Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, December 3, 2023

December 4th : Responsorial PsalmPsalm 116(117):1-2Go out to the whole world; proclaim the Good News.or Alleluia!

December 4th : Responsorial Psalm

Psalm 116(117):1-2

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!
O praise the Lord, all you nations,
acclaim him all you peoples!

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

Strong is his love for us;
he is faithful for ever.

Go out to the whole world; proclaim the Good News.
or Alleluia!

December 4th : Feast Reading.THE ANOINTED BEARER OF GLAD TIDINGSA Reading from the Book of Isaiah 61:1-3

December 4th :  Feast Reading.

THE ANOINTED BEARER OF GLAD TIDINGS

A Reading from the Book of Isaiah 61:1-3
The spirit of the Lord GOD is upon me, because the LORD has anointed me; He has sent me to bring good news to the afflicted, to bind up the brokenhearted,To proclaim liberty to the captives, release to the prisoners,To announce a year of favor from the LORD and a day of vindication by our God; To comfort all who mourn;to place on those who mourn in Zion a diadem instead of ashes,To give them oil of gladness instead of mourning,a glorious mantle instead of a faint spirit. They will be called oaks of justice, the planting of the LORD to show his glory.

The Word of the Lord.

Saturday, December 2, 2023

டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம்விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37

டிசம்பர்  3 :  நற்செய்தி வாசகம்

விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37
அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.

அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

டிசம்பர் 3 : இரண்டாம் வாசகம்நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

டிசம்பர் 3 :  இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
சகோதரர் சகோதரிகளே,

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7
அல்லேலூயா, அல்லேலூயா!

 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

டிசம்பர் 3 : பதிலுரைப் பாடல்திபா 80: 1ac,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

டிசம்பர் 3 :  பதிலுரைப் பாடல்

திபா 80: 1ac,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
1ac
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2b
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! - பல்லவி

14
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! - பல்லவி

17
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். - பல்லவி

December 3rd : Gospel If he comes unexpectedly, he must not find you asleepA reading from the Holy Gospel according to St.Mark 13:33-37

December 3rd :  Gospel  

If he comes unexpectedly, he must not find you asleep

A reading from the Holy Gospel according to St.Mark 13:33-37
Jesus said to his disciples: ‘Be on your guard, stay awake, because you never know when the time will come. It is like a man travelling abroad: he has gone from home, and left his servants in charge, each with his own task; and he has told the doorkeeper to stay awake. So stay awake, because you do not know when the master of the house is coming, evening, midnight, cockcrow, dawn; if he comes unexpectedly, he must not find you asleep. And what I say to you I say to all: Stay awake!’

The Word of the Lord.

டிசம்பர் 3 : திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறுமுதல் வாசகம்நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16b-17; 64: 1, 3b-8

டிசம்பர் 3 :  திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16b-17; 64: 1, 3b-8
ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து ‘எம் மீட்பர்’ என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!

நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்.

இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன.

உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

ஆண்டவரின் அருள்வாக்கு.