August 29th : Gospel
Wednesday, August 28, 2024
August 29th : Gospel The beheading of John the Baptist A reading from the Holy Gospel according to St.Mark 6:17-29
August 29th. : Responsorial Psalm Psalm 70(71):1-6,15,17
August 29th. : Responsorial Psalm
August 29th : First reading Stand up and tell them all I command you; do not be dismayed at their presence. A reading from the book of Jeremiah 1:17-19
August 29th : First reading
Tuesday, August 27, 2024
ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம் நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32
ஆகஸ்ட் 28 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32
அக்காலத்தில்
இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; ‘எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஆகஸ்ட் 28 : பதிலுரைப் பாடல் திபா 128: 1-2. 4-5 . (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
ஆகஸ்ட் 28 : பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2. 4-5 . (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2.உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி
4.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5.ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.
ஆகஸ்ட் 28 : முதல் வாசகம் உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது. திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10, 16-18
ஆகஸ்ட் 28 : முதல் வாசகம்
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10, 16-18
அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!
இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
August 28th : Gospel You are the sons of those who murdered the prophets. A Reading from the Holy Gospel according to St.Matthew 23: 27-32
August 28th : Gospel
You are the sons of those who murdered the prophets.
A Reading from the Holy Gospel according to St.Matthew 23: 27-32
Jesus said: ‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who are like whitewashed tombs that look handsome on the outside, but inside are full of dead men’s bones and every kind of corruption. In the same way you appear to people from the outside like good honest men, but inside you are full of hypocrisy and lawlessness.
‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who build the sepulchres of the prophets and decorate the tombs of holy men, saying, “We would never have joined in shedding the blood of the prophets, had we lived in our fathers’ day.” So! Your own evidence tells against you! You are the sons of those who murdered the prophets! Very well then, finish off the work that your fathers began.’
The Gospel of the Lord.