Monday, June 17, 2024
ஜூன் 18 : நற்செய்தி வாசகம்உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
ஜூன் 18 : பதிலுரைப் பாடல்திபா 51: 1-2. 3-4ab. 9,14 (பல்லவி: 1a)பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
ஜூன் 18 : முதல் வாசகம்இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29
June 18th : Gospel Pray for those who persecute youA Reading from the Holy Gospel according to St.Matthew 5: 43-48
June 18h : Responsorial PsalmPsalm 50(51):3-6,11,16 Have mercy on us, Lord, for we have sinned.
June 18th : First ReadingThe punishment of Ahab and Jezebel foretoldA reading from the first book of Kings 21: 17-29
Sunday, June 16, 2024
ஜூன் 17 : நற்செய்தி வாசகம் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
ஜூன் 17 : நற்செய்தி வாசகம்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்', ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.