Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, November 29, 2025

November 30th : First Reading The Lord gathers all nations together into the eternal peace of God's kingdom A Reading from the Book of the Prophet Isaiah 2:1-5

 November 30th :   First Reading 

The Lord gathers all nations together into the eternal peace of God's kingdom

A Reading from the Book of the Prophet Isaiah 2:1-5 

The word that Isaiah the son of Amoz saw concerning Judah and Jerusalem. It shall come to pass in the latter days that the mountain of the house of the Lord shall be established as the highest of the mountains, and shall be lifted up above the hills; and all the nations shall flow to it, and many peoples shall come, and say: “Come, let us go up to the mountain of the Lord, to the house of the God of Jacob, that he may teach us his ways and that we may walk in his paths.” For out of Zion shall go forth the law, and the word of the Lord from Jerusalem. He shall judge between the nations, and shall decide disputes for many peoples; and they shall beat their swords into ploughshares, and their spears into pruning-hooks; nation shall not lift up sword against nation, neither shall they learn war any more. O house of Jacob, come, let us walk in the light of the Lord.

The word of the Lord.


நற்செய்தி வாசகம் விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44

 நற்செய்தி வாசகம்

விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44


அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”


ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் வாசகம் நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

 இரண்டாம் வாசகம்

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதரர் சகோதரிகளே,


இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

 பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.


1

‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

2

எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.

5

அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!

7

உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8

“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.

9

நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

 திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5


யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Friday, November 28, 2025

நவம்பர் 29 : நற்செய்தி வாசகம்மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

நவம்பர் 29 :  நற்செய்தி வாசகம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------------------------------
உங்கள் உள்ளம் குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

I தானியேல் 7: 15-27
II லூக்கா 21: 34-36

உங்கள் உள்ளம் குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்

குடிகாரனும் இயேசுவும்:

நன்றாகக் குடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த குடிகாரன் ஒருவன், ஒரு குளத்தில் போதகர் ஒருவர் முழுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருபதைக் கண்டான். அவரிடம் முழுக்குத் திருமுழுக்குப் பெற பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். முழுக்குத் திருமுழுக்கு என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் குடிகாரன் அவர்களோடு வரிசையில் நின்றான்.

அவனுடைய முறை வந்தது. போதகர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, “இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்றார். அவன் இல்லை என்றதும், மீண்டுமாக அவர் அவனை நீருக்குள் முக்கி எடுத்து, முன்புகேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் அவன் அதே பதிலைச் சொன்னதால், மூன்றாம் முறையாக அவனை அவர் நீருக்குள் முக்கி எடுத்தார். இந்த முறை அவர் அவனை, அவனுக்கு மூச்சுமுட்டுகிற வரை முக்கி எடுத்ததால், அவன் சற்றே பதறிப்போனான். “இந்த முறையாவது நீ இயேசுவைக் கண்டுகொண்டாயா?” என்று போதகர் அவனிடம் தன் குரலை உயர்த்திக் கேட்டபோது, அவன் மிகவும் அப்பாவியாய், “இங்குதான் இயேசு விழுந்தாரா?” என்றான்.

வேடிக்கையான நிகழ்வாக இது இருந்தாலும், குடிக்கு அடிமையான ஒருவருடைய வாழ்க்கை எப்படிப் பாழாய்ப்போகிறது என்பதை உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, குடிக்கு அடிமையாகிவிடாமல் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகின்ற இயேசு, அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், உங்கள் உள்ளம் குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை ஆகியவற்றால் மந்த மடைந்துவிடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்.

குடிவெறியர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள முடியாது (1 கொரி 6:10; கலா 5:21). அதனால் இயேசு, குடிவேறியினாலும், இன்ன பிறவற்றாலும் உள்ளம் மந்தமடைந்திடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்கிறார். மேலும், மானிட மகனை எதிர்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாய் இருக்க விழிப்பாய் இருந்து மன்றாடுங்கள் என்கிறார்.

இவ்வாறு எவர் ஒருவர் குடிவேறியினால் மந்தமடைந்துவிடாது, விழிந்திருந்து மன்றாடுகின்றாரோ, அவர் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, ஆட்சியையும் அரசுரிமையையும் பெறுவார். நாம் உன்னதரின் புனித மக்களாய்த் திகழ்ந்து, இறையாட்சியைப் பெறத் தயாரா?

சிந்தனைக்கு:

 குடியினால் மூளையை அடகு வைத்தவன், எல்லாவற்றையும் அடகு வைப்பான்.

 குடி ஒருவனுடைய மூளையை மழுங்கடித்து, அவனை முன்னேற விடாமல் செய்துவிடுகின்றது.

 குடிக்கு அடிமையாய் இருப்பதைவிட, ஆண்டவருக்கு அடிமையாய் இருப்போருக்கு ஆசிகள் பல.

ஆன்றோர் வாக்கு:

‘மனிதர்களிடம் இருக்கும் மிக வலிமையான ஆயுதம் இறைவேண்டல்’ என்பார் காந்தியடிகள். ஆகையால், நமது இறைவேண்டலால் சோதனைகளை முறியடித்து, இறைவனின் அன்பு மக்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

நவம்பர் 29 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.

நவம்பர் 29 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 59-60. 61-62. 63-64 (பல்லவி: 59b)

பல்லவி: என்றென்றும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடி, போற்றுங்கள்.
59
மண்ணுலக மாந்தர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
60
இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

61
ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
62
ஆண்டவரின் ஊழியரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

63
நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்;
64
தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா!

 மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.