Wednesday, October 9, 2024
October 10th : Gospel Ask, and it will be given to youA Reading from the Holy Gospel according to St.Luke 11:5-13
October 10th : Responsorial Psalm Luke 1:69-75 Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.
October 10th : First ReadingYou received the Spirit because you believed what was preachedA Reading from the Letter of St.Paul to the Galatians 3:1-5
அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13
அக்டோபர் 10 : பதிலுரைப் பாடல்லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
அக்டோபர் 10 : முதல் வாசகம்நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5
Tuesday, October 8, 2024
அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம் ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம்
ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.