Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, August 10, 2024

August 11th : Second ReadingForgive each other as readily as God forgave you.A reading from the letter of St.Paul to the Ephesians 4: 30-5:2

August 11th :  Second Reading

Forgive each other as readily as God forgave you.

A reading from the letter of St.Paul to the Ephesians 4: 30-5:2 
Do not grieve the Holy Spirit of God who has marked you with his seal for you to be set free when the day comes. Never have grudges against others, or lose your temper, or raise your voice to anybody, or call each other names, or allow any sort of spitefulness. Be friends with one another, and kind, forgiving each other as readily as God forgave you in Christ.
  Try, then, to imitate God as children of his that he loves and follow Christ loving as he loved you, giving himself up in our place as a fragrant offering and a sacrifice to God.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

August 11th : Responsorial PsalmPsalm 33(34):2-9 Taste and see that the Lord is good.

August 11th :  Responsorial Psalm

Psalm 33(34):2-9 

Taste and see that the Lord is good.
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

Taste and see that the Lord is good.

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

Taste and see that the Lord is good.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

Taste and see that the Lord is good.

The angel of the Lord is encamped
  around those who revere him, to rescue them.
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

Taste and see that the Lord is good.

August 11th : First Reading The angel gives Elijah food to reach the mountain of God.A reading from the first book of Kings 19: 4-8

August 11th :  First Reading 

The angel gives Elijah food to reach the mountain of God.

A reading from the first book of Kings 19: 4-8 
Elijah went into the wilderness, a day’s journey, and sitting under a furze bush wished he were dead. ‘O Lord,’ he said ‘I have had enough. Take my life; I am no better than my ancestors.’ Then he lay down and went to sleep. But an angel touched him and said, ‘Get up and eat.’ He looked round, and there at his head was a scone baked on hot stones, and a jar of water. He ate and drank and then lay down again. But the angel of the Lord came back a second time and touched him and said, ‘Get up and eat, or the journey will be too long for you.’ So he got up and ate and drank, and strengthened by that food he walked for forty days and forty nights until he reached Horeb, the mountain of God.

The Word of the Lord.

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

ஆகஸ்ட் 11 : நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51
அக்காலத்தில்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஆகஸ்ட் 11 : இரண்டாம் வாசகம்கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2

ஆகஸ்ட் 11 : இரண்டாம் வாசகம்

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2
சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 51

அல்லேலூயா, அல்லேலூயா! 

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆகஸ்ட் 11 : பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

ஆகஸ்ட் 11 : முதல் வாசகம்அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

ஆகஸ்ட் 11 :  முதல் வாசகம்

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8
அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.