Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, October 9, 2025

அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம் நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

 அக்டோபர் 10 :  நற்செய்தி வாசகம்

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26


அக்காலத்தில்

மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர். வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.

அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 10 : பதிலுரைப் பாடல் திபா 9: 1-2. 5,15. 7b-8 (பல்லவி: 8a) பல்லவி: உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.

 அக்டோபர் 10 :  பதிலுரைப் பாடல்

திபா 9: 1-2. 5,15. 7b-8 (பல்லவி: 8a)

பல்லவி: உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.


1

ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

2

உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். - பல்லவி

5

வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.

15

வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. - பல்லவி

7b

ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.

8

உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 12: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! 

இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 10 : முதல் வாசகம் ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2

 அக்டோபர் 10 :  முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2


குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின.

உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்.

சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 10th : Gospel The finger of God has overtaken you A reading from the Holy Gospel according to St.Luke 11:15-26

 October 10th :  Gospel 

The finger of God has overtaken you

A reading from the Holy Gospel according to St.Luke 11:15-26 

At that time: [When Jesus had cast out a demon,] some of the people said, “He casts out demons by Beelzebul, the prince of demons”, while others, to test him, kept seeking from him a sign from heaven. But he, knowing their thoughts, said to them, “Every kingdom divided against itself is laid waste, and a divided household falls. And if Satan also is divided against himself, how will his kingdom stand? For you say that I cast out demons by Beelzebul. And if I cast out demons by Beelzebul, by whom do your sons cast them out? Therefore they will be your judges. But if it is by the finger of God that I cast out demons, then the kingdom of God has come upon you. When a strong man, fully armed, guards his own palace, his goods are safe; but when one stronger than he attacks him and overcomes him, he takes away his armour in which he trusted and divides his spoil. Whoever is not with me is against me, and whoever does not gather with me scatters. “When the unclean spirit has gone out of a person, it passes through waterless places seeking rest, and finding none it says, ‘I will return to my house from which I came.’ And when it comes, it finds the house swept and put in order. Then it goes and brings seven other spirits more evil than itself, and they enter and dwell there. And the last state of that person is worse than the first.”

The Word of the Lord.

October 10th : Responsorial Psalm Psalm 9:2–3, 6 and 16, 8–9 (R. see 9a) Response : The Lord will judge the world with justice.

 October 10th : Responsorial Psalm

Psalm 9:2–3, 6 and 16, 8–9 (R. see 9a)

Response : The Lord will judge the world with justice.

I will praise you, Lord, with all my heart; all your wonders I will confess. I will rejoice in you and be glad, and sing psalms to your name, O Most High.

Response : The Lord will judge the world with justice.

You have rebuked the nations, destroyed the wicked; you have wiped out their name forever and ever. The nations have fallen in the pit which they made; their feet have been caught in the snare they laid.

Response : The Lord will judge the world with justice.

But the Lord sits enthroned forever; he has set up his throne for judgment. He will judge the world with justice; he will govern the peoples with equity.

Response : The Lord will judge the world with justice.

Gospel Acclamation

Alleluia

V. Alleluia.

R. Alleluia.

V. Now will the ruler of this world be cast out, says the Lord; and I, when I am lifted up from the earth, will draw all people to myself.

R. Alleluia.

October 10th : First reading Let all tremble, for the day of the Lord is coming A reading from the book of Joel 1:13-15,2:1-2

 October 10th :  First reading

Let all tremble, for the day of the Lord is coming

A reading from the book of Joel 1:13-15,2:1-2 

Put on sackcloth and lament, O priests; wail, O ministers of the altar. Go in, pass the night in sackcloth, O ministers of my God! Because grain offering and drink offering are withheld from the house of your God. Consecrate a fast; call a solemn assembly. Gather the elders and all the inhabitants of the land to the house of the Lord your God, and cry out to the Lord. Alas for the day! For the day of the Lord is near, and as destruction from the Almighty it comes. Blow a trumpet in Sion; sound an alarm on my holy mountain! Let all the inhabitants of the land tremble, for the day of the Lord is coming; it is near, a day of darkness and gloom, a day of clouds and thick darkness! Like blackness there is spread upon the mountains a great and powerful people; their like has never been before, nor will be again after them through the years of all generations.

The word of the Lord.

Wednesday, October 8, 2025

அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம் கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

 அக்டோபர் 9 :  நற்செய்தி வாசகம்

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13


அக்காலத்தில்

இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

ஆண்டவரின் அருள்வாக்கு.