Sunday, November 23, 2025
நவம்பர் 24 : நற்செய்தி வாசகம்வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
நவம்பர் 24 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 29ac. 30-31. 32-33 (பல்லவி: 29b)பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
நவம்பர் 24 : முதல் வாசகம்தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20
November 24th : Gospel The widow's miteA reading from the Holy Gospel according to St.Luke 21:1-4
November 24th : Responsorial PsalmDaniel 3:52, 53, 54, 55, 56 (R. see 52b)Response : You are to be praised and highly exalted forever!
November 24th : First readingDaniel and his companions are trained to be the king's servants in BabylonA reading from the book of Daniel 1:1-6,8-20
Friday, November 21, 2025
நவம்பர் 23 : நற்செய்தி வாசகம் இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43
நவம்பர் 23 : நற்செய்தி வாசகம்
இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43
அக்காலத்தில்
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.