as a strong man fully armed guards his own palace, his goods are undisturbed; but when someone stronger than he is attacks and defeats him, the stronger man takes away all the weapons he relied on and shares out his spoil.

  ‘He who is not with me is against me; and he who does not gather with me scatters.’

The Word of the Lord.


March 27th : Responsorial Psalm Psalm 94(95):1-2,6-9

 March 27th :  Responsorial Psalm

Psalm 94(95):1-2,6-9 

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

Come, ring out our joy to the Lord;

  hail the rock who saves us.

Let us come before him, giving thanks,

  with songs let us hail the Lord.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

Come in; let us bow and bend low;

  let us kneel before the God who made us:

for he is our God and we

  the people who belong to his pasture,

  the flock that is led by his hand.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

O that today you would listen to his voice!

  ‘Harden not your hearts as at Meribah,

  as on that day at Massah in the desert

when your fathers put me to the test;

  when they tried me, though they saw my work.’

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

Gospel Acclamation Ezk18:31

Praise to you, O Christ, king of eternal glory!

Shake off all your sins – it is the Lord who speaks –

and make yourselves a new heart and a new spirit.

Praise to you, O Christ, king of eternal glory!

March 27th : First reading Here is the nation that will not listen to the voice of the Lord its God A reading from the book of the Prophet Jeremiah 7: 23-28

 March 27th :  First reading 

Here is the nation that will not listen to the voice of the Lord its God

A reading from the book of the Prophet Jeremiah 7: 23-28

These were my orders: Listen to my voice, then I will be your God and you shall be my people. Follow right to the end the way that I mark out for you, and you will prosper. But they did not listen, they did not pay attention; they followed the dictates of their own evil hearts, refused to face me, and turned their backs on me. From the day your ancestors came out of the land of Egypt until today, day after day I have persistently sent you all my servants the prophets.

  But they have not listened to me, have not paid attention; they have grown stubborn and behaved worse than their ancestors. You may say all these words to them: they will not listen to you; you may call them: they will not answer. So tell them this, “Here is the nation that will not listen to the voice of the Lord its God nor take correction. Sincerity is no more, it has vanished from their mouths.”

The Word of the Lord.


Tuesday, March 25, 2025

March 26th : Gospel I have not come to abolish the Law and the Prophets but to complete them A reading from the Holy Gospel according to St.Matthew 5:17-19

 March 26th :  Gospel  

I have not come to abolish the Law and the Prophets but to complete them

A reading from the Holy Gospel according to St.Matthew 5:17-19

Jesus said to his disciples: ‘Do not imagine that I have come to abolish the Law or the Prophets. I have come not to abolish but to complete them. I tell you solemnly, till heaven and earth disappear, not one dot, not one little stroke, shall disappear from the Law until its purpose is achieved. Therefore, the man who infringes even one of the least of these commandments and teaches others to do the same will be considered the least in the kingdom of heaven; but the man who keeps them and teaches them will be considered great in the kingdom of heaven.’

The Word of the Lord.

March 26th : Responsorial Psalm Psalm 147:12-13,15-16,19-20

 March 26th :  Responsorial Psalm

Psalm 147:12-13,15-16,19-20 

O praise the Lord, Jerusalem!

O praise the Lord, Jerusalem!

  Zion, praise your God!

He has strengthened the bars of your gates

  he has blessed the children within you.

O praise the Lord, Jerusalem!

He sends out his word to the earth

  and swiftly runs his command.

He showers down snow white as wool,

  he scatters hoar-frost like ashes.

O praise the Lord, Jerusalem!

He makes his word known to Jacob,

  to Israel his laws and decrees.

He has not dealt thus with other nations;

  he has not taught them his decrees.

O praise the Lord, Jerusalem!

Gospel Acclamation Jn8:12

Glory to you, O Christ, you are the Word of God!

I am the light of the world, says the Lord;

anyone who follows me will have the light of life.

Glory to you, O Christ, you are the Word of God!

Or: cf.Jn6:63,68

March 26th : First reading Keep these laws and observe them A reading from the book of Deuteronomy 4:1,5-9

 March 26th :  First reading

Keep these laws and observe them

A reading from the book of Deuteronomy 4:1,5-9 

Moses said to the people:

  ‘Now, Israel, take notice of the laws and customs that I teach you today, and observe them, that you may have life and may enter and take possession of the land that the Lord the God of your fathers is giving you.

  ‘See, as the Lord my God has commanded me, I teach you the laws and customs that you are to observe in the land you are to enter and make your own. Keep them, observe them, and they will demonstrate to the peoples your wisdom and understanding. When they come to know of all these laws they will exclaim, “No other people is as wise and prudent as this great nation.” And indeed, what great nation is there that has its gods so near as the Lord our God is to us whenever we call to him? And what great nation is there that has laws and customs to match this whole Law that I put before you today?

  ‘But take care what you do and be on your guard. Do not forget the things your eyes have seen, nor let them slip from your heart all the days of your life; rather, tell them to your children and to your children’s children.’

The Word of the Lord.


மார்ச் 26 : நற்செய்தி வாசகம் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19

 மார்ச் 26 :  நற்செய்தி வாசகம்

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 26 : பதிலுரைப் பாடல் திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a) பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.

 மார்ச் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.


12

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!

13

அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

15

அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.

16

அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். - பல்லவி

19

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b

ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

மார்ச் 26 : முதல் வாசகம் நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9

 மார்ச் 26 :  முதல் வாசகம்

நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1, 5-9


மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Monday, March 24, 2025

March 25th : Gospel 'I am the handmaid of the Lord'A Reading from the Holy Gospel according to St.Luke 1:26-38

March 25th : Gospel 

'I am the handmaid of the Lord'

A Reading from the Holy Gospel according to St.Luke 1:26-38 

The angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, to a virgin betrothed to a man named Joseph, of the House of David; and the virgin’s name was Mary. He went in and said to her, ‘Rejoice, so highly favoured! The Lord is with you.’ She was deeply disturbed by these words and asked herself what this greeting could mean, but the angel said to her, ‘Mary, do not be afraid; you have won God’s favour. Listen! You are to conceive and bear a son, and you must name him Jesus. He will be great and will be called Son of the Most High. The Lord God will give him the throne of his ancestor David; he will rule over the House of Jacob for ever and his reign will have no end.’ Mary said to the angel, ‘But how can this come about, since I am a virgin?’ ‘The Holy Spirit will come upon you’ the angel answered ‘and the power of the Most High will cover you with its shadow. And so the child will be holy and will be called Son of God. Know this too: your kinswoman Elizabeth has, in her old age, herself conceived a son, and she whom people called barren is now in her sixth month, for nothing is impossible to God.’ ‘I am the handmaid of the Lord,’ said Mary ‘let what you have said be done to me.’ And the angel left her.

The Word of the Lord

March 25th : Second reading God's will was for us to be made holy by the offering of his body made once and for all by Jesus Christ.A reading from the letter to the Hebrews 10: 4-10

March 25th : Second reading 

God's will was for us to be made holy by the offering of his body made once and for all by Jesus Christ.

A reading from the letter to the Hebrews 10: 4-10 

Bulls’ blood and goats’ blood are useless for taking away sins, and this is what Christ said, on coming into the world:
You who wanted no sacrifice or oblation,
prepared a body for me.
You took no pleasure in holocausts or sacrifices for sin;
then I said,
just as I was commanded in the scroll of the book,
‘God, here I am! I am coming to obey your will.’
Notice that he says first: You did not want what the Law lays down as the things to be offered, that is: the sacrifices, the oblations, the holocausts and the sacrifices for sin, and you took no pleasure in them; and then he says: Here I am! I am coming to obey your will. He is abolishing the first sort to replace it with the second. And this will was for us to be made holy by the offering of his body made once and for all by Jesus Christ.

The Word of the Lord 

Gospel Acclamation Jn1:14

Praise to you, O Christ, king of eternal glory!
The Word became flesh,
he lived among us,
and we saw his glory.
Praise to you, O Christ, king of eternal glory!

March 25th : Responsorial PsalmPsalm 39(40):7-11

March 25th : Responsorial Psalm

Psalm 39(40):7-11 

Here I am, Lord! I come to do your will.

You do not ask for sacrifice and offerings,
  but an open ear.
You do not ask for holocaust and victim.
  Instead, here am I.

Here I am, Lord! I come to do your will.

In the scroll of the book it stands written
  that I should do your will.
My God, I delight in your law
  in the depth of my heart.

Here I am, Lord! I come to do your will.

Your justice I have proclaimed
  in the great assembly.
My lips I have not sealed;
  you know it, O Lord.

Here I am, Lord! I come to do your will.

I have not hidden your justice in my heart
  but declared your faithful help.
I have not hidden your love and your truth
  from the great assembly.

Here I am, Lord! I come to do your will.

March 25th: First readingThe maiden is with childA Reading from the Book of the Prophet Isaiah 7:10-14,8:10

March 25th: First reading

The maiden is with child

A Reading from the Book of the Prophet  Isaiah 7:10-14,8:10 

The Lord spoke to Ahaz and said, ‘Ask the Lord your God for a sign for yourself coming either from the depths of Sheol or from the heights above.’ ‘No,’ Ahaz answered ‘I will not put the Lord to the test.’
  Then Isaiah said:
‘Listen now, House of David:
are you not satisfied with trying the patience of men
without trying the patience of my God, too?
The Lord himself, therefore,
will give you a sign.
It is this: the maiden is with child
and will soon give birth to a son
whom she will call Immanuel,
a name which means “God-is-with-us.”’

The Word of the Lord

மார்ச் 25 : நற்செய்தி வாசகம்இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

மார்ச் 25 : நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 25 : இரண்டாம் வாசகம்என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10

மார்ச் 25 : இரண்டாம் வாசகம்

என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10
சகோதரர் சகோதரிகளே,

காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, ‘இதோ வருகின்றேன்.’ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது” என்கிறார்.

திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல” என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர் “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார்.

இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 1: 14ab
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா

மார்ச் 25 : பதிலுரைப் பாடல்திபா 40: 6-7a. 7b-8. 9. 10 (பல்லவி: 7a, 8a காண்க)

மார்ச் 25 : பதிலுரைப் பாடல்

திபா 40: 6-7a. 7b-8. 9. 10 (பல்லவி: 7a, 8a காண்க)

பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ - பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

10
உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. - பல்லவி

மார்ச் 25 : கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புபெருவிழாமுதல் வாசகம்இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

மார்ச் 25 : கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
பெருவிழா

முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.

அதற்கு ஆகாசு, “நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Sunday, March 23, 2025

March 24th : Gospel No prophet is ever accepted in his own countryA reading from the Holy Gospel according to St.Luke 4: 24-30

March 24th :  Gospel  

No prophet is ever accepted in his own country

A reading from the Holy Gospel according to St.Luke 4: 24-30

Jesus came to Nazara and spoke to the people in the synagogue: ‘I tell you solemnly, no prophet is ever accepted in his own country.
  ‘There were many widows in Israel, I can assure you, in Elijah’s day, when heaven remained shut for three years and six months and a great famine raged throughout the land, but Elijah was not sent to any one of these: he was sent to a widow at Zarephath, a Sidonian town. And in the prophet Elisha’s time there were many lepers in Israel, but none of these was cured, except the Syrian, Naaman.’
  When they heard this everyone in the synagogue was enraged. They sprang to their feet and hustled him out of the town; and they took him up to the brow of the hill their town was built on, intending to throw him down the cliff, but he slipped through the crowd and walked away.

The Word of the Lord.

March 24th : Responsorial PsalmPsalm 41(42):2-3,42:3-4 My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

March 24th :  Responsorial Psalm

Psalm 41(42):2-3,42:3-4 

My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

Like the deer that yearns
  for running streams,
so my soul is yearning
  for you, my God.

My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

My soul is thirsting for God,
  the God of my life;
when can I enter and see
  the face of God?

My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

O send forth your light and your truth;
  let these be my guide.
Let them bring me to your holy mountain,
  to the place where you dwell.

My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

And I will come to the altar of God,
  the God of my joy.
My redeemer, I will thank you on the harp,
  O God, my God.

My soul is thirsting for God, the God of my life: when can I enter and see the face of God?

Gospel Acclamation 

2Co6:2

Praise and honour to you, Lord Jesus!
Now is the favourable time:
this is the day of salvation.
Praise and honour to you, Lord Jesus!

March 24th : First reading There were many lepers in Israel, but only Naaman, the Syrian, was curedA reading from the second book of Kings 5: 1-15

March 24th :  First reading  

There were many lepers in Israel, but only Naaman, the Syrian, was cured

A reading from the second book of Kings 5: 1-15

Naaman, army commander to the king of Aram, was a man who enjoyed his master’s respect and favour, since through him the Lord had granted victory to the Aramaeans. But the man was a leper.
  Now on one of their raids, the Aramaeans had carried off from the land of Israel a little girl who had become a servant of Naaman’s wife. She said to her mistress, ‘If only my master would approach the prophet of Samaria. He would cure him of his leprosy.’
  Naaman went and told his master. ‘This and this’ he reported ‘is what the girl from the land of Israel said.’
  ‘Go by all means,’ said the king of Aram ‘I will send a letter to the king of Israel.’
  So Naaman left, taking with him ten talents of silver, six thousand shekels of gold and ten festal robes. He presented the letter to the king of Israel. It read: ‘With this letter, I am sending my servant Naaman to you for you to cure him of his leprosy.’ When the king of Israel read the letter, he tore his garments. ‘Am I a god to give death and life,’ he said ‘that he sends a man to me and asks me to cure him of his leprosy? Listen to this, and take note of it and see how he intends to pick a quarrel with me.’
  When Elisha heard that the king of Israel had torn his garments, he sent word to the king, ‘Why did you tear your garments? Let him come to me, and he will find there is a prophet in Israel.’
  So Naaman came with his team and chariot and drew up at the door of Elisha’s house. And Elisha sent him a messenger to say, ‘Go and bathe seven times in the Jordan, and your flesh will become clean once more.’
  But Naaman was indignant and went off, saying, ‘Here was I thinking he would be sure to come out to me, and stand there, and call on the name of the Lord his God, and wave his hand over the spot and cure the leprous part. Surely Abana and Pharpar, the rivers of Damascus, are better than any water in Israel? Could I not bathe in them and become clean?’ And he turned round and went off in a rage.
  But his servants approached him and said, ‘My father, if the prophet had asked you to do something difficult, would you not have done it? All the more reason, then, when he says to you, “Bathe, and you will become clean.”’
  So he went down and immersed himself seven times in the Jordan, as Elisha had told him to do. And his flesh became clean once more like the flesh of a little child.
  Returning to Elisha with his whole escort, he went in and stood before him. ‘Now I know’ he said ‘that there is no God in all the earth except in Israel.’

The Word of the Lord.

மார்ச் 24 : நற்செய்தி வாசகம்எலியா, எலிசா என்பவர்களைப் போல் இயேசுவும் யூதர்களுக்கென்று மட்டும் அனுப்பப்படவில்லை.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30

மார்ச் 24 :  நற்செய்தி வாசகம்

எலியா, எலிசா என்பவர்களைப் போல் இயேசுவும் யூதர்களுக்கென்று மட்டும் அனுப்பப்படவில்லை.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30
இயேசு நாசரேத்துக்கு வந்திருந்தபோது தொழுகைக்கூடத்தில் மக்களை நோக்கிக் கூறியது: “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.”

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மார்ச் 24 : பதிலுரைப் பாடல்திபா 42: 1. 2. ; 43: 3. 4 (பல்லவி: திபா 42:2a)பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.

மார்ச் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 42: 1. 2. ; 43: 3. 4 (பல்லவி: திபா 42:2a)

பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.
42:1
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. - பல்லவி

42:2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? - பல்லவி

43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

43:4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

திபா 130: 5. 7

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

மார்ச் 24 : முதல் வாசகம்இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15

மார்ச் 24 :  முதல் வாசகம்

இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15
அந்நாள்களில்

சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமைமிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள். எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, “இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்” என்று அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது சிரியா மன்னர், “சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்” என்றார்.

எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில் “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப் பட்டிருந்தது. இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!” என்று கூறினான்.

கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி, “நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்” என்று சொன்னார். அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, “நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்” என்று ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், “அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?” என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.

அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், “எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?” என்றனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது.

பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.