Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, February 28, 2021

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் நற்செய்தி வாசகம் மன்னியுங்கள்; மன்னிப்புப்பெறுவீர்கள். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் 

நற்செய்தி வாசகம் 

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.” 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

-------------------------

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும். திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103:10a)

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும். 

திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103:10a) 
8.எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி 
9.எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி 

11.சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. - பல்லவி 

13.அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். - பல்லவி 

____ 

நற்செய்திக்கு முன் வசனம் 

யோவா 6: 63b, 68b 

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. 

_______

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் முதல் வாசகம் நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a

01 மார்ச் 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள் 

முதல் வாசகம் 

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். 

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a 
என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. 

என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம். 

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை. 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

______

01 March 2021, Monday 📖GOSPEL "Forgive, and you will be forgiven" A Reading From The Holy Gospel According To Luke (6, 36-38)

01 March 2021, Monday 

📖GOSPEL 

"Forgive, and you will be forgiven" 

A Reading From The Holy Gospel According To Luke (6, 36-38) 
At that time, Jesus said to his disciples: “Be merciful as your Father is merciful. Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven. Give, and it will be given to you: it is a very full measure, packed, shaken, overflowing, which will be poured into the hem of your garment; for the measure which you use for others will also serve as a measure for you. " 

The Gospel of the Lord 

I believe in God, /.... 

__________________________

01 March 2021, Monday RESPONSORIAL Respons: Lord, do not treat us according to our sins. Psalm 78 (79)

01 March 2021, Monday 

RESPONSORIAL 

Respons: Lord, do not treat us according to our sins. 

Psalm 78 (79) 
How long, Lord, will your anger last?
Do not hold against us the sins of our ancestors:
may your tenderness come to us soon,
for we are at the end of our strength! R 

Help us, God our Savior,
for the glory of your name!
Deliver us, erase our faults,
for the sake of your name! R 

May the captive's complaint rise up in your presence!
Your arm is strong: spare those who must die.
And we, your people, the flock you lead,
endlessly we can give you thanks. R 

___ 

🌿Gospel Acclamation 

Your words, O Lord, give life-giving Spirit; Provide sustainability. 

_____________

01 March 2021, Monday FIRST READING "We have sinned, we have committed iniquity" Reading from the book of the prophet Daniel (9, 4-10)

01 March 2021, Monday 

FIRST READING 

"We have sinned, we have committed iniquity" 

Reading from the book of the prophet Daniel (9, 4-10) 
I made this prayer and this confession to the Lord my God: “Ah! you Lord, the great and dreadful God, who keeps covenant and faithfulness to those who love him and keep his commandments, we have sinned, we have committed iniquity, we have done evil, we have been rebellious, we have are turned away from your commandments and your ordinances. We did not listen to your servants the prophets, who spoke in your name to our kings, to our princes, to our fathers, to all the people of the land. To you, Lord, justice; shame on our faces, as we see today for the people of Judah, for the inhabitants of Jerusalem and all Israel, for those who are near and for those who are far, in all the countries where you have them driven out, because of the infidelities they have committed towards you. Lord, shame on our faces, our kings, our princes, our fathers, because we have sinned against you. To the Lord our God, mercy and forgiveness, because we rebelled against him, we did not listen to the voice of the Lord our God, because we did not follow the laws which he proposed to us by his servants the prophets. " 

The Word of the Lord.
__________

Saturday, February 27, 2021

28 பிப்ரவரி 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு நற்செய்தி வாசகம் என் அன்பார்ந்த மைந்தர் இவரே. ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

28 பிப்ரவரி 2021, தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு 

நற்செய்தி வாசகம் 

என் அன்பார்ந்த மைந்தர் இவரே. 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10 

அக்காலத்தில் 
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள். 

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். 

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 

அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

-------------------------

பிப்ரவரி 28 : இரண்டாம் வாசகம்கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

பிப்ரவரி 28  :  இரண்டாம் வாசகம்

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34
சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

பிப்ரவரி 28 : பதிலுரைப் பாடல்திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9)

பிப்ரவரி 28  :  பதிலுரைப் பாடல்

திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9)
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10
‘மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. - பல்லவி

16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;
19
உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

பிப்ரவரி 28 : முதல் வாசகம்நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

பிப்ரவரி 28  :  முதல் வாசகம்

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில்
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்! ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார்.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

28 February 2021, Sunday SECOND READING "God did not spare his own Son" Reading from the letter of Saint Paul the apostle to the Romans (8, 31b-34)

28 February 2021, Sunday 

SECOND READING 

"God did not spare his own Son" 

Reading from the letter of Saint Paul the apostle to the Romans (8, 31b-34) 
Brothers, if God is for us, who will be against us? He did not spare his own Son, but gave him up for all of us: how could he, with him, not give us everything? Who will accuse those whom God has chosen? God is the one who makes righteous: so who can condemn? Christ Jesus is dead; moreover, he is risen, he is at the right hand of God, he intercedes for us.  

The Word of the Lord.
____ 

🌿Gospel Acclamation 

From the glowing cloud heard the voice of the Father: Listen to him. ” 

_____________

28 February 2021, Sunday RESPONSORIAL Respons: I will walk in the presence of the Lord in the land of the living. Psalm 115 (116B)

28 February 2021, Sunday 

RESPONSORIAL 

Respons: I will walk in the presence of the Lord in the land of the living. 

Psalm 115 (116B) 
I believe, and I will speak,
I who have suffered greatly.
It costs the Lord
to see his people die! R 

Am I not, Lord, thy servant,
I, whose chains thou didst break?
I will offer you the sacrifice of thanksgiving,
I will call on the name of the Lord. R 

I will keep my promises to the Lord,
yea, before all his people,
at the entrance to the house of the Lord,
in the midst of Jerusalem! R 

___

28 February 2021, Sunday FIRST READING The sacrifice of our father Abraham Reading from the book of Genesis (22, 1-2.9-13.15-18)

28 February 2021, Sunday 

FIRST READING 

The sacrifice of our father Abraham 

Reading from the book of Genesis (22, 1-2.9-13.15-18) 
In those days God put Abraham to the test. He said to him: “Abraham! The latter replied: "Here I am! God said: "Take your son, your only son, the one you love, Isaac, go to the land of Moriah, and there you will offer him as a burnt offering on the mountain that I will show you. They came to the place God had indicated. Abraham built the altar there and laid out the wood; then he bound his son Isaac and put him on the altar over the wood. Abraham stretched out his hand and grabbed the knife to sacrifice his son. But the angel of the Lord called him from on high and said: “Abraham! Abraham! He replied: "Here I am! "The angel said to him:" Do not lay your hand on the boy! Don't hurt her! I know now that you fear God: you did not refuse me your son, your only one. Abraham looked up and saw a ram caught by its horns in a bush. He went and took the ram and offered it as a burnt offering instead of his son.
From heaven, the angel of the Lord called Abraham a second time. He declared: "I swear it by myself, oracle of the Lord: because you have done this, because you have not refused me your son, your only one, I will fill you with blessings, I will make your descendants so numerous. as the stars of the sky and the sand by the seashore, and your descendants shall occupy the strongholds of their enemies. Since you have listened to my voice, all the nations of the earth will address the blessing to one another by the name of your offspring. " 

The Word of the Lord.
__________

Friday, February 26, 2021

27 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - சனி நற்செய்தி வாசகம் உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

27 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - சனி 

நற்செய்தி வாசகம் 

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? 

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

-------------------------

பிப்ரவரி 27 : பதிலுரைப் பாடல்திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

பிப்ரவரி 27  :  பதிலுரைப் பாடல்

திபா 119: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
1
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

4
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
5
உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! - பல்லவி

7
உம் நீதி நெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.
8
உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

2 கொரி 6: 2b

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

பிப்ரவரி 27 : முதல் வாசகம்உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19

பிப்ரவரி 27  :  முதல் வாசகம்

உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19
மோசே மக்களை நோக்கிக் கூறியது: இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும், உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும் கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவிகொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

27 February 2021, Saturday 📖GOSPEL Be Perfect As Your Heavenly Father Is Perfect A Reading From The Holy Gospel According To Matthew (5, 43-48)

27 February 2021, Saturday 

📖GOSPEL 

Be Perfect As Your Heavenly Father Is Perfect 

A Reading From The Holy Gospel According To Matthew (5, 43-48) 
At that time, Jesus said to his disciples: “You have heard that it has been said: You shall love your neighbor and you will hate your enemy. Well ! I say to you: Love your enemies, and pray for those who persecute you, that you may truly be the children of your Father who is in heaven; for he causes his sun to rise on the evil and on the good; he sends rain on the just and on the unjust. Indeed, if you love those who love you, what reward do you deserve? Do not the tax collectors themselves do the same? And if you only greet your brothers, what are you doing that is extraordinary? Do the pagans themselves not do the same? You therefore will be perfect as your Heavenly Father is perfect. " 

The Gospel of the Lord 

I believe in God, /....
_______________

27 February 2021, Saturday RESPONSORIAL Respons: Happy are those who walk according to the law of the Lord! Psalm 118 (119)

27 February 2021, Saturday 

RESPONSORIAL 

Respons: Happy are those who walk according to the law of the Lord! 

Psalm 118 (119) 
Blessed are those who are blameless in their ways,
who walk according to the law of the Lord!
Happy are those who keep his demands,
they seek him wholeheartedly! R 

You promulgate precepts
to be observed entirely.
May my ways be established
to keep your commandments! R 

With a
righteous heart, I will be able to give you thanks, instructed in your righteous decisions.
Your commandments, I
keep them : do not forsake me entirely. R 

___ 

🌿Gospel Acclamation 

This is the right time! Today is Redemption Day! 

_____________

27 February 2021, Saturday FIRST READING "You will be a people consecrated to the Lord your God" Reading from the book of Deuteronomy (26, 16-19)

27 February 2021, Saturday 

FIRST READING 

"You will be a people consecrated to the Lord your God" 

Reading from the book of Deuteronomy (26, 16-19) 
Moses said to the people of Israel: “Today the Lord your God commands you to put into practice these decrees and ordinances. You will make sure to practice them with all your heart and with all your soul. Today you have obtained from the Lord this declaration: he will be your God; you, you will follow his ways, you will keep his decrees, his commandments and his ordinances, you will listen to his voice. Today the Lord has obtained from you this declaration: you will be his people, his particular domain, as he told you, you will have to keep all his commandments. He will make you exceed in prestige, fame and glory all the nations that he has made, and you will be a people consecrated to the Lord your God, as he has said. " 

The Word of the Lord.
__________

Thursday, February 25, 2021

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி நற்செய்தி வாசகம் நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ✠மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

நற்செய்தி வாசகம் 

நீங்கள் போய் முதலில் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்: “கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி பதிலுரைப் பாடல் திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: 3)

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

பதிலுரைப் பாடல் 
திபா 130: 1-2. 3-4. 5-6ac. 7-8 (பல்லவி: 3) 

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 
1.ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 

2.ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி 

3.ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 

4.நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி 

5.ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 

6ac.விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி 

7.இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 

8.எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி 

நற்செய்திக்கு முன் வசனம் 

எசே 18: 31 

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். 

____

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28

26 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி 

முதல் வாசகம் 

தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? 

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 
ஆண்டவர் கூறுவது: 

தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்பட மாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத்தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானது எதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும் செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். ஆயினும், ‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகள் அன்றோ நேர்மையற்றவை! 

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் தம் உயிரை அவர்கள் காத்துக்கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

____

February 26th : Gospel Anyone who is angry with his brother will answer for itA Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26

February 26th :  Gospel 

Anyone who is angry with his brother will answer for it

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:20-26 
Jesus said to his disciples: ‘If your virtue goes no deeper than that of the scribes and Pharisees, you will never get into the kingdom of heaven.
  ‘You have learnt how it was said to our ancestors: You must not kill; and if anyone does kill he must answer for it before the court. But I say this to you: anyone who is angry with his brother will answer for it before the court; if a man calls his brother “Fool” he will answer for it before the Sanhedrin; and if a man calls him “Renegade” he will answer for it in hell fire. So then, if you are bringing your offering to the altar and there remember that your brother has something against you, leave your offering there before the altar, go and be reconciled with your brother first, and then come back and present your offering. Come to terms with your opponent in good time while you are still on the way to the court with him, or he may hand you over to the judge and the judge to the officer, and you will be thrown into prison. I tell you solemnly, you will not get out till you have paid the last penny.’

The Gospel of the Lord.

February 26th : Responsorial Psalm Psalm 129(130) If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

February 26th :  Responsorial Psalm 

Psalm 129(130) 

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Out of the depths I cry to you, O Lord,
  Lord, hear my voice!
O let your ears be attentive
  to the voice of my pleading.
If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

If you, O Lord, should mark our guilt,
  Lord, who would survive?
But with you is found forgiveness:
  for this we revere you.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

My soul is waiting for the Lord.
  I count on his word.
My soul is longing for the Lord
  more than watchman for daybreak.
(Let the watchman count on daybreak
  and Israel on the Lord.)

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Because with the Lord there is mercy
  and fullness of redemption,
Israel indeed he will redeem
  from all its iniquity.

If you, O Lord, should mark our guilt, Lord, who would survive?

Gospel Acclamation cf.Amos5:14

Praise to you, O Christ, king of eternal glory!
Seek good and not evil so that you may live,
and that the Lord God of hosts may really be with you.
Praise to you, O Christ, king of eternal glory!

February 26th : First ReadingI prefer to see the wicked man renounce his wickedness and liveA Reading from the Book of Ezekiel 18:21-28 .

February 26th : First Reading

I prefer to see the wicked man renounce his wickedness and live

A Reading from the Book of Ezekiel 18:21-28 .
Thus says the Lord:
  ‘If the wicked man renounces all the sins he has committed, respects my laws and is law-abiding and honest, he will certainly live; he will not die. All the sins he committed will be forgotten from then on; he shall live because of the integrity he has practised. What! Am I likely to take pleasure in the death of a wicked man – it is the Lord who speaks – and not prefer to see him renounce his wickedness and live?
  ‘But if the upright man renounces his integrity, commits sin, copies the wicked man and practises every kind of filth, is he to live? All the integrity he has practised shall be forgotten from then on; but this is because he himself has broken faith and committed sin, and for this he shall die. But you object, “What the Lord does is unjust.” Listen, you House of Israel: is what I do unjust? Is it not what you do that is unjust? When the upright man renounces his integrity to commit sin and dies because of this, he dies because of the evil that he himself has committed. When the sinner renounces sin to become law-abiding and honest, he deserves to live. He has chosen to renounce all his previous sins; he shall certainly live; he shall not die.’

The Word of the Lord.

Wednesday, February 24, 2021

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் நற்செய்தி வாசகம் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் 

நற்செய்தி வாசகம்

கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12 

அக்காலத்தில் 
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 

உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா! 

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. 

ஆண்டவரின் அருள்வாக்கு

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர். திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 3a)

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர். 
திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 3a) 
1.ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 

2a.உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். - பல்லவி 

2bc.உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 

3.நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி 

7c.உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 

8.நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி 

நற்செய்திக்கு முன் வசனம் 

திபா 51: 10a, 12a 

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் முதல் வாசகம் "ஆண்டவரே, உன்னைத் தவிர வேறு எந்த உதவியும் எனக்கு இல்லை" எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t

25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன் 

முதல் வாசகம் 

"ஆண்டவரே, உன்னைத் தவிர வேறு எந்த உதவியும் எனக்கு இல்லை" 

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t 
சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். “என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும். 

ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும். 

ஆண்டவரின் அருள்வாக்கு. 

____

February 25th : Gospel Ask, and it will be given to you; search, and you will findA Reading from the Holy Gospel according to St. Matthew 7:7-12

February 25th  : Gospel 

Ask, and it will be given to you; search, and you will find

A Reading from the Holy Gospel according to St. Matthew 7:7-12 
Jesus said to his disciples, ‘Ask, and it will be given to you; search, and you will find; knock, and the door will be opened to you. For the one who asks always receives; the one who searches always finds; the one who knocks will always have the door opened to him. Is there a man among you who would hand his son a stone when he asked for bread? Or would hand him a snake when he asked for a fish? If you, then, who are evil, know how to give your children what is good, how much more will your Father in heaven give good things to those who ask him!
  ‘So always treat others as you would like them to treat you; that is the meaning of the Law and the Prophets.’

The Gospel of the Lord.

February 25th : Responsorial PsalmPsalm 137(138):1-3,7-8 On the day I called, you answered me, O Lord.

February 25th  : Responsorial Psalm

Psalm 137(138):1-3,7-8 

On the day I called, you answered me, O Lord.
I thank you, Lord, with all my heart:
  you have heard the words of my mouth.
In the presence of the angels I will bless you.
  I will adore before your holy temple.

On the day I called, you answered me, O Lord.

I thank you for your faithfulness and love,
  which excel all we ever knew of you.
On the day I called, you answered;
  you increased the strength of my soul.

On the day I called, you answered me, O Lord.

You stretch out your hand and save me,
  your hand will do all things for me.
Your love, O Lord, is eternal,
  discard not the work of your hands.

On the day I called, you answered me, O Lord.

Gospel Acclamation Joel2:12-13

Glory to you, O Christ, you are the Word of God!
Now, now – it is the Lord who speaks –
come back to me with all your heart,
for I am all tenderness and compassion.
Glory to you, O Christ, you are the Word of God!

February 25th : First Reading I am alone, Lord, and have no-one but youEsther 4:17

February 25th  :  First Reading 

I am alone, Lord, and have no-one but you

Esther 4:17 
Queen Esther took refuge with the Lord in the mortal peril which had overtaken her. She besought the Lord God of Israel in these words:
‘My Lord, our King, the only one,
come to my help, for I am alone
and have no helper but you
and am about to take my life in my hands.
‘I have been taught from my earliest years, in the bosom of my family,
that you, Lord, chose
Israel out of all the nations
and our ancestors out of all the people of old times
to be your heritage for ever;
and that you have treated them as you promised.
‘Remember, Lord; reveal yourself
in the time of our distress.
‘As for me, give me courage,
King of gods and master of all power.
Put persuasive words into my mouth
when I face the lion;
change his feeling into hatred for our enemy,
that the latter and all like him may be brought to their end.
‘As for ourselves, save us by your hand,
and come to my help, for I am alone
and have no one but you, Lord.’

The Word of the Lord.

Tuesday, February 23, 2021

24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் நற்செய்தி வாசகம் இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் 

நற்செய்தி வாசகம் 

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. 

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32 
அக்காலத்தில் 

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். 

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! 

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா! 

ஆண்டவரின் அருள்வாக்கு.

24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் பதிலுரைப் பாடல் பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை. திபா 51: 1-2. 10-11. 16-17 (பல்லவி: 17b)

https://youtu.be/deQ7KUVz0D0
24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை. 

திபா 51: 1-2. 10-11. 16-17 (பல்லவி: 17b) 
1.கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 

2.என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி 

10.கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 

11.உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி 

16.ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 

17.கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி 

___ 

நற்செய்திக்கு முன் வசனம் 

யோவே 2: 12-13 

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நாம் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர். 

_____

24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் முதல் வாசகம் நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

24 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - புதன் 

முதல் வாசகம் 

நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள். 

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10 
இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார். 

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.” 

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. 

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 24th : Gospel As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a sign.A Reading from the Holy Gospel according to St.Luke 11:29-32

February 24th : Gospel 

As Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be a sign.

A Reading from the Holy Gospel according to St.Luke 11:29-32 
The crowds got even bigger, and Jesus addressed them:
  ‘This is a wicked generation; it is asking for a sign. The only sign it will be given is the sign of Jonah. For just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. On Judgement day the Queen of the South will rise up with the men of this generation and condemn them, because she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and there is something greater than Solomon here. On Judgement day the men of Nineveh will stand up with this generation and condemn it, because when Jonah preached they repented; and there is something greater than Jonah here.’

The Gospel of the Lord.

February 24th : Responsorial PsalmPsalm 50(51):3-4,12-13,18-19 A humbled, contrite heart, O God, you will not spurn.

February 24th : Responsorial Psalm

Psalm 50(51):3-4,12-13,18-19 

A humbled, contrite heart, O God, you will not spurn.

Have mercy on me, God, in your kindness.
  In your compassion blot out my offence.
O wash me more and more from my guilt
  and cleanse me from my sin.

A humbled, contrite heart, O God, you will not spurn.
A pure heart create for me, O God,
  put a steadfast spirit within me.
Do not cast me away from your presence,
  nor deprive me of your holy spirit.

A humbled, contrite heart, O God, you will not spurn.

For in sacrifice you take no delight,
  burnt offering from me you would refuse,
my sacrifice, a contrite spirit.
  A humbled, contrite heart you will not spurn.

A humbled, contrite heart, O God, you will not spurn.

Gospel Acclamation Ezk33:11

Glory and praise to you, O Christ!
I take pleasure, not in the death of a wicked man
– it is the Lord who speaks –
but in the turning back of a wicked man
who changes his ways to win life.
Glory and praise to you, O Christ!

February 24th : First Reading The Ninevites repent, and God spares themA reading from the Book of Jonah 3:1-10

February 24th :  First Reading 

The Ninevites repent, and God spares them
A reading from the Book of Jonah 3:1-10 

The word of the Lord was addressed to Jonah: ‘Up!’ he said ‘Go to Nineveh, the great city, and preach to them as I told you to.’ Jonah set out and went to Nineveh in obedience to the word of the Lord. Now Nineveh was a city great beyond compare: it took three days to cross it. Jonah went on into the city, making a day’s journey. He preached in these words, ‘Only forty days more and Nineveh is going to be destroyed.’ And the people of Nineveh believed in God; they proclaimed a fast and put on sackcloth, from the greatest to the least. The news reached the king of Nineveh, who rose from his throne, took off his robe, put on sackcloth and sat down in ashes. A proclamation was then promulgated throughout Nineveh, by decree of the king and his ministers, as follows: ‘Men and beasts, herds and flocks, are to taste nothing; they must not eat, they must not drink water. All are to put on sackcloth and call on God with all their might; and let everyone renounce his evil behaviour and the wicked things he has done. Who knows if God will not change his mind and relent, if he will not renounce his burning wrath, so that we do not perish?’ God saw their efforts to renounce their evil behaviour, and God relented: he did not inflict on them the disaster which he had threatened.

The Word of the Lord.

Monday, February 22, 2021

23 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - செவ்வாய் நற்செய்தி வாசகம் நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

23 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - செவ்வாய் 

நற்செய்தி வாசகம் 

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15 
அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். 

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.” 

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 23 : பதிலுரைப் பாடல்திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.

பிப்ரவரி 23 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18 (பல்லவி: 17b)

பல்லவி: நீதிமான்களை இறைவன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கின்றார்.
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

15
ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16
ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். - பல்லவி

17
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

பிப்ரவரி 23 : முதல் வாசகம்என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11

பிப்ரவரி 23 :   முதல் வாசகம்

என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11
ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

TUESDAY 23 FEBRUARY 2021 📖GOSPEL "So you pray like this" A Reading From The Holy Gospel According To Matthew (6, 7-15)

TUESDAY 23 FEBRUARY 2021 

📖GOSPEL 

"So you pray like this" 

A Reading From The Holy Gospel According To Matthew (6, 7-15) 
At that time, Jesus said to his disciples: “When you pray, do not repeat like the pagans: they imagine that by dint of words they will be heard. So do not imitate them, for your Father knows what you need, even before you ask for it. You therefore pray thus: Our Father, which art in heaven, hallowed be thy name, thy kingdom come, thy will be done, on earth as it is in heaven. Give us today our daily bread. Forgive us our debts, as we ourselves forgive our debtors. And do not let us enter into temptation, but deliver us from evil.
For if you forgive men for their sins, your heavenly Father will forgive you too. But if you do not forgive men, neither will your Father forgive your faults. " 

The Gospel of the Lord 

I believe in God, /....
_______________

TUESDAY 23 FEBRUARY 2021 RESPONSORIAL Respons: From all their anguish, God delivers the righteous. Psalm 33 (34)

TUESDAY 23 FEBRUARY 2021 

RESPONSORIAL 

Respons: From all their anguish, God delivers the righteous. 

Psalm 33 (34) 
Magnify the Lord with me,
let us all exalt his name together.
I seek the Lord, he answers me:
from all my fears he delivers me. R 

Whoever looks towards him will shine,
without shadow or confusion in the face.
A poor cry; the Lord hears:
he saves him from all his anguish. R 

The Lord looks at the righteous,
he listens, attentive to their cries.
The Lord confronts the wicked
to erase their memory from the earth. R 

The Lord hears those who call him
; he delivers them from all their anguish.
He is close to the broken heart,
he saves the downcast spirit. R 

___ 

🌿Gospel Acclamation 

Man will live not by bread alone, but by every word of God. 

_____________

TUESDAY 23 FEBRUARY 2021 FIRST READING My word does what pleases me from the book of the prophet Isaiah (55, 10-11)

TUESDAY 23 FEBRUARY 2021 

FIRST READING 

My word does what pleases me 

from the book of the prophet Isaiah (55, 10-11) 
Thus says the Lord: "The rain and the snow which come down from the heavens do not return there without having watered the earth, without having made it fruitful and made it germinate, giving seed to the sower and bread to him who should. eat ; thus my word, which leaves my mouth, will not come back to me without result, without having done what pleases me, without having accomplished its mission. " 

The Word of the Lord.
__________

Sunday, February 21, 2021

நற்செய்தி வாசகம் உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

நற்செய்தி வாசகம் 

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். 

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19 
அக்காலத்தில் 

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். 

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். 

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். 

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 22 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

பிப்ரவரி 22 : 
பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். - பல்லவி

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 16: 18
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர்.

பிப்ரவரி 22 : முதல் வாசகம்நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

பிப்ரவரி 22 : 
முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4
அன்புக்குரியவர்களே,

கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

22 February 2021, Monday 📖GOSPEL "You are Peter, and I will give you the keys of the kingdom of Heaven" A Reading From The Holy Gospel According To Matthew (16, 13-19)

22 February 2021, Monday 

📖GOSPEL 

"You are Peter, and I will give you the keys of the kingdom of Heaven" 

A Reading From The Holy Gospel According To Matthew (16, 13-19) 
At that time, Jesus, having arrived in the region of Caesarea-Philippi, asked his disciples: “According to the people, who is the Son of man? They answered: "For some, John the Baptist; for others, Elijah; for still others, Jeremiah or one of the prophets. "Jesus asked them:" And you, what are you saying? For you, who am I? Then Simon Peter spoke up and said: "You are the Christ, the Son of the living God!" »Speaking in his turn, Jesus said to him:« Happy are you, Simon son of Jonas: it is not flesh and blood which have revealed this to you, but my Father who is in heaven. And I tell you: You are Peter, and on this rock I will build my Church; and the power of Death will not prevail over it. I will give you the keys to the kingdom of heaven: whatever thou shalt bind on earth shall be bound in heaven, and whatsoever thou shalt loose on earth shall be loosed in heaven. " 

The Gospel of the Lord 

I believe in God, /....
_______________

22 February 2021, Monday RESPONSORIAL Respons: The Lord is my Shepherd: I cannot miss anything. Psalm 22 (23)

22 February 2021, Monday 

RESPONSORIAL 

Respons: The Lord is my Shepherd: I cannot miss anything. 

Psalm 22 (23) 
The Lord is my Shepherd:
I lack nothing.
On meadows of fresh grass,
he makes me rest. R 

He leads me to still waters
and brings me back to life;
he leads me by the right path
for the honor of his name. R 

If I cross the ravines of death,
I fear no harm,
for you are with me:
your staff guides me and reassures me. R 

You prepare the table for me
before my enemies; 
you spread the perfume on my head,
my cup is overflowing. R 

Grace and happiness are with me
every day of my life;
I will live in the house of the Lord
for the duration of my days. R 

___ 

🌿Gospel Acclamation 

Your name is Peter; I will build my church on this rock. The gates of hell shall not prevail against it, saith the Lord.

22 February 2021, Monday FIRST READING "I who am an elder and witness to the sufferings of Christ" from the first letter of Saint Peter the apostle (5, 1-4)

22 February 2021, Monday 

FIRST READING 

"I who am an elder and witness to the sufferings of Christ" 

from the first letter of Saint Peter the apostle (5, 1-4) 
Beloved, the elders in office among you, I urge them, I who am an elder like them and a witness of the sufferings of Christ, communing in the glory which will be revealed: be the shepherds of the flock of God which is with you; watch over him, not by compulsion but willingly, according to God; not out of greed but out of devotion; not by commanding as masters those entrusted to you, but by becoming models of the flock. And, when the Head of the Pastors appears, you will receive the crown of glory which does not wither. 

The Word of the Lord.
__________

21 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15

21 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு 

நற்செய்தி வாசகம் 

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்; வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 12-15 

அக்காலத்தில் 

தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். 

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.