Thursday, January 2, 2025
சனவரி 3 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
சனவரி 3 : நற்செய்தி வாசகம்இதோ! கடவுளின் செம்மறி.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34
சனவரி 3 : முதல் வாசகம்கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29- 3: 6
January 3rd : Gospel 'Look: there is the Lamb of God'A reading from the Holy Gospel according to St.John 1:29-34
anuary 3rd : Responsorial PsalmPsalm 97(98):1,3-6
January 3rd : First reading Everyone must try to be as pure as ChristA reading from the first book of St.John 2:29-3:6
Wednesday, January 1, 2025
சனவரி 2 : நற்செய்தி வாசகம் நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28
சனவரி 2 : நற்செய்தி வாசகம்
நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28
அக்காலத்தில்
எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார்.
பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.