Sunday, September 15, 2024
செப்டம்பர் 16 : நற்செய்தி வாசகம்இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10
செப்டம்பர் 16 : பதிலுரைப் பாடல்திபா 40: 6-7. 8. 9. 16 (பல்லவி: 1 கொரி 11: 26b)
செப்டம்பர் 16 : முதல் வாசகம்உங்களிடையே பிளவுகள் இருக்கும் நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26
September 16th : Gospel Give the word, and my servant will be healedA Reading from the Holy Gospel according to St.Luke 7: 1-10
September 16th : Responsorial PsalmPsalm 39(40):7-10,17 Proclaim the death of the Lord, until he comes.
September 16th : First ReadingIf each one hurries to be first, it is not the Lord's Supper you are eatingA Reading from the First Letter of St.Paul to the Corinthians 11:17-26,33
Saturday, September 14, 2024
செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம் `மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35.
செப்டம்பர் 15 : நற்செய்தி வாசகம்
`மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35.
அக்காலத்தில்
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
“மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.