Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, October 30, 2025

அக்டோபர் 31 : நற்செய்தி வாசகம்தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்டோபர் 31 : நற்செய்தி வாசகம்

தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6
அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 31 : பதிலுரைப் பாடல்திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

அக்டோபர் 31 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 12-13. 14-15. 19-20 (பல்லவி: 12)

பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
12
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். - பல்லவி

14
அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. - பல்லவி

19
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 31 : முதல் வாசகம்என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5

அக்டோபர் 31 :  முதல் வாசகம்

என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு.

என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 31st : Gospel'Is it against the law to cure a man on the sabbath?'A reading from the Holy Gospel according to St.Luke 14:1-6

October 31st :  Gospel

'Is it against the law to cure a man on the sabbath?'

A reading from the Holy Gospel according to St.Luke 14:1-6 

One Sabbath, when Jesus went to dine at the house of a ruler of the Pharisees, they were watching him carefully. And behold, there was a man before him who had dropsy. And Jesus responded to the lawyers and Pharisees, saying, “Is it lawful to heal on the Sabbath, or not?” But they remained silent. Then he took him and healed him and sent him away. And he said to them, “Which of you, having a son or an ox that has fallen into a well on a Sabbath day, will not immediately pull him out?” And they could not reply to these things.

The Word of the Lord.

October 31st : Responsorial PsalmPsalm 147:12–13, 14–15, 19–20 (R. 12a)

October 31st : Responsorial Psalm

Psalm 147:12–13, 14–15, 19–20 (R. 12a)

Response :  O Jerusalem, glorify the Lord!
O Jerusalem, glorify the Lord! O Sion, praise your God! He has strengthened the bars of your gates; he has blessed your children within you.

R.:  O Jerusalem, glorify the Lord!

He established peace on your borders; he gives you your fill of finest wheat. He sends out his word to the earth, and swiftly runs his command.

R.:  O Jerusalem, glorify the Lord!

He reveals his word to Jacob; to Israel, his decrees and judgments. He has not dealt thus with other nations; he has not taught them his judgments.

R.:  O Jerusalem, glorify the Lord!

Gospel Acclamation

Alleluia
V. Alleluia.

R. Alleluia.

V. My sheep hear my voice, says the Lord; and I know them, and they follow me.

R. Alleluia.

October 31st : First reading I would willingly be condemned if it could help my brothersA reading from the letter of St.Paul to the Romans 9: 1-5

October 31st :  First reading  

I would willingly be condemned if it could help my brothers

A reading from the letter of St.Paul to the Romans 9: 1-5

Brethren: I am speaking the truth in Christ—I am not lying; my conscience bears me witness in the Holy Spirit— that I have great sorrow and unceasing anguish in my heart. For I could wish that I myself were accursed and cut off from Christ for the sake of my brothers, my kinsmen according to the flesh. They are Israelites, and to them belong the adoption, the glory, the covenants, the giving of the law, the worship, and the promises. To them belong the patriarchs, and from their race, according to the flesh, is the Christ, who is God over all, blessed for ever. Amen.

The word of the Lord.

Wednesday, October 29, 2025

அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம் இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

 அக்டோபர் 30 :  நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35



அக்காலத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, ``இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்'' என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியது: ``இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். `ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.''

ஆண்டவரின் அருள்வாக்கு.