Sunday, June 1, 2025
ஜூன் 2 : நற்செய்தி வாசகம்துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33
ஜூன் 2 : பதிலுரைப் பாடல்திபா 68: 1-2. 3-4ac. 5-6ab (பல்லவி: 32a)
ஜூன் 2 : முதல் வாசகம்நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
June 2nd : Gospel Be brave, for I have conquered the worldA Reading from the Holy Gospel according to St.John 16: 29-33
June 2nd : Responsorial PsalmPsalm 67(68):2-7 Kingdoms of the earth, sing to God.orAlleluia!
June 2nd : First Reading The moment Paul laid hands on them the Holy Spirit came down on themA Reading from the Acts of Apostles 19: 1-8
Saturday, May 31, 2025
ஜூன் 1 : நற்செய்தி வாசகம் இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53
ஜூன் 1 : நற்செய்தி வாசகம்
இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்.
பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.