Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, December 5, 2020

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟* ```Response: "Lord, show us your greatness and deliver us.``` *Psalms 85:9-10,11-12,13-14*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟* 

```Response: 
"Lord, show us your greatness and deliver us.``` 

*Psalms 85:9-10,11-12,13-14* 
9 His saving help is near for those who fear him, his glory will dwell in our land.
10 Faithful Love and Loyalty join together, Saving Justice and Peace embrace. 

11 Loyalty will spring up from the earth, and Justice will lean down from heaven.
12 Yahweh will himself give prosperity, and our soil will yield its harvest. 

13 Justice will walk before him, treading out a path.
14Justice will walk before him, and he will set his steps upon the way.
____

Daily Reading for Sunday December 6, 2020_ *FIRST READING* _Here is Lord Yahweh coming with power,_ *🕯️A Reading from the Book of Isaiah 40:1-5, 9-11*

_🍁Daily Reading for Sunday December 6, 2020_ 

*FIRST READING* 

_Here is Lord Yahweh coming with power,_ 

*🕯️A Reading from the Book of Isaiah 40:1-5, 9-11* 
'Console my people, console them,' says your God.
'Speak to the heart of Jerusalem and cry to her that her period of service is ended, that her guilt has been atoned for, that, from the hand of Yahweh, she has received double punishment for all her sins.' A voice cries, 'Prepare in the desert a way for Yahweh. Make a straight highway for our God across the wastelands. Let every valley be filled in, every mountain and hill be levelled, every cliff become a plateau, every escarpment a plain; then the glory of Yahweh will be revealed and all humanity will see it together, for the mouth of Yahweh has spoken.' Go up on a high mountain, messenger of Zion. Shout as loud as you can, messenger of Jerusalem! Shout fearlessly, say to the towns of Judah, 'Here is your God.' Here is Lord Yahweh coming with power, his arm maintains his authority, his reward is with him and his prize precedes him. He is like a shepherd feeding his flock, gathering lambs in his arms, holding them against his breast and leading to their rest the mother ewes.

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்* _ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்''_ *🕯️மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8*

*📖நற்செய்தி வாசகம்* 

_ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்''_ 

*🕯️மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8* 
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார்.
அவர் தொடர்ந்து, என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறைசாற்றினார். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

இரண்டாம் வாசகம்* _யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்._ *திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14*

*🍁இரண்டாம் வாசகம்* 

_யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்._ 

*திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14* 
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*
_____ 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்*_பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்._திபா 85: 8-9. 10-11. 12-13

*🌿பதிலுரைப் பாடல்*

_பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்._

திபா 85: 8-9. 10-11. 12-13 
8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு,
தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி 

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி 

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி

முதல் வாசகம்* _"இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்;_ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11*

_🍃திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு 06/12/2020_ 

*முதல் வாசகம்* 

_"இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்;_ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11* 
ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: "அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்."
குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்;
ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்." சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*

Friday, December 4, 2020

GOSPEL* _You received without charge, give without charge._ *🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 9:35-37, 10:1, 6-8*

*📖GOSPEL* 

_You received without charge, give without charge._ 

*🕯A Reading from the Holy Gospel accoding to Matthew 9:35-37, 10:1, 6-8* 
```Jesus made a tour through all the towns and villages, teaching in their synagogues, proclaiming the good news of the kingdom and curing all kinds of disease and all kinds of illness. And when he saw the crowds he felt sorry for them because they were harassed and dejected, like sheep without a shepherd. Then he said to his disciples, 'The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send out labourers to his harvest.' He summoned his twelve disciples and gave them authority over unclean spirits with power to drive them out and to cure all kinds of disease and all kinds of illness. go instead to the lost sheep of the House of Israel. And as you go, proclaim that the kingdom of Heaven is close at hand.
Cure the sick, raise the dead, cleanse those suffering from virulent skin-diseases, drive out devils. You received without charge, give without charge.``` 

*The Gospel of the Lord.* 

I believe in God, /...