Friday, June 20, 2025
ஜூன் 21 : நற்செய்தி வாசகம்நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34.
ஜூன் 21 : பதிலுரைப் பாடல்திபா 34: 7-8. 9-10. 11-12 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
ஜூன் 21 : முதல் வாசகம்நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-10
June 21st : GospelDo not worry about tomorrow: your holy Father knows your needs.A Reading from the Holy Gospel according to St.Matthew 6: 24-34
June 21st : Responsorial PsalmPsalm 33(34):8-13 Taste and see that the Lord is good
June 21st : First reading'My power is at its best in weakness'.A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 12: 1-10.
Thursday, June 19, 2025
ஜூன் 20 : நற்செய்தி வாசகம் உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
ஜூன் 20 : நற்செய்தி வாசகம்
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 19-23
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்!”
ஆண்டவரின் அருள்வாக்கு.