Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, June 12, 2025

ஜூன் 13 : நற்செய்தி வாசகம் ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. ✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

 ஜூன் 13 :  நற்செய்தி வாசகம்

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


ஜூன் 13 : பதிலுரைப் பாடல் திபா 116: 10-11. 15-16. 17-18 (பல்லவி: 17a) பல்லவி: ஆண்டவரே, நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். 10

 ஜூன் 13 :  பதிலுரைப் பாடல்

திபா 116: 10-11. 15-16. 17-18 (பல்லவி: 17a)

பல்லவி: ஆண்டவரே, நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.


10

‘மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.

11

‘எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று என் மனக் கலக்கத்தில் நான் சொன்னேன். - பல்லவி

15

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.

16

ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி

17

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;

18

இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 2: 15-16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.


ஜுன் 13 : முதல் வாசகம் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் உங்களையும் உயிர்த்தெழச் செய்வார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15

 ஜுன் 13 :   முதல் வாசகம்

இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் உங்களையும் உயிர்த்தெழச் செய்வார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-15


சகோதரர் சகோதரிகளே, இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக் கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது. நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.

``நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 13th : Gospel If your right eye should cause you to sin, tear it out A Reading from the Holy Gospel according to St. Matthew 5: 27-32

 June 13th :  Gospel 

If your right eye should cause you to sin, tear it out

A Reading from the Holy Gospel according to St. Matthew 5: 27-32 

Jesus said to his disciples: ‘You have learnt how it was said: You must not commit adultery. But I say this to you: if a man looks at a woman lustfully, he has already committed adultery with her in his heart. If your right eye should cause you to sin, tear it out and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body thrown into hell. And if your right hand should cause you to sin, cut it off and throw it away; for it will do you less harm to lose one part of you than to have your whole body go to hell.

  ‘It has also been said: Anyone who divorces his wife must give her a writ of dismissal. But I say this to you: everyone who divorces his wife, except for the case of fornication, makes her an adulteress; and anyone who marries a divorced woman commits adultery.’

The Word of the Lord.

June 13th : Responsorial Psalm Psalm 115(116):10-11,15-18

 June 13th : Responsorial Psalm

Psalm 115(116):10-11,15-18 

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or Alleluia!

I trusted, even when I said:

  ‘I am sorely afflicted,’

and when I said in my alarm:

  ‘No man can be trusted.’

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or Alleluia!

O precious in the eyes of the Lord

  is the death of his faithful.

Your servant, Lord, your servant am I;

  you have loosened my bonds.

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or Alleluia!

A thanksgiving sacrifice I make;

  I will call on the Lord’s name.

My vows to the Lord I will fulfil

  before all his people.

A thanksgiving sacrifice I make to you, O Lord.

or Alleluia!

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,

says the Lord,

I know them and they follow me.

Alleluia!

June 13th : First Reading Such an overwhelming power comes from God and not from us A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15.

 June 13th : First Reading

Such an overwhelming power comes from God and not from us

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 4: 7-15. 

We are only the earthenware jars that hold this treasure, to make it clear that such an overwhelming power comes from God and not from us. We are in difficulties on all sides, but never cornered; we see no answer to our problems, but never despair; we have been persecuted, but never deserted; knocked down, but never killed; always, wherever we may be, we carry with us in our body the death of Jesus, so that the life of Jesus, too, may always be seen in our body. Indeed, while we are still alive, we are consigned to our death every day, for the sake of Jesus, so that in our mortal flesh the life of Jesus, too, may be openly shown. So death is at work in us, but life in you.

  But as we have the same spirit of faith that is mentioned in scripture – I believed, and therefore I spoke – we too believe and therefore we too speak, knowing that he who raised the Lord Jesus to life will raise us with Jesus in our turn, and put us by his side and you with us. You see, all this is for your benefit, so that the more grace is multiplied among people, the more thanksgiving there will be, to the glory of God.

The Word of the Lord.

Wednesday, June 11, 2025

ஜூன் 12 : நற்செய்தி வாசகம் தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26

 ஜூன் 12 :  நற்செய்தி வாசகம்

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 20-26


அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.