Sunday, September 7, 2025
செப்டம்பர் 8 : நற்செய்தி வாசகம்மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23
செப்டம்பர் 8 : பதிலுரைப் பாடல்திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
செப்டம்பர் 8 : தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழாமுதல் வாசகம்இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a
September 8th : GospelThe ancestry and conception of Jesus ChristA reading from the Holy Gospel according to St.Matthew 1: 1-16,18-23
September 8th : Responsorial PsalmPsalm 13:6, 7a (R. Isaiah 61:10a)Response : I will greatly rejoice in the Lord.
September 8th : First Reading He will stand and feed his flock with the power of the LordA Reading from the Book of Micah 5: 2-5a
Saturday, September 6, 2025
நற்செய்தி வாசகம் உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
நற்செய்தி வாசகம்
உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில்
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.