Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, July 18, 2025

ஜூலை 19 : நற்செய்தி வாசகம் இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார். மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21

 ஜூலை 19  : நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21


அக்காலத்தில்

பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:

“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 19 : பதிலுரைப் பாடல் திபா 136: 1,23-24. 10-12. 13-15 (பல்லவி: ) பல்லவி: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஜூலை 19  :   பதிலுரைப் பாடல்

திபா 136: 1,23-24. 10-12. 13-15 (பல்லவி: )

பல்லவி: என்றும் உள்ளது அவரது பேரன்பு.


அல்லது: அல்லேலூயா.

1

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு.

23

தாழ்வுற்றிருந்த நம்மை நினைவுகூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

24

நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. - பல்லவி

10

எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

11

அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

12

தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. - பல்லவி

13

செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

14

அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

15

பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

ஜூலை 19 : முதல் வாசகம் எகிப்து நாட்டினின்று இஸ்ரயேல் மக்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 37-42



ஜூலை 19 : முதல் வாசகம்

எகிப்து நாட்டினின்று இஸ்ரயேல் மக்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே!

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 37-42

அந்நாள்களில்

இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர். மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை என்று பெருந் தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன. எகிப்திலிருந்து கொண்டு வந்த பிசைந்த மாவைக் கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமல் இருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற் போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!

எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்! நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது. எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாட வேண்டிய இரவும் இதுவே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 19th : Gospel He cured them all but warned them not to make him known. A Reading from the Holy Gospel according to St.Matthew 12: 14-21

 July 19th :  Gospel

He cured them all but warned them not to make him known.

A Reading from the Holy Gospel according to St.Matthew 12: 14-21 

The Pharisees went out and began to plot against Jesus, discussing how to destroy him.

  Jesus knew this and withdrew from the district. Many followed him and he cured them all, but warned them not to make him known. This was to fulfil the prophecy of Isaiah:

Here is my servant whom I have chosen,

my beloved, the favourite of my soul.

I will endow him with my spirit,

and he will proclaim the true faith to the nations.

He will not brawl or shout,

nor will anyone hear his voice in the streets.

He will not break the crushed reed,

nor put out the smouldering wick

till he has led the truth to victory:

in his name the nations will put their hope.

The Word of the Lord.

July 19th : Responsorial Psalm Psalm 135(136):1,10-15,23-24

 July 19th : Responsorial Psalm

Psalm 135(136):1,10-15,23-24

Great is his love, love without end.

or Alleluia.

O give thanks to the Lord for he is good.

Great is his love, love without end.

or Alleluia.

He remembered us in our distress.

Great is his love, love without end.

or Alleluia.

And he snatched us away from our foes.

Great is his love, love without end.

or Alleluia.

The first-born of the Egyptians he smote.

Great is his love, love without end.

or Alleluia.

He brought Israel out from their midst.

Great is his love, love without end.

or Alleluia.

Arm outstretched, with power in his hand.

Great is his love, love without end.

or Alleluia.

He divided the Red Sea in two.

Great is his love, love without end.

or Alleluia.

He made Israel pass through the midst.

Great is his love, love without end.

orAlleluia. 

He flung Pharaoh and his force in the sea.

Great is his love, love without end.

or Alleluia.

Gospel Acclamation Ps118:27

Alleluia, alleluia!

Make me grasp the way of your precepts,

and I will muse on your wonders.

Alleluia!


July 19th : First Reading The sons of Israel leave Egypt hurriedly by night. A Reading from the Book of Exodus 12: 37-42.

 July 19th :  First Reading 

The sons of Israel leave Egypt hurriedly by night.

A Reading from the Book of Exodus 12: 37-42. 

The sons of Israel left Rameses for Succoth, about six hundred thousand on the march – all men – not counting their families. People of various sorts joined them in great numbers; there were flocks, too, and herds in immense droves. They baked cakes with the dough which they had brought from Egypt, unleavened because the dough was not leavened; they had been driven out of Egypt, with no time for dallying, and had not provided themselves with food for the journey. The time that the sons of Israel had spent in Egypt was four hundred and thirty years. And on the very day the four hundred and thirty years ended, all the array of the Lord left the land of Egypt. The night, when the Lord kept vigil to bring them out of the land of Egypt, must be kept as a vigil in honour of the Lord for all their generations.

The Word of the Lord.

Thursday, July 17, 2025

ஜூலை 18 : நற்செய்தி வாசகம் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே. ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

 ஜூலை 18 :  நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8


அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், “பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்” என்றார்கள்.

அவரோ அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.